அ.தி.மு.க., தான் எதிரி ஜெ., அல்ல: டிராபிக் ராமசாமி - Jayalalitha | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., தான் எதிரி ஜெ., அல்ல: 'டிராபிக்' ராமசாமி

Added : மே 07, 2016 | கருத்துகள் (3)
Share
தஞ்சாவூர்,: ''எனக்கு ஜெயலலிதா எதிரி அல்ல; அ.தி.மு.க., தான் எதிரி,'' என, சமூக ஆர்வலர் 'டிராபிக்' ராமசாமி தெரிவித்தார்.மக்கள் பாதுகாப்புக் கழக தலைவரான அவர் அளித்த பேட்டி:ம.பா.க., சார்பில், நான் சென்னை, மயிலாப்பூரில் போட்டியிடுகிறேன். ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகர் தொகுதியில், புவனேஸ்வரி; விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் போட்டியிடும்
 அ.தி.மு.க., தான் எதிரி ஜெ., அல்ல: 'டிராபிக்' ராமசாமி



தஞ்சாவூர்,: ''எனக்கு ஜெயலலிதா எதிரி அல்ல; அ.தி.மு.க., தான் எதிரி,'' என, சமூக ஆர்வலர் 'டிராபிக்' ராமசாமி தெரிவித்தார்.மக்கள் பாதுகாப்புக் கழக தலைவரான அவர் அளித்த பேட்டி:ம.பா.க., சார்பில், நான் சென்னை, மயிலாப்பூரில் போட்டியிடுகிறேன். ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகர் தொகுதியில், புவனேஸ்வரி; விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் போட்டியிடும் காட்டுமன்னார்கோவிலில், ரவிச்சந்திரன்; கும்பகோணத்தில், பாத்திமா; பாபநாசத்தில், வேம்பு என, மொத்தம், ஐந்து பேர் போட்டியிடுகின்றனர். மற்ற தொகுதிகளில் வாக்காளர்கள், நேர்மையான, நல்ல வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டும்.
அப்படி நல்ல வேட்பாளர்களே இல்லை என நினைத்தால், 'நோட்டா'வுக்கு ஓட்டு போட வேண்டும். எனக்கு ஜெயலலிதா எதிரி அல்ல; அ.தி.மு.க.,
தான் எதிரி. இந்த தேர்தலில் ஊழல், லஞ்சம் மலிந்துள்ள அ.தி.மு.க., அரசை அகற்ற வேண்டும் என்பது தான், என் லட்சியம். கரூர் அன்புநாதன் வழக்கை, சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருக்கிறேன்.இவ்வாறு 'டிராபிக்' ராமசாமி
தெரிவித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X