சென்னை:தி.மு.க., தலைவர் கருணாநிதி, நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னையில், மணலி மற்றும் மதுரவாயலில், 'டாஸ்மாக்'கை மூடக்கோரி போராட்டம் நடத்திய பெண்கள், சிறுவர்கள் மீது, காவல் துறையினர் கொலை வெறித் தாக்குதல்
நடத்தியுள்ளனர். போராட்டம் நடத்திய பெண்களை, காவல் துறையினர் தரதரவென்று இழுத்துச் செல்வதையும், பூட்ஸ்
கால்களால் எட்டி உதைப்பதையும், ரத்தம் சொட்டச் சொட்ட பெண்கள் தாக்கப்படுவதையும் கண்ட யாரும், இந்த ஆட்சியினரை கண்டிக்காமல் இருக்க முடியாது. இந்த வன்முறை சம்பவத்தில், 30க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து
உள்ளனர்; 10 பெண்களின் மண்டை உடைந்துள்ளது. மதுவிலக்கு கொள்கைக்காக போராடு பவர்களை, கடுமையாக தாக்கிய நிலையில், ஜெய
லலிதா தேர்தல் அறிக்கையில், மதுவிலக்கை படிப்படியாக நடைமுறைப்படுத்துவேன் என அறிவித்திருப்பது, மக்களை ஏமாற்றும் மற்றும் ஒரு கபட நாடகம் என்பது, திட்ட
வட்டமாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது. டாஸ்மாக்கை மூடக்கோரி, இரண்டு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை, கண்மூடித்தனமாக தாக்கிய காவல் துறையினரையும், காவல் துறைக்கு பொறுப்பேற்றுள்ள முதல்வர் ஜெயலலிதாவையும், வன்மையாக
கண்டிப்பதோடு, காவல் துறையினர் அராஜகத்தை, இனியாவது நிறுத்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.