அரசியல் செய்தி

தமிழ்நாடு

கருணாநிதி 93 வயது இளைஞர்: ஸ்டாலின்

Added : மே 07, 2016
Advertisement
கருணாநிதி 93 வயது இளைஞர்: ஸ்டாலின்

சென்னை : திமுக பொருளாளர் ஸ்டாலின் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், தமிழக தேர்தலில் போட்டி என்பது திமுக-அதிமுக இடையே தான். 3வது அணி என எதுவும் இல்லை. கருணாநிதியை தவிர திமுக.,வில் முதல்வர் வேட்பாளர் என யாரும் கிடையாது. இளைஞர் ஒருவர் முதல்வராக வேண்டும் என மக்கள் விரும்புவதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் கருணாநிதி 93 வயது இளைஞர். நாங்கள் ஆட்சியில் இருந்த போது எம்.ஜி.ஆர்., கொண்டு வந்த எந்த திட்டத்தையும் முடக்கவில்லை. அதே போல் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அம்மா உணவகம் போன்ற திட்டங்கள் முடக்கப்படாது. அதே சமயம் அது சரியாக செயல்முறைபடுத்தாதலால், தற்போது இருப்பதை விட மேம்படுத்தப்படும். திமுக ஆட்சி அமைப்பதற்கு யாருடைய ஆதரவும் தேவையில்லை. சமீபத்தில் சென்னையில் ஏற்பட்டது இயற்கை பேரிடர் இல்லை. செயற்கை பேரிடர். செம்பரபாக்கம் ஏரியை முன்னறிப்பின்றி அதிமுக அரசு திறந்து விட்டதே இதற்கு காரணம் என தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X