அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
நான்கு சுவர்களுக்குள் முடங்கிய ஜெ., அரசு:
மதுரையில் ராகுல் சாடல்

மதுரை, :''நான்கு சுவர்களுக்குள் முடங்கியிருக்கும் முதல்வர் ஜெயலலிதாவின் அரசு, தமிழகத்திற்கு தேவையில்லை. தமிழகத்தில் எல்லா மட்டங்களிலும் ஊழல் மலிந்துள்ளது,'' என, மதுரையில் நடந்த கூட்டத்தில் அகில இந்திய காங்., துணை தலைவர் ராகுல் சாடினார்.

நான்கு சுவர்களுக்குள் முடங்கிய ஜெ., அரசு: மதுரையில் ராகுல் சாடல்

அவர் பேசியதாவது:அரசியலில் இரு வகை தலைவர்கள் உள்ளனர். ஒரு வகை தலைவர்கள், கடலை நோக்கி செல்லும் ஆறுகளை போல மக்களை நோக்கி செல்லக் கூடியவர்கள்; மக்களுடன் கலந்துரையாடுவர். அவர்களிடம் இருந்து பிரச்னைகளை தெரிந்து கொள்வர்; மக்களிடம் செல்லும் போது பலவற்றை தலைவர்கள் தெரிந்து கொள்ள முடியும்.

மற்றொரு வகை தலைவர்கள், மக்களை பற்றி கவலைப்படாதவர்கள்; அவர்கள் மக்களை சந்திப்பதில்லை; தனித்தீவு போல இருப்பர்.

இந்த தலைவர்களை போல, 'நான் தான் மேலானவர்' என ஜெயலலிதா நினைக்கிறார்.

தமிழகம் வளர்ச்சி பெற்றதாக மாறியிருக்க வேண்டும். அதற்கு தலைவர்கள், மக்களிடம் நம்பிக்கை பெற்றவர்களாக இருந்திருக்க வேண்டும். எம்.ஜி.ஆர்., கருணாநிதி மக்களை நோக்கி செல்பவர்களாக இருந்தனர். எளிமையாகமக்களுடன் பழகினர்; அத்தகைய குணங்கள் ஸ்டாலினிடம் உள்ளன.

முதல்வர் ஜெ., யாரையும் சந்திப்பதில்லை. தன்னை விட யாரும் தகுதியானவர் இல்லை என
நினைக் கிறார். உலகில் ஒரே அறிவாளி தாம் மட்டுமே என நினைக்கிறார். ஜெ., கடந்த தேர்தலில் ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள மிக்சி, கிரைண்டர் தருவதாக கூறினார். அவற்றை கொடுத்து விட்டு, ஒவ்வொரு குடும்பத்தினரிடம் இருந்தும் மதுக்கடைகள் மூலம் ரூ.60 ஆயிரம் பறித்து கொண்டார்.

மிக்சி, கிரைண்டர் சரியாக செயல்படவில்லை. ஜெ., தனக்குள்ள அரசியல் ஆதிக்கத்தால், எதிர்கட்சிகளை நசுக்க பார்க்கிறார். நான்கு சுவர்களுக்குள் முடங்கிய ஜெ., அரசு தமிழகத்திற்குதேவையில்லை.சென்னை வெள்ளத்தின் போது, டில்லியில் இருந்து நான் வந்து ஆறுதல் கூறினேன். சென்னையில் இருந்த ஜெ., பாதிக்கப்பட்டவர்களை பார்க்கவில்லை.

லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்

Advertisement

பின்றி,வறுமையில் வாடுகின்றனர். தமிழகத்தில் எல்லா மட்டங்களிலும் ஊழல் மலிந்துள்ளது. ஆட்சியில் உள்ளவர்கள் லஞ்சம் கேட்பதால், தற்போது எந்த முதலீட்டாளர்களும், தொழில் நிறுவனத்தினரும் தமிழகத்திற்கு வருவதில்லை.

தமிழகம் ரூ.2 லட்சம் கோடி கடனில் உள்ளது. காங்., -தி.மு.க., கூட்டணி ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தை முதல் மாநிலமாக மாற்றுவோம். அரசுப்பணியில் காலியிடங்களை நிரப்புவோம். விவசாய கடன் ரத்து செய்யப்படும். 60 வயது விவசாயிகளுக்கு ரூ.2 ஆயிரம் ஓய்வூதியம் வழங்குவோம். 60 வயது முதியவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவோம். மின் உற்பத்தி அதிகரிக்கப்படும்.மற்ற மாநிலங்கள் வியந்து பாராட்டும் வகையில், முன்மாதிரி மாநிலமாக மாற்றி காட்டுவோம். இவ்வாறு பேசினார்.

Advertisement

வாசகர் கருத்து (60)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sundeli Siththar - North Carolina,யூ.எஸ்.ஏ
09-மே-201601:56:30 IST Report Abuse

Sundeli Siththarஇருப்பவர்களிலேயே ஜெயலலிதா அவர்களின் திறமை அபாரமானது தான்...

Rate this:
Sundeli Siththar - North Carolina,யூ.எஸ்.ஏ
09-மே-201601:56:03 IST Report Abuse

Sundeli Siththarஊழலை பற்றி யார் பேசுகிறார்கள் ... போங்கையா.. போங்க...

Rate this:
Balaji - Khaithan,குவைத்
08-மே-201618:19:50 IST Report Abuse

Balajiஎனக்கு ஒன்னு புரியவே மாட்டேங்குது.... தமிழக கட்சிகளை தவிர தேசிய கட்சிகளெல்லாம் மதுவிலக்கு பற்றி எந்த தைரியத்தில் பேசுகிறது என்று தெரியவே இல்லை.... அவர்கள் ஆளும் மாநிலங்களில் ஏன் இப்படி பேசுவதில்லை என்று தெரியவில்லை.... நம்மை யாரும் எந்த கேள்வியும் கேட்க மாட்டார்கள் என்ற தைரியம் தான் போல..... உடனே தேசிய கட்சி ஆதரவாளர்கள் அங்கெல்லாம் அரசு மது விற்கவில்லை என்று வக்காலத்து வாங்க வந்துவிடுவார்கள்.... இவர்களுக்கும் ஒரு கேள்வியை முன்னமே வைத்துவிடுகிறேன், உங்களுக்கு மதுவே இருக்க கூடாதா???? இல்லை அரசு மதுவை விற்க கூடாதா????? அப்படி மதுவே இருக்க கூடாது என்றால் ஏன் தேசிய கட்சிகள் ஆளும் மாநில அரசுகள் இதை பற்றி மெளனமாக இருகிறார்கள்????? தெளிவுபடுத்துங்கள்........

Rate this:
மேலும் 57 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X