அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தே.மு.தி.க., கூட்டணி ஆட்சி
வெளிப்படையாக செயல்படும்: விஜயகாந்த்

செங்கல்பட்டு: தே.மு.தி.க., - மக்கள் நலக்கூட்டணி அரசு வெளியப்படையாக செயல்படும் என, விஜயகாந்த், செங்கல்பட்டில், பேசினார்.

 தே.மு.தி.க.,  கூட்டணி ஆட்சி வெளிப்படையாக செயல்படும்: விஜயகாந்த்

தே.மு.தி.க., - மக்கள் நலக்கூட்டணி சார்பில் போட்டியிடும், செங்கல்பட்டு வேட்பாளர் முருகேசன் எம்.எல்.ஏ., உத்திரமேரூர் தொகுதி வேட்பாளர் ராஜேந்திரன், காஞ்சிபுரம் வேட்பாளர் ஏகாம்பரம், மதுராந்தகம் வேட்பாளர் தென்னரசு, தாம்பரம் வேட்பார் செழியன், ஸ்ரீபெரும்புதூர் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் வீரகுமார், பல்லாவரம் ம.தி.மு.க., வேட்பாளர் வீரலட்சுமி ஆகியோர் அறிமுக கூட்டம் நேற்று முன்தினம், செங்கல்பட்டில் நடைபெற்றது.

கூட்டத்தில், பங்கேற்று தே.மு.தி.க., தலைவர்

விஜயகாந்த் பேசும்போது, நான் பொதுக் கூட்டத்திற்கு வரும் வழியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வந்து சேர்ந்தேன். தி.மு.க., ஆட்சியில் என்மீது, நேரம் கடந்துபேசியதற்காக, வழக்கு போட்டதற்காக, நீதிமன்றத் திற்கு நடையாக நடந்தேன்.

இதனால், குறித்த நேரத்தில் பேசவேண்டும் என்பதற் காதான், நேரம் பார்த்துக்கொண்டு பேசுகிறேன். தே.மு.தி.க., வேட்பாளர்கள் 5 பேர், விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ஆகியோருக்கு ஆதரவு தெரிவிக்கவேண்டும் என்றார். அப்போது, ம.தி.மு.க., வேட்பாளர் வீரலட்சுமி பெயரை சொல்ல மறந்துவிட்டார்.அதன்பிறகு, கட்சி நிர்வாகிகள் நினைவுபடுத்திய பிறகு, வீரலட்சுமி பெயரை சொல்லாததற்கு மன்னிக்கவும், அவருக்கும், ஆதரவு தெரிவிக்கவேண்டும்.

தி.மு.க., தலைவர் கருணாநிதி, முதலமைச்சர் ஜெயலலிதா ஆகியோரை பற்றி பேசுவதற்கு ஒன்றும் இல்லை. தி.மு.க., - அ.தி.மு.க., ஆகிய கட்சிகள் தேர்தல் அறிக்கையை காப்பியடித்து விட்டதாக, பா.ம.க.,வினர் கூறி வருகின்றனர். எங்கள் தேர்தல் அறிக்கையும் காப்பியடித்து விட்டர்கள்.

செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி

Advertisement

மருத்துவமனைக்கு ஒருமுறை வந்து ரைடு விட்டேன். அதன்பிறகு, மருத்துவமனை சீரமைக்கப்பட்டதாக, எம்.எல்.ஏ., முருகேசன் கூறினார்.

இதே போன்றுதான் அரசும் செயல்படும். தி.மு.க., - அ.தி.மு.க.,வினர் உளவுத்துறையை நம்பி உள்ளனர். எங்களுக்கு மக்கள்தான் உளவுத்துறையாக செயல்படுகின்றனர்.
நாங்கள் ஆட்சி அமைத்தால், வெளிப்படையான நிர்வாகமாக செயல்படும்.

இவ்வாறு, விஜயகாந்த் பேசினார்.

Advertisement

வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
subhashini - chennai,இந்தியா
10-மே-201605:27:18 IST Report Abuse

subhashiniஅதிமுக வெற்றி உறுதியோ உறுதி

Rate this:
Mohan Dass - JEDDAH,சவுதி அரேபியா
09-மே-201621:03:17 IST Report Abuse

Mohan DassGreat Captain Vijayakanth

Rate this:
Balaji - Khaithan,குவைத்
09-மே-201617:54:55 IST Report Abuse

Balajiவித்தியாசமான சூழலில் இருக்கும் தேர்தல் களத்தில், தேர்தல் முடிவில் எப்படிப்பட்டதாக இருக்கும் என்று அவ்வளவு எளிதாக கணிப்பது என்பது சிரமமான ஒன்று.... இவர்களின் கூட்டனி அதிகமான இடங்களை வெல்லவில்லை என்றாலும், இரட்டை இலக்க சதவிகிதத்தில் வாக்குகளை பெற்றாலே அது திமுக மற்றும் அதிமுகவுக்கு மிகப்பெரிய இடி தான்..... மக்கள், திமுக அதிமுக அல்லாத மாற்றத்திற்கு தயாராகிவிட்டனர் என்பதற்கான ஆரம்ப புள்ளியாக இருக்கும்......

Rate this:
மேலும் 28 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X