அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ரூ.73,000 கோடி, இழப்பு தமிழக மின் வாரியம்  அமைச்சர், பியுஷ்கோயல்,தோலுரிப்பு

''அ.தி.மு.க., அரசால், தமிழக மின் வாரியத்திற்கு, 73 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது,'' என, மத்திய மின்துறை அமைச்சர் பியுஷ் கோயல் புகார் கூறியுள்ளார்.

ரூ.73,000 கோடி, இழப்பு தமிழக மின் வாரியம்  அமைச்சர், பியுஷ்கோயல்,தோலுரிப்பு

தமிழக சட்டசபை தேர்தலில், பா.ஜ.,வின் தேசிய தலைவர்களின் பிரசாரம் தீவிரம் அடைந்துள்ளது. நேற்று, கன்னியாகுமரியில் பிரதமர் மோடி; மதுரை, சென்னையில் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு; சென்னையில், மத்திய மின் துறை அமைச்சர் பியுஷ் கோயல் ஆகியோர் பிரசாரம் மேற்கொண்டனர். பா.ஜ., மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடும், சென்னை, விருகம்பாக்கம் தொகுதியின் தேர்தல் அறிக்கையை, மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் பியுஷ் கோயல் பேசியதாவது: கடந்த, 30 ஆண்டுகளாக நீங்கள் ஊழலை மட்டுமே பார்த்துள்ளீர்கள். பா.ஜ.,வால் மட்டுமே, தமிழகத்தில் மாற்றத்தை கொண்டு வர முடியும். கடந்த, 66 ஆண்டுகளாக, தென் மாநிலங்களுக்கு மத்திய தொகுப்பில் இருந்து, ஆண்டுக்கு, 3,456 மெகாவாட் மின்சாரம் தரப்பட்டது. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக, 2,450 மெகாவாட் அதிகரிக்கப்பட்டு, 5,500 மெகாவாட் மின்சாரம் வழங்கப்படுகிறது. அடுத்த, இரண்டு

ஆண்டுகளில், தமிழகத்திற்கான மின் சப்ளை, 80 சதவீதத்திற்கு மேல் அதிகரிக்கும்.

தமிழக மின் நிலையங்களில் நிலக்கரி தட்டுப் பாடு நிலவியபோது, தமிழகம் கேட்காமலேயே நாங்களாக முன் வந்து, நிலக்கரியை வழங்கினோம். மத்திய அரசு சார்பில், 55 கோடி டன் நிலக்கரி தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள் ளது. 5,500 மெகாவாட் மின்சாரம், மத்திய அரசால் வழங்கப்படுவதால் தான், தமிழகம் மின் மிகை மாநிலமாக உள்ளது. இதன் காரணமாக, தமிழகத்திற்கு தொழில் துறையினர் அதிகம் பேர் வருகின்றனர்.

ஆனால், தமிழக தலைவர்கள், மத்திய அரசு தான் ஒவ்வொரு காலாண்டுக்கும் மின் கட்டணத்தை உயர்த்தச் சொல்லி வருவதாக, உண்மைக்கு மாறானகருத்துகளை முன் வைக்கின்றனர்; அது தவறு. நான்கு ஆண்டுகளில், தமிழகத்தில் மின் இழப்பு அதிகரித்துள்ளது. ஆண்டுக்கு, 12 ஆயிரம் கோடி ரூபாய் மின் இழப்பை ஏற்படுத்தியதற்கு, தமிழக மின் துறையே காரணம்.யார் அதிகம் ஊழல் செய்வது என்பதில் தான், அ.தி.மு.க., - தி.மு.க., இடையே போட்டி நிலவுகிறது. சிறிய இலவசங் களை கண்டு, மக்கள் ஏமாற வேண்டாம். அவை, வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தாது. தமிழக மக்கள் மற்றும் இளைஞர்கள் சிந்தித்து ஓட்டு போட வேண்டும்.

'உதய்' திட்டத்தில் தமிழகம் இணையாமல் இருக்கிறது. தமிழகம் இணைந்தால், 24 மணி நேர தடையில்லா மின்சாரம் கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.நிருபர்களிடம் மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் கூறியதாவது: இரு திராவிட கட்சிகளின் ஊழலே, தமிழக மின்

Advertisement

பிரச்னைக்கு முக்கிய காரணம். 'இலவச மின்சாரம்' என, அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் உள்ள அம்சம் செயல்பாட்டுக்கு வந்தால், தமிழகத்தில் மின்வெட்டு அதிகரிக்கும். மின் துறையில் முறைகேடுகள் நடந்தது தொடர்பாக, விசாரணை நடத்த, மத்திய அரசால் முடியாது. ஏனெனில், மின் துறை, மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது.

'உதய்' திட்டம்பற்றிய தவறான கருத்துகளை, தமிழக அரசு கூறி வருகிறது. பொருளாதாரத்தின் அடிப்படை கூட தெரியாமல் இருக்கின்றனர். தேவை என்றால், 'உதய்' திட்டம் பற்றி மொழிபெயர்த்து தருகிறேன். 'விவசாயிகளுக்கு மானியம் வழங்க வேண்டாம்' என்ற அம்சம் அதில் இல்லை.

கடந்த, ஏழு ஆண்டுகளில் தமிழக மின் துறையில், 73 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.கடந்த, ஏழு ஆண்டுகளில் தமிழக மின் துறைக்கு, 73 ஆயிரத்து, 159 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்து.இவ்வாறு மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் கூறினார்.

தமிழக மக்களுக்குமாற்றம் தேவை:தமிழக தேர்தல் பிரசாரத்துக்காக வந்துள்ள ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில், 50 ஆண்டு கால ஆட்சியில் மக்கள், மீனவர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். மத்தியில், பிரதமர் மோடி தலைமையில், பா.ஜ., ஆட்சி அமைந்த பின், பல நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

அவை அனைத்தும், தமிழகத்தின் ஒவ்வொரு கிராமத்தையும் சென்றடைய வேண்டும். தமிழக மக்களுக்கு நிச்சயமாக மாற்றம் தேவை.தமிழகத்தில் பா.ஜ., ஆட்சிக்கு வந்தால், 'டிஜிட்டல் இந்தியா' போன்ற நவீன திட்டங்கள், இங்குள்ள அனைத்து கிராமங்களையும் சென்றடையும்.

தமிழகத்தின் தலைவிதியை மாற்றி அமைக்க, வரும் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு, தமிழக மக்கள் ஆதரவு தர வேண்டும். தமிழகத்தின் தலைவிதியை மாற்றும் வலிமை, பா.ஜ.,வுக்கு உள்ளது. தமிழகத்தின் வளர்ச்சியில், பா.ஜ.,வுக்கு பங்கு உண்டு. தமிழகம் மேலும் வளர்ச்சி அடைய, பா.ஜ.,வை ஆதரியுங்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

- நமது நிருபர் குழு -


Advertisement

வாசகர் கருத்து (200)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - trichy,இந்தியா
09-மே-201621:58:16 IST Report Abuse

sankarகரண்ட் இல்லாமல் 34,000 கோடி திமுக செலவளிச்சிருக்கான். மிகை மின் மாநிலமாக்க அதிமுக 40,000 கோடி செலவளிசிருகாங்க. தாத்தா கணக்கில் 1,75,000 கோடி + 34,000 கோடி எழுதுப்பா சித்திர குப்தா

Rate this:
Rameeparithi - Bangalore,இந்தியா
09-மே-201621:24:05 IST Report Abuse

Rameeparithiபோயஸ் கார்டனிலும் மற்றும் கோபாலபுரத்திலும் ரெண்டு நாளைக்கு மின்சார இணைப்பை துண்டித்தால் அப்போ தான் தெரியும் வெயிலோட அருமையும் கொடுமையும் தமிழக மக்கள் நிஜமாகவே பொறுமையின் சிகரங்கள் இந்த விசயத்தில்.

Rate this:
K.Sugavanam - Salem,இந்தியா
09-மே-201620:10:12 IST Report Abuse

K.Sugavanamமத்திய மின்துறைக்கு கூடன்குளத்தால எவ்வளவு இழப்பு நு சொல்லுவாரா கோயலூ...

Rate this:
மேலும் 197 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X