அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
கட்டப்பஞ்சாயத்து, ரவுடியிசம் இருக்காது:
மதுரையில் ஸ்டாலின் உறுதி

மதுரை,:''தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் கட்டப்பஞ்சாயத்து, ரவுடியிசம் இருக்காது,'' என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் குறிப்பிட்டார்.

 கட்டப்பஞ்சாயத்து, ரவுடியிசம் இருக்காது: மதுரையில் ஸ்டாலின் உறுதி

காங்.,- தி.மு.க., கூட்டணி சார்பில் மதுரை மேனந்தலில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் அவர் பேசியதாவது:நானும், ராகுலும் ஒரே சிந்தனை உள்ளவர்கள். என்னை பொறுத்தவரை தலை நிமிர்ந்து நடக்க வேண்டும். அவரை பொறுத்தவரை சகோதர மனப்பான்மை நிலவ நினைப்பவர். காங்.,- தி.மு.க., இணைந்து மத்தியிலும், மாநிலத்திலும் பல திட்டங்களை, சாதனைகளை நிகழ்த்தின.

ஜனாதிபதி தேர்வு, பிரதமரை உருவாக்கியது, பொருளாதாரத்தை தலைநிமிர செய்தது, நல்லாட்சி, மதசார்பற்ற ஆட்சி உருவாக்கிய

பெருமை இரு கட்சிகளுக்கு உண்டு.கடந்த 2005 ஜூலை 2ல் மதுரையில், சேதுசமுத்திர திட்டத்திற்கு துவக்க விழா நடந்தது. சோனியா, அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங், கருணாநிதி பங்கேற்றனர். ரூ.2427 கோடியில் தமிழகம் பொருளாதாரம் வளர்ச்சி பெறும் நோக்கில்இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது.

நுாற்றாண்டு கனவு திட்டமான இதற்கு இசைவு தந்தவர், பிரதமராக இருந்த வாஜ்பாய். பின் வந்த ஐ.மு.கூ., ஆட்சியில் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தை பொறுத்தவரை வாஜ்பாய், சோனியா அரசியல் நோக்கில் அணுகவில்லை.பொருளாதார வளர்ச்சியை மட்டுமே கருத்தில் கொண்டனர். 'இந்த தொலைநோக்கு திட்டத்தை வேண்டாம்' என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர் ஜெயலலிதா.

பொருளாதாரம், முன்னேற்றத்தை தருவதை தடுக்கும் வகையில் சர்வாதிகார போக்குடன் செயல்படுவர் ஜெ.,மன்மோகன்சிங் பிரதமராக இருந்த போது, தமிழகமுதல்வர் மற்றும் அமைச்சர்களை தொடர்பு கொள்ளும் வாய்ப்பு இருந்தது. தற்போது பிரதமர், மத்திய அமைச்சர் களால் தமிழக முதல்வரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவரது அமைச்சர்களே அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. புதிய தொழிற்சாலைகள் அனுமதி பெற முடியவில்லை.


Advertisement

தமிழகத்திற்கு வந்த நோக்கியா உட்பட பல தொழிற்சாலைகள் வேறு மாநிலங்களுக்கு சென்றன. அ.தி.மு.க., வின் 37 எம்.பி.,க்கள் லோக்சபாவில் தமிழக பிரச்னைகளை பேசியதுண்டா.

ஒட்டுமொத்த வளர்ச்சியில், தமிழகம் 20வது இடத்தில் உள்ளது. ஊழலில் இந்தியாவில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் கரப்ஷன் (ஊழல்), கமிஷன், கலெக் ஷன் இல்லாத ஆட்சியாக இருக்கும். போலீசார் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்படுவர். கட்டப்பஞ்சாயத்து, ரவுடியிசம் இருக்காது.இவ்வாறு பேசினார்.

Advertisement

வாசகர் கருத்து (113)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohan V - Thirunagar, Madurai ,இந்தியா
09-மே-201611:26:18 IST Report Abuse

Mohan  Vநம்ம கட்சி இருக்கும் வரை மதுரையில் கட்ட பஞ்சயத்து இருக்கும் உன்னால் ஒன்னும் பண்ணமுடியாது .

Rate this:
Ramasami Venkatesan - Chennai - now in Brisbane - Aus,இந்தியா
09-மே-201604:40:21 IST Report Abuse

Ramasami Venkatesanகட்ட பஞ்சாயத்து, ரௌடியிசம் எல்லாம் எந்த(யார்) ஆட்சியில் பிறந்தது என்று யாராவது சொல்லமுடியுமா. தேவையே இல்லை எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். அடிமட்ட மக்களுக்கு மிக நன்றாக தெரியும்.

Rate this:
m.viswanathan - chennai,இந்தியா
08-மே-201622:28:11 IST Report Abuse

m.viswanathanகட்ட பஞ்சாயத்து இருக்காது . ஆனாலும் ஆட்சிக்கு வந்தால் மக்களை ஏதேனும் வகையில் மிரட்டுவோம்

Rate this:
மேலும் 110 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X