பொது செய்தி

தமிழ்நாடு

'கண்ணனின் பரம்பரையே கடையெழு வள்ளல்கள்'

Added : மே 15, 2016 | கருத்துகள் (1)
Share
Advertisement


திருவல்லிக்கேணி: ''தமிழ் இலக்கியங்கள் கூறும், கடையெழு வள்ளல்கள் என்னும் குறுநில மன்னர்கள், கண்ணபிரானின் பரம்பரையைச் சேர்ந்தவர்கள்,'' என, தொல்லியல் ஆய்வாளர், டி.கே.வி.ராஜன் பேசினார். திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி கோவிலில் நேற்று, சர்வதேச கிருஷ்ணா கல்வி மையத்தின் சார்பில், தொல்லியல் ஆய்வாளர், டி.கே.வி.ராஜன் தொகுத்த கிருஷ்ணர் ஆராய்ச்சி தொடர்பான தகவல் நுால் வெளியீட்டு விழா நடந்தது. நுாலை, முன்னாள் இந்திய தேர்தல் கமிஷனர், டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி வெளியிட, ராமாபுரம் ஸ்ரீவெங்கடேஷ்வரரா கலாசார மையத்தின் துணை தலைவர் ஆர்.கார்த்திகேயன் பெற்றுக்கொண்டார். நுாலின் தொகுப்பாளரும், இந்திய அறிவியல் கண்காணிப்பகத்தின் இயக்குனருமான, டி.கே.வி.ராஜன் பேசியதாவது: பகவான் கிருஷ்ணர், துவாரகையை தலைமையகமாக மாற்றியதற்கான காரணங்கள், மகாபாரதத்தில் கூறப்பட்டு உள்ளன. போருக்கு பின், ஆழிப்பேரலை என்ற சுனாமியின் மூலம், துவாரகை அழியப்போவதையும், அர்ச்சுணனிடம் கண்ணன் சொல்லி விட்டு, மறைந்ததாக குறிப்புகள் உள்ளன. குஜராத் மாநிலத்தில் உள்ள காம்பே வளைகுடா பகுதியில், துவாரகை இருந்ததாக குறிப்புகள் இருந்ததால், அங்கு, அகழ்வாரா ய்ச்சி செய்தோம். அப்போது, மகாபாரதத்தில் உள்ளதற்கு ஏற்ப தரவுகள் கிடைத்துள்ளன. அங்கு கிடைத்த சிவப்பு நிற பானை ஓடுகளுக்கும், தமிழகத்தின் மதுரைனா மாவட்டத்தில் உள்ள பரம்பு மலைப்பகுதியில் கிடைத்த பானை ஓடுகளுக்கும் காலத்தொடர்பு இருப்பதை, தெர்மோ லுாமினசன்ஸ் ஆய்வின் மூலம், நிரூபணம் ஆகி உள்ளது. சங்ககால தமிழ் நுால்கள் குறிக்கும், வேளிர் என்னும் இனத்தை சேர்ந்தவர்கள் கடையெழு வள்ளல்கள். அவர்கள், கண்ணனின் வழித்தோன்றல்கள். பரம்பு மலை, கொல்லி மலை உள்ளிட்ட கடையெழு வள்ளல்கள் வாழ்ந்த இடங்களில் அகழ்வாராய்ச்சி செய்தால், துவாரகையுடன் தொடர்புடைய பல தகவல்கள் வெளிவரலாம். இவ்வாறு, துவாரகைக்கும் தமிழகத்துக்கும் தொடர்புடைய பல்வேறு தகவல்கள் கிடைத்து உள்ளன. அவற்றை தொல்லியல் ஆய்வின் மூலம் நிறுவப்பட, கடையெழு வள்ளல்களின் வாழ்விடங்களில் நிறைய ஆய்வுகள் செய்யப்பட வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார். மகாபாரதத்தில் கண்ணனின் தத்துவங்கள் குறித்து, சென்னை பல்கலைக்கழக வைஷ்ணவ துறை முன்னாள் தலைவர் வேங்கடகிருஷ்ணன் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
unmai nanban - Chennai,இந்தியா
15-மே-201610:05:12 IST Report Abuse
unmai nanban ஐயோ இங்கே ஒருத்தர் கண்ணன் பிறந்ததற்கு பிறப்பு சான்றிதழ் எங்கே இருக்கு யார் கொடுத்ததுன்னு கேட்டுருவாராம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X