தேர்தலும் சட்டங்களும் 9: தேர்தல் மனுக்கள்| Dinamalar

சிறப்பு பகுதிகள்

சட்டமும் சந்தேகங்களும்

தேர்தலும் சட்டங்களும் 9: தேர்தல் மனுக்கள்

Added : மே 10, 2016
Advertisement

தேர்தல் சமயங்களில் எழும் பிரச்னைகளுக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு யாருக்கு உள்ளது எனும் கேள்வி எல்லா சமயங்களிலும் எழும் ஒன்று. இதற்கு தேர்தல் என்பதன் பொருளை உற்று நோக்க வேண்டி உள்ளது. தேர்தல் என்பது அவைக்கான உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதான அந்த ஒரு நிகழ்வு மட்டுமா? அல்லது தேர்தல் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் (process) உள்ளடக்கியதா? எனும் கேள்விக்கு பதில் காண வேண்டி உள்ளது.உச்ச நீதிமன்றம் இது குறித்து ஆராய்ந்த போது மொஹிந்தர் சிங் எதிர் தலைமை தேர்தல் ஆணையர் எனும் வழக்கில் நீதிபதி க்ரிஷன் ஐயர் அவர்கள்,தேர்தல் என்பது அது நடைபெறும் நிகழ்வுகள் அனைத்தையும் (process) உள்ளடக்கியது என்கிறார்.தேர்தல் என்பது தேர்தலுக்கான நாள் குறிப்பிட்டது முதல், தேர்தல் முடிவடையும் நாளாக தேர்தல் ஆணையம் குறிப்பிட்ட தேதி வரையான காலமே ஆகும். ஏன் இதை தனியாக குறிப்பிட வேண்டி உள்ளது என்றால், இந்த கால கட்டத்தில் அரசின், வேட்பாளர்களின் பல விஷயங்கள், தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடும். உதாரணமாக, வேட்பாளர் அறிவிக்கப்பட்ட தேதி முதல் தேர்தல் இறுதி தேதி வரையான வேட்பாளரின் தேர்தல் பணிக்கான் செலவுகளை வேட்பாளர் கணக்கில் காட்ட வேண்டும்.இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 329(b) சொல்வதாவது:இந்திய அரசியலமைப்புச் சட்டம் 329(b)(b) No election to either House of Parliament or to the House or either House of the Legislature of a State shall be called in question except by an election petition presented to such authority and in such manner as may be provided for by or under any law made by the appropriate Legislatureஎன்கிறது.அதாவது இதன் பொருள் அவைகளின் தேர்தல் சம்பந்தமான வினாக்கள் election petition மூலம் மட்டுமே விசாரிக்கப்பட வேண்டும் என்றாகிறது. இதன் படி தேர்தல் சமயத்தில் எழும் எந்த வினாவுக்கும் தேர்தல் ஆணையமே பதில் சொல்லக்கடமைப்பட்டுள்ளது. அல்லது, தேர்தல் ஆணையத்தின் பொறுப்பிலேயே தேர்தல் கால செயல்பாடுகள் அமைய வேண்டும் என்பதால் அனைத்திற்கும் தேர்தல் ஆணையமே பதிலிருக்க வேண்டும் என்றாகிறது.ஒரு ஜனநாயக் நாட்டில், குறுக்கீடற்ற நேர்மையான தேர்தல் நடைபெற வேண்டும் எனில் அரசு சார்பற்ற, ஆனால் ஜனநாயக அடிப்படையில் ஏற்படுத்தப்பட்ட தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் மட்டுமே நடைபெறுவதே சாலச் சிறந்தது.ஏனெனில் தேர்தல் என்பது அடிப்படை உரிமை அல்ல ஆனால், ஒரு சட்ட உரிமை. இதில் எழும் பிரச்னைகளை அதற்கென ஏற்படுத்தப்பட்ட சட்டத்தின் கீழ்தான் செயலுறுத்த முடியும் என (ஜோதி பாசு எதிர் தேவி கோஷல் வழக்கில்) உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது.Election Petition என்பது தேர்தல் குறித்த பிரச்சனைகளை, உதாரணமாக, அவை உறுப்பினராக தேர்வான ஒரு வேட்பாளரின் தேர்வு நியாயமான முறையில் நடைபெற்றதா? அப்படித் தேர்வானவரின் செல்லுதன்மை பற்றிய சந்தேகம், போன்ற பிரச்சனைகளை கேள்வியாக மனுச் செய்வதே ஆகும்.1966 வரையிலும் எலக்ஷன் பெட்டிஷன் என்பது தேர்தல் ஆணையத்தின் ஆயத்திடம் சமர்பிக்கப்பட்டு வந்தது. ஆனால், உச்ச நீதிமன்றமானது, வழக்கொன்றில் (Hari Vishnu Kamath V. Ahmed Isheque) தேர்தல் காலகட்டத்தில் இது போன்ற வழக்குகளை ஆரம்பிக்க இயலாது(prohibiting initiation of proceedings) தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டபின் அதே பிரச்னை பொது சட்டத்தின் கீழானதாகி விடுகிறபடியால் அதைத் தொடரத் தடையேதும் இல்லை என்றது.இந்த காரணத்தை தேர்தல் குறித்த பிரச்சனைகளைக் கையாளும் பரவெல்லை(jurisdiction) தேர்தல் ஆணையத்தின் ஆயத்திற்கும், உயர் நீதிமன்றத்திற்கும் என இரண்டிற்கும் அமைந்தால் குழப்பம் ஏற்படும் என்பதால், அதன் பின்னிட்ட காலங்களில் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட பிறகு, உயர் நீதிமன்றத்திலேயே நேரடியாக எலக்ஷன் பெட்டிஷன்களை மனுச் செய்யலாம் எனக் கூறியது.இதை ஒட்டியே மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் -1951 - ன் பிரிவு 80 ஐக் கொண்டு வந்தது.மேற்சொன்ன காரணங்களாலேயே தேர்தல் முழுதும் அதாவது அதன் நிகழ்வுகள் முழுவதுமே மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 - ன் கீழான சட்டப்பிரிவுகளின் படியே நடைபெறும். வழக்கொன்றில் (Ponnusami Vs Returning Officer) வேட்பாளர் மனு ஒன்று Returning Officer -ஆல் நிராகரிக்கப்பட்டது. அதை ஒட்டி, அந்த வேட்பாளர், உயர் நீதிமன்றத்தில் Returning Officer -ன் அந்த ஆர்டரை தள்ளுபடி செய்யும்படி(quash) ரிட் மனு(Art 226) தாக்கல்செய்தார். ஆனால், தேர்தல் பற்றிய அனைத்து பிரச்சனைகளும் தேர்தல் ஆணையத்திற்கு அளிக்கும் Election Petition மூலமாக மட்டுமே தீர்வு காண இயலும் எனவும், நீதிமன்றங்களுக்கு இதற்கான அதிகார எல்லை நேரடியாக இல்லை எனவும் சொல்லி அந்த வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.Election Petition - ஐ தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட தேதியிலிருந்து நாற்பத்தைந்து நாட்களுக்குள் எந்த மாநிலத்தில் பிரச்னை நடந்ததாக மனுதாரர் சொல்கிறாரோ அந்த மாநிலத்தின் உயர் நீதிமன்றத்தில் மனுச்செய்ய வேண்டும்.ஒரே தேர்தல் குறித்து பல வழக்குகள் மனுச்செய்யப்பட்டிருந்தால், அவை அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரே நீதிபதியின் கீழோ, அல்லது,அவற்றைப் பிரித்து வழக்கு நடத்துவதோ அந்த நீதிபதியின் முடிவாக இருக்கும். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951, இடப்பட்ட ஒவ்வொரு வழக்கும், இடப்பட்ட தேதியில் இருந்து ஆறுமாதங்களுக்குள் முடிவு ஆக வேண்டும் என கால நிர்ணயத்தை அறிவுறுத்துகிறது (recomonded).ஒரு வேளை தேர்ந்தெடுக்கப்பட்ட அவை உறுப்பினர், அவர் பொறுப்பில் இருந்து வேலைகள் ஏதேனும் செய்து முடித்திருக்க, அல்லது செய்ய ஆரம்பித்திருக்கும் நிலையில், அவர் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என முடிவு செய்யப்பட்டால், அதனால் எல்லாம் அவர் ஆரம்பித்த/செய்து முடித்த செயல் நின்று போகத் தேவை இல்லை. அதே சமயம், அவை உறுப்பினர் அல்லாத (Election Petition படி தேர்வாகாததாக முடிவான) அந்த நபர் அவையில் அது வரை செயல்பட்டமையால், அவருக்கு தண்டனை, தண்டம் கட்டுதல் போன்றவை ஏதும் கிடையாது. (அவை உறுப்பினர் அல்லாத ஒருவர் அவையில் செயல்பட்டிருந்தால் அவருக்கான தண்டனை பற்றி முந்தைய கட்டுரைகளில் பார்த்தது நினைவிருக்கலாம்).Election Petition ஐ அந்தத் தேர்தல் பங்குபெற்ற வேட்பாளரோ, வாக்காளரோ, உயர் நீதிமன்றத்தில் அதற்கென உள்ள அலுவலக அதிகாரியிடம் முறையாக மனுச்செய்யலாம்.அந்த பெட்டிஷனை, மனுச்செய்யும் உயர் நீதிமன்றத்தின் வரையறைக்கொப்ப, தோராயமாக ரூபாய் இரண்டாயிரம் வரை முன் வைப்பு செய்து மனுச் செய்யலாம். உயர் நீதிமன்றங்கள் அந்த தொகையை கூட்டவோ குறைக்கவோ செய்யலாம். அந்தந்த நேர்விற்கேற்ப மனுதாரர் வைப்புத் தொகை கட்ட வேண்டும்.அந்த பெட்டிஷனில் நடந்த தேர்தலின் பொருண்மை குறித்த கேள்விகள், எவரேனும் ஊழல் செய்ததான புகாராக இருப்பின் அது குறித்த முழு தகவல்கள், ஆதாரங்கள், பெயர்கள்; இவை அனைத்தும் விண்ணப்பதாரரின் கையொப்பத்துடன் குறிப்பிட்ட விண்ணப்பத்தில் பூர்த்தி செய்யப்பட்டு விண்ணப்பிக்கப்பட வேண்டும்.ஒரு நபர் தவறான முறையில் தேர்வாகி இருக்கிறார் அதை இல்லா நிலையாக்க வேண்டும் என செய்யப்படும் ஒரு எலக்ஷன் பெட்டிஷனில், அத்தோடு, தவறாக தேர்வாகி இருப்பவரை விடுத்து விட்டு, தான் தேர்வாகி இருப்பதற்கான காரணங்களை, ஆதாரங்களோடு விளக்கி, தன்னை தேர்வானதாக அறிவிக்கச்சொல்லியும் விண்ணப்பிக்கலாம்.ஒரு தேர்தல் சரிவர நடைபெறவில்லை எனச் சொல்ல அடிப்படைக் காரணங்களாக எவை எல்லாம் இருக்கலாம் என மக்கள் பிரதிநிதித்துவச் சட்ட பிரிவு 100 விளம்புகிறது. அதில் குறிப்பிடப்பட்ட குறைகள் ஏதும் அந்த தேர்தல் ச்மையத்தில் நடந்திருப்பின் தேர்தல் செல்லாது எனக் கோரி விண்ணப்பிக்கலாம்.அதே போல ஊழல் குற்றச்சாட்டுகளும் விண்ணப்பத்திற்குக் காரணமாக அமையலாம். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 123 எவை எல்லாம் ஊழல் என பட்டியலிடுகிறது.ஒரு Election Petition ஆனது அதன் விண்ணப்பதாரரால் திரும்பப்பெற விரும்பப்பட்டால் அதை அப்படியே திரும்பப்பெற இயலாது. உயர்நீதிமன்ற அனுமதியின் பெயரிலேயே திரும்பப் பெறப்பட வேண்டும். அப்படி திரும்பப்பெற விண்ணப்பித்தால், அந்த விண்ணப்பம் தரப்பினர்கள் அனைவ்ருக்கும், மற்ரும் எதிர் தரப்பினர் அனைவருக்கும் அறிவிக்கப்பட்டு, அதற்கான தேதியும் குறிப்பிடப்பட்டு அரசு கெசட்டில் பதியப்படும்.அதே போல அந்த விண்ணப்பமானது விண்ணப்பதாரரின் இறப்பு, விண்ணப்பத்தின் கால தாமதம், புகாருக்குள்ளானவரின் பதவி விலகல்/இழப்பு, ஆகிய நேர்வைகளில் பயனற்றதாகிறது.ஒரு election petition - ன் மீதான வழக்கு முடிவடைந்ததும் அது குறித்த தனது முடிவை உயர் நீதிமன்றமானது, தேர்தல் ஆணையத்திடமும், மற்றும் அந்த அவையின் அவைத் தலைவர் (Speaker/Chairman) -டம் தெரிவிக்கும். அத்துடன் அதை எழுத்துவடிவில் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கும்.அந்த முடிவை எதிர்த்து பிரச்சனை சட்டம் குறித்ததாக, அல்லது பொருண்மை குறித்ததாக இருப்பினும், மேல் முறையீடு உச்ச நீதிமன்றத்தில், செய்யப்படலாம். மேல் முறையீடானது உயர் நீதிமன்றத்தின் முடிவு தெரிவிக்கப்பட்ட் தினத்தில் இருந்து முப்பது நாட்களுக்குள் செய்யப்பட வேண்டும். ஆனால் உச்ச நீதிமன்றம் ஏற்கும் வகையிலான காரணத்தின் அடிப்படையில் அதற்கு மேற்பட்ட கால அவகாசத்திலும் கூட மேல்முறையீட்டு விண்ணப்பத்தை ஏற்கலாம்.எலக்ஷன் பெடிஷன் சம்பந்தமான பிரபல வழக்குகள்:உம்லேஷ் யாதவ் எனும் உத்தரபிரதேச எம் எல் ஏ-வை தவறாஅன தேர்தல் கணக்கு காண்பித்த குற்றத்திற்காக தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்தது.தேர்தல் ஊழல் செய்த குற்றத்திற்காக இந்திரா காந்தி அவர்கள் ஆறு வருடங்கள் தேர்தலில் போட்டியிட முடியாதபடியானது.திரு, சிதம்பரம் அவர்களுக்கு எதிராக அவர் தேர்தல் ஊழல் புரிந்ததாகவும், ஓட்டுக்களை அவரே கையாண்டதாகவும் எலக்ஷன் பெடிஷன் இடப்பட்டது.- ஹன்ஸா (வழக்கறிஞர்) Legally.hansa68@gmail.com

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X