அரசியல் செய்தி

தமிழ்நாடு

திட்டங்களை முடக்கியவர் ஜெ.,: திருவாரூரில் ஸ்டாலின் பிரசாரம்

Added : மே 09, 2016 | கருத்துகள் (47)
Share
Advertisement
திருவாரூர்: தி.மு.க., ஆட்சியில் உருவாக்கப்பட்ட திட்டங்களை நிறைவேற்றாமல் முடக்கியவர் ஜெ., என தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், திருவாரூர் மாவட்டம் கொடராச்சேரியில் நடந்த பிரசார கூட்டத்தில் பங்கேற்று பேசுகையில் குறிப்பிட்டார். கருணாநிதி போட்டியிடும் இந்த தொகுதியில் அவருக்கு ஓட்டளிக்குமாறு நடந்த பிரசார கூட்டத்தில் அவர் மேலும் பேசுகையில் ; ஆட்சியில் இருந்தாலும் இல்லா
திட்டங்களை முடக்கியவர் ஜெ., திருவாரூரில் ஸ்டாலின் பிரசாரம்

திருவாரூர்: தி.மு.க., ஆட்சியில் உருவாக்கப்பட்ட திட்டங்களை நிறைவேற்றாமல் முடக்கியவர் ஜெ., என தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், திருவாரூர் மாவட்டம் கொடராச்சேரியில் நடந்த பிரசார கூட்டத்தில் பங்கேற்று பேசுகையில் குறிப்பிட்டார்.
கருணாநிதி போட்டியிடும் இந்த தொகுதியில் அவருக்கு ஓட்டளிக்குமாறு நடந்த பிரசார கூட்டத்தில் அவர் மேலும் பேசுகையில் ; ஆட்சியில் இருந்தாலும் இல்லா விட்டாலும் மக்களை சந்திப்பதில் முழு கவனம் கொண்டவராக கருணாநிதி திகழ்கிறார். இந்த வயதான காலத்திலும் அவர், வாட்ஸ் அப் வரை அவர் பேசப்பட்டுள்ளார் . அது தான் அவரது வளர்ச்சி. அவர் எப்போதும் சாலை வழியாகத்தான் சென்று ஓட்டு கேட்டு செல்வார். தனி விமானத்தில் செல்ல மாட்டார் .

1957 ம் ஆண்டு அவர் பேசிய கன்னிப்பேச்சு விவசாயத்தை பற்றி இருந்தது. தாழ்த்தப்பட்டோர், அருந்ததி, சிறுபான்மை இன மக்களுக்கு இட ஒதுக்கீடு தந்தவர் கருணாநிதி. 1989 ல் விவசாய மக்களுக்கு ஒரு அற்புதமான அறிவிப்பை வெளியிட்டார். மின்சார கட்டணம் குறைக்க போராட்டம் நடந்தது. ஒரு பைசா குறைக்க சொல்லி நடந்த இந்த போராட்டத்தில் கேட்டதை விட இலவச மின்சாரம் அறிவித்தார். 2006 ல் ஆட்சிக்கு வந்த போது கொடுத்த தேர்தல் வாக்குறுதியில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வேன் என அறிவித்தார். இது நடக்குமா என்ற சந்தேகம் எழுந்தது. 7ஆயிரம் கோடி செலவாகும். விவசாயிகளை கட்சி பாரபட்சமின்றி, அனைவரது கடனையும் தள்ளுபடி செய்தார். காவேரி தொடர்பாக இறுதி தீர்ப்பை பெற்று தந்தவர் கருணாநிதி.

தான் வாழும் புகழ் பெற்ற இல்லத்திற்கு பல்வேறு தலைவர்கள் வந்த புகழ் உண்டு. ஆனால் இந்த இல்லத்தை கருணாநிதி தனது 87 வது பிறந்த நாளில் மருத்துவமனைக்காக தானம் செய்தார். பெண் சிங்கம் என்ற திரைப்படத்திற்கு கதை வசனம் எழுதி 50 லட்சம் பெற்றார். இதனை அருந்ததியர் சமூக மக்கள் கல்விசெலவுக்காக அளித்தார். சினிமா கலைஞர்கள் நலனுக்காக நிதி அளித்தார். இது தான் தவ வாழ்வு . தவ வாழ்வு வாழ்வதாக கூறும் ஜெ., போயஸ் கார்டனை தர வேண்டாம். கொடநாட்டை மக்களுக்ககா தர தயாரா ? 50 ஆயிரத்திற்கும் மேலான ஓட்டு வித்தியாசத்தில் கருணாநிதி வெற்றி பெற்றார். இந்த திருவாரூருக்கு அவர் பல்வேறு திட்டங்களை தந்துள்ளார். திருவாரூர் தேரை ஓட செய்தவர் கருணாநிதி. 1996 ல் திருவாரூரை தனி மாவட்டமாக அறிவித்தார். அரசு அலுவலக கட்டடங்களை கட்டி தந்தவர். இங்கு தான் கணினி மாவட்டம் என்ற பெருமைக்கு உயர்த்தினார். கமலாலயம் குளம் தூய்மைபடுத்தப்பட்டது. அகல ரயில் பாதை திட்டம் நிறைவேற்றபப்டடது. அரசு மருத்துவ கல்லூரி உருவாக்கப்பட்டது. மத்திய பல்கலை., அமைத்தவரும் கருணாநிதி. ஜெ., ஆட்சிக்கு வந்தால் திருவாரூர் மாவட்டம் புறக்கணிக்கப்படுகிறது. வேளாண்கல்லூரி, புதிய பஸ் ஸ்டாண்ட் பணிகள் கிடப்பில் போடப்படுகிறது. தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் பல்வேறு திட்டங்கள் முடக்கி வைக்கப்பட்டுள்ளது வேதனை அளிக்கிறது. தி.மு.க., கொண்டு வந்த திட்டங்களை முடக்கினார் ஜெ., பல கோடி செலவில் கட்டப்பட்ட தலைமை செயலகம். அண்ணா நூலகம் மூடப்பட்டது. ஜெ., கொண்டு வந்த திட்டத்தை நாங்கள் முடக்க மாட்டோம்.
110 விதியின் கீழ் ஜெ., 600 க்கும் மேற்பட்ட திட்டங்களை அறிவித்தார். இதில் ஏதாவது நிறைவேறி இருக்கிறதா ?கடந்த 5 ஆண்டில் தமிழகம் 50 ஆண்டுகள் பின்னோக்கி சென்று விட்டது. அதனால்தான் எங்களின் தேர்தல் அறிக்கையில் 500 வாக்குறுதிகள் தரப்பட்டுள்ளன. அவ்வளவு விஷயங்கள் சீரமைக்க வேண்டியுள்ளது. பூரண மது விலக்கு என உறுதி அளித்துள்ளோம். இதனால் ஆட்சிக்கு வந்ததால் இது தான் முதல் கையெழுத்தாக இருக்கும். மாணவர்கள் கல்விக்கடன் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது போல் இதுவும் கொண்டு வரப்படும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.


Advertisement
வாசகர் கருத்து (47)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
11-மே-201600:26:09 IST Report Abuse
Girija ஏன் இப்படி கோபம் கொண்டு ..............................ஆண்டி ஆனாய்?
Rate this:
Cancel
maanasthan - madras,இந்தியா
10-மே-201614:01:14 IST Report Abuse
maanasthan பெரிய கருப்பன் நல்ல திட்டமிட்டு செயல் படுகிறாரு, வீடியோ பாருங்க தொளபதி
Rate this:
Cancel
10-மே-201611:49:36 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் போதும்பா, நீயும் உங்க அப்பாவும் சேர்ந்து இந்த தமிழ்நாட்டுக்கு போட்ட திட்டம். இதுவரை ஆட்சியில் இருந்து நீங்கள் போட்ட திட்டங்களால் எண்களின் கோவணம் தான் மிஞ்சி இருக்கிறது. சோற்றுக்கு இலவச அரிசிக்கு பிச்சை எடுக்க வைத்து விட்டீர்கள்.இனிமேலாவது தன் மானத்தோடு வாழ்ந்து கொள்கிறோம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X