பதிவு செய்த நாள் :
பஞ்சம்
உ.பி. மாநிலம் புந்தேல்கண்ட் பகுதியில் உணவுக்கு... ?
2 ஆண்டுகளாக பொய்த்த பருவமழை

மஹோபா: நாட்டின் பல பகுதிகளில் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ள நிலையில், உ.பி., மாநிலம், புந்தேல்கண்ட் பகுதியில், வறட்சி பாதிப்பு மிக மோசமாகியுள்ளது. 'பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்க வேண்டும்' என அங்கு ஆய்வு செய்துள்ள தொண்டு நிறுவனங்கள் வலியுறுத்தியுள்ளன.

உ.பி. மாநிலம் புந்தேல்கண்ட் பகுதியில் உணவுக்கு... பஞ்சம் ? 2 ஆண்டுகளாக பொய்த்த பருவமழை

கடந்த இரண்டு ஆண்டுகளாக பருவமழை பொய்த்ததாலும், 'எல் நினோ' எனப்படும் பருவநிலை மாறுபாட்டின் தாக்கத்தாலும், நாட்டின் பல்வேறு மாநிலங்களில், தண்ணீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
மஹாராஷ்டிரா, உத்தரபிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில், பல பகுதிகள் வறட்சியால் பாதிக்கப் பட்டவையாக, ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன. குடிநீருக்காக, நகர்ப்புறங்களில், மக்கள் நீண்ட வரிசையில் நிற்பதும், கிராமங்களில், மக்கள் கால்நடைகளை விற்று வெளியேறி வருவதும் தொடர்கதையாகி வருகிறது.
தீவனம் இன்றி
இதில், இந்தியாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள புந்தேல்கண்ட் பகுதி, மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளும், மத்திய பிரதேசத்தின் ஒரு சில இடங்களும், புந்தேல்கண்டின் கீழ் வருகின்றன.
மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள, உத்தரபிரதேச மாநிலம், மஹோபா, மாவட்டத்தில், இரண்டு மாதங்களில், நுாற்றுக்கணக்கான கால்நடைகள், தீவனம் இன்றி மடிந்து விட்டன.
தீவனம் இல்லாத நிலையில், பலர் கால்நடைகளை திரிய விட்டுள்ளனர். உணவுக்காக அல்லாடி வரும் கால்நடைகள், அங்குமிங்கும் அலைந்து, பரிதாபமாக உயிரிழந்து வருகின்றன.
தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக, விவசாயம் பொய்த்து விட்டதால், மக்கள் வறுமையில் வாடி வருகின்றனர். கடும் வறட்சி நிலவி வருவதால், குடிக்க குடிநீர் கூட இல்லாத நிலையில், ஆயிரக்கணக்கானோர் கிராமங்களை விட்டு வெளியேறி விட்டனர்.
கையேந்தும் நிலைக்கு...
மக்களுக்கு உணவு தானியங்கள் வழங்கும் பணியை, சில தொண்டு நிறுவனங்கள் செய்து வருகின்றன. வறட்சியின் பாதிப்பு குறித்து, இப்பகுதியில் ஆய்வு நடத்தியுள்ள, 'அருணோதயா' தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த அபிஷேக் மிஸ்ரா
கூறியதாவது:மஹோபா மாவட்டத்தில் மட்டும், 3,000 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. இங்கு, கால்நடைகளுக்கு

தீவனம் வழங்க, 39 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக, மாநில அரசு கூறுகிறது; ஆனால், ஒரு மையம் கூட செயல்படவில்லை.
டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் சப்ளை செய்யப்படுவதாக மாநில அரசு கூறுகிறது; அதுவும் நடைபெறவில்லை. தொண்டு அமைப்புகளின் உதவியுடன் சில இடங்களில் தண்ணீர் வழங்கப்படுகிறது.
தண்ணீருக்காக பல கிலோ மீட்டர் தொலைவு நடந்து செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு மக்கள்
தள்ளப்பட்டுள்ளனர். இப்போது, மக்கள், உணவுக்காக, கையேந்தும் நிலைக்கு வந்து விட்டனர். உணவு தேவையை சமாளிக்க, பலர் கடன் வாங்கி வருகின்றனர்.
வறட்சி என்று கூறி மாநில அரசு இனிமேலும், சமாளிக்க முடியாது. இங்கு நிலவுவது, உண்மையில் பஞ்சம் தான். இதனை, உத்தர பிரதேச முதல்வர், அகிலேஷ் யாதவ் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். மத்திய அரசிடம், அதற்கான நிதியை பெற்று நிவாரணப் பணிகளை, போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

ஆட்டிப்படைக்கும் வறட்சி


● வட மாநிலங்களை தொடர்ந்து, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களிலும் குடிநீர் தட்டுப்பாடு மிக மோசமாக உள்ளது
● கேரளாவிலும் கடுமையான வெயிலின் தாக்கத்தால், இந்த ஆண்டு, வறட்சி பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்க வேண்டும் என, அங்குள்ள அரசியல் கட்சிகள் வலியுறுத்துகின்றன
● உத்தர பிரதேசத்தில், வறட்சி பாதிப்பால், கடந்த மாதம், பல இடங்களில் பள்ளிகள் செயல்படும் நேரம் குறைக்கப்பட்டது
● மத்திய பிரதேசத்தில், சில இடங்களில், நிலத்தடி நீர்மட்டம், பல நுாறடி ஆழத்திற்கு சென்று விட்டது
● கிணறுகள் வற்றிவிட்ட நிலையில், உள்ளே இறங்கி மக்கள், தண்ணீர் எடுக்கும் அவலம் நிலவி வருகிறது
● கர்நாடகாவில், காவிரி பாயும் பாசன பகுதிகளில் கூட தண்ணீர் இன்றி மக்கள் தவிக்கின்றனர்
● வெயில் குறைந்து காணப்படும் இமாச்சல பிரதேசத்தில் உள்ள சிம்லாவில், பத்து நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.

'பூசி மெழுகும்' உ.பி.,அரசு


உத்தர பிரதேச மாநிலத்தில் பல பகுதிகளில் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. ஆனால், அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்,
இந்த பிரச்னை, அரசியலாக்கப்படுகிறது. ரயில்கள் மூலம் தண்ணீர் சப்ளை செய்ய மத்திய அரசு முன் வந்தது. ஆனால், அதனை ஏற்றுக்கொள்ள, உ.பி., அரசு தயாரில்லை. வறட்சி நிவாரண நிதி மட்டும் கூடுதலாக ஒதுக்கீடு செய்யுமாறு கோரி வருகிறது.

'காணாமல் போன' நிலத்தடி நீர்


புந்தேல்கண்ட் பகுதியில், வறட்சியின் பாதிப்பு குறித்து, 'பரமார்த்' என்ற தொண்டு நிறுவனம் ஒன்று ஆய்வு நடத்தியுள்ளது. இதில், பல

Advertisement

அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. புந்தேல்கண்ட் பகுதியில் இருந்த, 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குளங்களில், தற்போது, 1,300 குளங்கள் மட்டுமே இருக்கின்றன.
மற்றவை பராமரிப்பின்றி கைவிடப்பட்டு விட்டன. இதிலும், துார்வாரி நீர் நிரப்புவதற்கான எந்த பணிகளும், கடந்த, 25 ஆண்டுகளாகவே நடைபெறவில்லை. இதனால், நிலத்தடி நீர்மட்டம், அதல
பாதாளத்திற்கு சென்று விட்டது.


செயல்படாத அந்த்யோதயா திட்டம்



புந்தேல்கண்ட்டில் மோசமாக வறட்சி பாதிக்கப்பட்டுள்ள மஹோபா மாவட்டத்தில், பல இடங்களில், ஏழை குடும்பங்களுக்கு, மாதம், 35 கிலோ உணவு தானியங்கள் வழங்கும், அந்த்யோதயா திட்டம் செயல்படுத்தப்படவில்லை. ஒரு சில இடங்களில் பெயரளவுக்கு மட்டும் செயல்படுகிறது. இதனால், அங்குள்ள விவசாய குடும்பங்கள், உணவுக்காக, 'கையேந்தும்' நிலைக்கு தள்ளப்பட்டு விட்டன.


லாத்துாரில் ரயில் மூலம் தண்ணீர்


மஹாராஷ்டிர மாநிலத்தில், லாத்துார் உள்ளிட்ட பகுதிகளில், கடுமையான வறட்சி நிலவி வருகிறது. தற்போது கோடையில், வறட்சியின் பாதிப்பு அதிகரித்துள்ளது. குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். பக்கத்து கிராமங்களில், ராட்சத போர்வெல் மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு, லாரிகளில் வினியோகம் செய்யப்படுகிறது.
தண்ணீருக்காக மக்கள் கூட்டம் அலைமோதுவதால், பெரிய அளவில் மோதலும் நிகழ்ந்து வருகின்றன. சுற்றுவட்டார பகுதிகளிலும், தண்ணீர் வறண்டு விட்டதால், மற்ற பகுதிகளில் இருந்து, ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வந்து வினியோகிக்கப்படுகிறது.

Advertisement

வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Shanmugam - Manama  ( Posted via: Dinamalar Android App )
08-மே-201623:28:04 IST Report Abuse

Shanmugamஆள்பவர்களும் அரசு அதி்காரிகளும் பாதி்க்கப்பட்ட இடத்தி்ற்கு சென்று பாதி்க்கப்பட்ட மக்களுடன் செல்பி எடுத்துக்கொள்ளுங்கள். இந்த வறட்சியை வைத்து எவ்வளவு சம்பாதி்க்கலாம் என்று பாருங்கள். உங்களுக்கு புண்ணியம் சேரும்.

Rate this:
N.Purushothaman - Kuala Lumpur ,மலேஷியா
08-மே-201609:21:35 IST Report Abuse

 N.Purushothamanஅகிலேஷ் சற்று துரிதமாக செயல்படும் நேரமிது...

Rate this:
தங்கை ராஜா - tcmtnland,இந்தியா
08-மே-201609:07:57 IST Report Abuse

தங்கை ராஜாஎன்ன ஆட்டம் ஆடினாலும் பஞ்சம் என்று வந்து விட்டால்...........

Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X