தஞ்சாவூர்,: ''எனக்கு ஜெயலலிதா எதிரி அல்ல; அ.தி.மு.க., தான் எதிரி,'' என, சமூக ஆர்வலர் 'டிராபிக்' ராமசாமி தெரிவித்தார்.மக்கள் பாதுகாப்புக் கழக தலைவரான அவர் அளித்த பேட்டி:ம.பா.க., சார்பில், நான் சென்னை, மயிலாப்பூரில் போட்டியிடுகிறேன். ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகர் தொகுதியில், புவனேஸ்வரி; விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் போட்டியிடும் காட்டுமன்னார்கோவிலில், ரவிச்சந்திரன்; கும்பகோணத்தில், பாத்திமா; பாபநாசத்தில், வேம்பு என, மொத்தம், ஐந்து பேர் போட்டியிடுகின்றனர். மற்ற தொகுதிகளில் வாக்காளர்கள், நேர்மையான, நல்ல வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டும்.
அப்படி நல்ல வேட்பாளர்களே இல்லை என நினைத்தால், 'நோட்டா'வுக்கு ஓட்டு போட வேண்டும். எனக்கு ஜெயலலிதா எதிரி அல்ல; அ.தி.மு.க.,
தான் எதிரி. இந்த தேர்தலில் ஊழல், லஞ்சம் மலிந்துள்ள அ.தி.மு.க., அரசை அகற்ற வேண்டும் என்பது தான், என் லட்சியம். கரூர் அன்புநாதன் வழக்கை, சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருக்கிறேன்.இவ்வாறு 'டிராபிக்' ராமசாமி
தெரிவித்தார்.