சென்னை,: 'அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள, 29 திட்டங்கள் பா.ம.க., அறிக்கையில் இருந்து காப்பி அடிக்கப்பட்டவை' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில், 1.39 கோடி இளைஞர்கள், வேலையில்லாமல் தவிக்கின்றனர். 2015ம் ஆண்டின் நிலவரப்படி, மின் இணைப்பு பெற்ற வீடுகளின் எண்ணிக்கை, 1.88 கோடி. இன்றைய நிலவரப்படி, இது, இரண்டு கோடியை தாண்டியிருக்கும். அதன்படி, இரண்டு மாதங்களுக்கு, 200 கோடி யூனிட் வீதம் ஆண்டுக்கு, 1,200 கோடி யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்க வேண்டியிருக்கும். கடந்த ஆட்சியில், இரு கட்டங்களில், 15,000 கோடி ரூபாய்க்கு மின் கட்டணத்தை உயர்த்திய ஜெயலலிதா, இப்போது, கூடுதலாக ஏற்படும் இழப்பை எப்படி
சமாளிப்பார்? அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை யில், மொத்தம், 29 திட்டங்கள், பா.ம.க., தேர்தல் அறிக்கையிலிருந்து காப்பியடிக்கப்பட்டவை. தோல்வி பயம் காரணமாகவே, இலவச அறிவிப்புகளையும், வெற்றுத் திட்டங்களையும் ஜெயலலிதா அறிவித்திருக்கிறார். இவற்றையெல்லாம், தமிழக மக்கள் நம்பி ஏமாந்த காலம் முடிந்து விட்டது.
இவ்வாறு ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.