'வெறும் நகல்'

Added : மே 07, 2016 | கருத்துகள் (3)
Advertisement
துாத்துக்குடி: கன்னியாகுமரி மாவட்ட பிரசாரத்திற்காக, துாத்துக்குடி விமான நிலையம் வந்த, தி.மு.க., மகளிரணி செயலர் கனிமொழி அளித்த பேட்டி: தி.மு.க., தேர்தல் அறிக்கையின் நகலை தான், அ.தி.மு.க., காப்பி அடித்து வெளியிட்டு உள்ளது. இதில் புதுமை என்றால், 50 சதவீத மானியத்தில், பெண்களுக்கு, 'ஸ்கூட்டி' என, அறிவிக்கப்பட்டு உள்ளது. இத்திட்டம் எப்படி சாத்தியம் என்பது தெரியவில்லை. ஆண்டுக்கு,
 'வெறும் நகல்'


துாத்துக்குடி: கன்னியாகுமரி மாவட்ட பிரசாரத்திற்காக, துாத்துக்குடி விமான நிலையம் வந்த, தி.மு.க., மகளிரணி செயலர் கனிமொழி அளித்த பேட்டி:
தி.மு.க., தேர்தல் அறிக்கையின் நகலை தான், அ.தி.மு.க., காப்பி அடித்து வெளியிட்டு உள்ளது. இதில் புதுமை என்றால், 50 சதவீத மானியத்தில், பெண்களுக்கு, 'ஸ்கூட்டி' என, அறிவிக்கப்பட்டு உள்ளது. இத்திட்டம் எப்படி சாத்தியம் என்பது தெரியவில்லை.
ஆண்டுக்கு, 50 ஆயிரம் கோடி ரூபாய் சுமையை அரசுக்கு ஏற்படுத்தும். ஏற்கனவே, நான்கு லட்சம் கோடி ரூபாய் கடன் சுமையை ஏற்றி வைத்துள்ளனர்.
கர்ப்பிணிகளுக்கு, ஒன்பது மாத விடுப்பு, விவசாயிகளின் நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலை போன்ற அறிவிப்புகளை, ஆட்சியில் இருந்தபோது சுலபமாக நிறைவேற்றியிருக்க முடியும்.
தி.மு.க., அறிவித்துள்ளதால், அ.தி.மு.க.,வும் அறிவித்துள்ளது. கருத்துக் கணிப்புகள் தி.மு.க.,வுக்கு சாதகமாக வந்தாலும், பாதகமாக வந்தாலும், அதை கருத்தில் கொள்வதில்லை.
பிரதமர் மோடியின் பிரசாரம், தமிழகத்தில் மாற்றம் ஏற்படுத்துமா என்பது, அவரது பிரசாரத்திற்கு பின்தான் தெரியவரும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.----

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamil Selvan - Chennai,இந்தியா
07-மே-201607:50:41 IST Report Abuse
Tamil Selvan நீங்களே 50 சதவிகித தேர்தல் அறிக்கையை பாமக-விடமும், 50 சதவிகித தேர்தல் அறிக்கையை நாம் தமிழர் கட்சியிடமும் நகலெடுத்து விட்டு, உங்களை பார்த்து அதிமுக நகலெடுத்து விட்டது என்று குற்றம் குறை சொல்லுவது என்பது என்ன?????.... பிச்சை எடுத்தாராம் பெருமாளு, அதை பிடுங்கி திண்ணாராம் அனுமாரு???... என்ற கதையாக அல்லவா இருக்கிறது உங்களின் கதை????....
Rate this:
Cancel
SEETHARAMAN - chennai,இந்தியா
07-மே-201607:21:29 IST Report Abuse
SEETHARAMAN திமுக என்றதோர் கட்சி மக்களிடம் செல்வாக்கை இழந்தத்திற்கான பல முக்கிய காரணிகளில் ஒன்று கனிமொழி. இரண்டாம் கட்ட தலைவர்களின் விருப்பத்திற்கெதிராக இவர் தன்னைப் பிரச்சாரத்தில் முன்னிலைப்படுத்திக் கொள்கிறார். அடிப்படைத் தொண்டன் சொல்லவும் முடியாமல் தள்ளவும் முடியாமல் தவிக்கிறான். திமுகவின் தவறுகளின் அடையாளங்களில் பளிச்சென்று தெரிவது கனிமொழி. இவர் பிரச்சாரத்திற்குத் தேவையா ?
Rate this:
Cancel
Baskar - Paris,பிரான்ஸ்
07-மே-201603:32:26 IST Report Abuse
Baskar பிரதமர் பிரச்சாரம் முடிந்து 3 மணி நேரமாகி விட்டது கனி.அவர் பேசிய பேச்சை நீ கேட்கவில்லையா.அதில் உங்களையும் சோனியாவையும் நன்றாக தாக்கி பேசினார்.நீ செய்த ஊழல் ராசாவுடன் சேர்ந்து கொள்ளை அடித்ததை பற்றி தான் அதிகம் பேசினார்.உன் அப்பன் அண்ணன் உன் நண்பன் சோனியா எல்லோரும் சேர்ந்து அடித்த கொள்ளையை பற்றி விரிவாக பேசினார்.இந்த லட்சனத்தில் நீ ஜெயாவை பற்றி பேசுகிறாய்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X