பதிவு செய்த நாள் :
கேள்வி
பிரதமர் மோடிக்கு கெஜ்ரிவால்...
சோனியாவை கைது செய்யாதது ஏன் என்கிறார்

''ஊழல் செய்தவர்களை, சிறைக்கு அனுப்புவேன் எனக் கூறி, ஆட்சிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஹெலிகாப்டர் ஊழலில் சிக்கியுள்ள சோனியாவை கைது செய்வதற்கு தைரியம் உள்ளதா,'' என, டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரதமர் மோடி, டில்லி முதல்வர் கெஜ்ரிவால்,சோனியா, கைது செய்யாதது ஏன்

முந்தைய, காங்., தலைமையிலான, ஐ.மு., கூட்டணி ஆட்சிக் காலத்தில், வி.வி.ஐ.பி.,க்களுக்கு ஹெலிகாப்டர் வாங்கியதில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்., தலைவர் சோனியா ஆகியோருக்கு இதில் தொடர்புள்ளதாகவும், பா.ஜ., தலைவர்கள் கூறி வருகின்றனர்.

இதையடுத்து, இந்த விவகாரத்தில் ஆம் ஆத்மியும் குதித்துள்ளது.

டில்லி ஜந்தர் மந்தரில் நேற்று நடந்த பேரணியில், அம்மாநில முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால்
பேசியதாவது:
கடந்த லோக்சபா தேர்தல் பிரசாரத்தின்போது, 'ஊழல் செய்தவர்களை சிறைக்கு அனுப்பி, தண்டிப்பேன்' என, ஊர் ஊராகச் சென்று பேசினார் நரேந்திர மோடி. இவர் பிரதமராகி, இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், ஹெலிகாப்டர் ஊழல் குறித்து, உருப்படியான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.

இந்த ஊழல் தொடர்பாக இத்தாலி அரசு, விசாரணையையே நடத்தி முடித்து விட்டது. இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கிய குற்றவாளிகளை கண்டுபிடித்து, சிறையிலும் அடைத்து விட்டது. ஆனால், மத்திய அரசும், பிரதமரும், இதில் கவனம் செலுத்தவில்லை. இத்தாலி அரசின் அறிக்கையில், சோனியா, அவரது செயலர் அகமது படேல் ஆகியோரது பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இதற்கான ஆதாரங்கள் அனைத்தும் உறுதியாக இருந்தும், சோனியாவை, விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரவோ, அவரை கைது செய்யவோ,

நரேந்திர மோடிக்கு துணிச்சல் வரவில்லை.

'சோனியாவின் பெயரை எழுப்பியது நான் அல்ல; இத்தாலி தான்' என, மோடி சொல்வதும் வேடிக்கையாக உள்ளது. சோனியாவைப் பார்த்து, மோடிக்கு இவ்வளவு பயம் ஏன்? தைரியம் இருந்தால், சோனியாவை கைது செய்யுங்கள்; இரண்டு நாட்கள் காவலில் வைத்து விசாரித்து, பிற குற்றவாளிகளின் பெயர்களையும் கேட்டுப் பெறுங்கள்.

சோனியாவை கைது செய்ய முடியாத மோடி அரசு, கணவன், மனைவிக்கு இடையே நடந்த சண்டை தொடர்பாக, எங்கள் கட்சியைச் சேர்ந்த சோம்நாத் பாரதியை கைது செய்து,ஐந்து நாட்கள், சிறைக்குள் தள்ளுகிறது. மோடியின் தவறுகளும், ஊழல்களும், 10 ஆண்டுகள், மத்தியில் ஐ.மு., கூட்டணி ஆட்சியிலிருந்த காங்கிரசுக்கும் தெரியும். அதனால் தான், மோடி பயப்படுகிறார். சோனியாவுக்கு நெருக்கடி கொடுத்தால், தம்முடைய ரகசியங்கள் எல்லாம் வெளியில் வரும் என மோடிக்கு தெரியும்.

அதில் முக்கியமானது, கல்விச்சான்றிதழ் மோசடி. இந்தியாவின் பிரதமர் பதவியை அடைய, பெரிய கல்வித் தகுதி வேண்டுமென்று நான் கூறவில்லை. வெறும், பிளஸ் 2 வகுப்பை மட்டும் கூட நரேந்திர மோடி படித்திருந்தால் போதும். அதை, அவர் வெளிப்படையாக நாட்டு மக்களிடம் ஒப்புக் கொண்டால், அவரது மதிப்பு உயரும். ஆனால், அவ்வாறு செய்யாமல், தன் கல்வித் தகுதி குறித்து, பொய் கூறுகிறார். இந்த பிரச்னையில், சோனியாவும், ராகுலும் மவுனம் காக்கின்றனர். இரு தரப்புக்குமிடையில் ஏற்பட்டுள்ள, ரகசிய புரிந்துணர்வு உடன்பாடே, இதற்கு காரணம். இவ்வாறு அவர் பேசினார்.

காங்கிரஸ்., சவால்:

காங்., மூத்த தலைவர்களில் ஒருவரான, மனீஷ் திவாரி, டில்லியில் நேற்று, நிருபர்களிடம் கூறியதாவது:ஆம் ஆத்மி தலைவரின் குற்றச்சாட்டுகள், முன்னுக்கு பின் முரணாக உள்ளன. இவ்விஷயத்தில், அக்கட்சி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

கடந்த காலத்தில், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த எத்தனை தலைவர்கள், தவறு செய்ததற்காக நீக்கப்பட்டுள்ளனர் என்ற, பட்டியலை அக்கட்சித் தலைவரும், டில்லிமுதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட வேண்டும். ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.,க்களில், எத்தனை பேருக்கு எதிராக கிரிமினல் வழக்குகள் உள்ளன;

அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் எவை? போன்ற தகவல்களை அவர் அறிவிக்க வேண்டும். அரவிந்த் கெஜ்ரிவால், தன் கட்சியில் உள்ள குறைகளை, முதலில் சரி செய்வது

Advertisement

புத்திசாலித்தனமாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

பிரதமர் மவுனத்தின் பின்னணி என்ன?:

ஹெலிகாப்டர் ஊழல் விவகாரத்தில், சோனியாவை கைது செய்யும்படி, பிரதமர் மோடிக்கு, டில்லி முதல்வர் கெஜ்ரிவால், கேள்வி எழுப்பினாலும், பா.ஜ., தலைவர்கள், அதை பொருட்படுத்தவில்லை. பிரதமர் மோடியும், இதுகுறித்து எந்த கருத்தும் தெரிவிக்காமல், மவுனம் காத்து வருகிறார்.

இதன் பின்னணி குறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:சமீபத்தில், டில்லி மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சில அலுவலகங்களில், சி.பி.ஐ., அதிகாரிகள் அதிரடிச் சோதனை நடத்தினர்; இது, கெஜ்ரிவாலுக்கு நாடு முழுவதும் நல்ல விளம்பரத்தை பெற்றுத் தந்ததே தவிர, அவருக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை மாணவர் சங்க தலைவர் கன்னையா குமார் மீது எடுக்கப்பட்ட சட்ட ரீதியான நடவடிக்கைகளால், அவர், நாடு முழுவதும் பிரபலமாகி விட்டார். கேரளா, மேற்கு வங்கம் போன்ற, இடதுசாரி கட்சிகளுக்கு செல்வாக்கு உள்ள மாநிலங்களில், தேர்தல் பிரசாரத்துக்காக, அவரை அழைக்கும் அளவுக்கு பிரபலமடைந்து விட்டார்.

இதுபோன்ற விஷயங்களால், தற்போது பிரதமர் மோடி, உஷாரடைந்துள்ளார். கெஜ்ரிவாலின் விமர்சனங்களுக்கு, தான் பதில் அளித்தால், அது, அவருக்கு மேலும் புகழை பெற்றுக் கொடுக்குமே தவிர, தங்களுக்கு எந்த வகை யிலும் சாதகமாக இருக்காது என, பிரதமர் கருதுகிறார். அதனால் தான், 'கெஜ்ரிவால் எது வேண்டுமானாலும் பேசிவிட்டு போகட்டும்' என, பிரதமர் மவுனமாக இருக்கிறார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

- நமது டில்லி நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
adalarasan - chennai,இந்தியா
08-மே-201623:07:16 IST Report Abuse

adalarasanஇவர் தன் வேலையை தவிர, மற்ற விசயங்களில் தான் ஈடுபாடு அதிகமாக இருக்கிறது? டெல்லி நிர்வாக கேடை முதலில் சரி செய்யவில்லை? வீணாக, மற்ற பெரிய கட்சிகளுக்குள் சண்டை மூட்டிவிட்டு, குளிர்காய, ஆசை படுகிறார்? ஏதோ பெரிய அகில இந்திய தலைவர் போல்?

Rate this:
jay - toronto,கனடா
08-மே-201618:38:32 IST Report Abuse

jayபோர்ஜரிவால் மாதிரி சர்வதிகாரம் படைத்தவர் மோடி இல்லை

Rate this:
Sanny - sydney,ஆஸ்திரேலியா
08-மே-201615:30:34 IST Report Abuse

Sanny குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு. அதேபோல் அரசியல் வாதியின் பேச்சு பதவிக்கு வந்தால் போச்சு.

Rate this:
மேலும் 16 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X