அரசியல் செய்தி

தமிழ்நாடு

அதிகமான பெண்கள் களமிறங்கிய முதல் தேர்தல்

Added : மே 08, 2016
Share
Advertisement
இதுவரை நடந்த தேர்தல்களை விட, இந்த தேர்தலில், அதிக பெண் வேட்பாளர்கள் களம் இறங்கி உள்ளனர்.தமிழக சட்டசபை தேர்தல், 16ம் தேதி நடக்க உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல், 22ம் தேதி துவங்கி, 29ம் தேதி நிறைவடைந்தது. மாநிலம் முழுவதும், நான்கு திருநங்கையர், 795 பெண்கள், 6,352 ஆண்கள் என, மொத்தம் 7,151 பேர் மனு தாக்கல் செய்தனர்.வேட்புமனு பரிசீலனையின் போது, 3,017 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 351 பேர்,
 அதிகமான பெண்கள்  களமிறங்கிய முதல் தேர்தல்

இதுவரை நடந்த தேர்தல்களை விட, இந்த தேர்தலில், அதிக பெண் வேட்பாளர்கள் களம் இறங்கி உள்ளனர்.
தமிழக சட்டசபை தேர்தல், 16ம் தேதி நடக்க உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல், 22ம் தேதி துவங்கி, 29ம் தேதி நிறைவடைந்தது. மாநிலம் முழுவதும், நான்கு திருநங்கையர், 795 பெண்கள், 6,352 ஆண்கள் என, மொத்தம் 7,151 பேர் மனு தாக்கல் செய்தனர்.
வேட்புமனு பரிசீலனையின் போது, 3,017 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 351 பேர், வேட்புமனுவை வாபஸ் பெற்றனர். தற்போது களத்தில், இரண்டு திருநங்கையர், 320 பெண்கள், 3,461 ஆண்கள் என மொத்தம், 3,783 பேர் களத்தில் உள்ளனர்.
தமிழக சட்டசபைக்கு, 1957ம் ஆண்டில் இருந்து நடந்த தேர்தல்களில், அதிகபட்சமாக, 156 பெண் வேட்பாளர்கள், 1996ம் ஆண்டு தேர்தலில் போட்டி யிட்டனர். இம்முறை, 320 பெண் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
குறைந்தபட்சமாக, 1967 தேர்தலில், 11 பெண் வேட்பாளர்கள் மட்டும் போட்டியிட்டனர். - நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X