பொது செய்தி

தமிழ்நாடு

குதிரையில் சென்ற ஓட்டு இயந்திரங்கள்

Updated : மே 16, 2016 | Added : மே 16, 2016 | கருத்துகள் (3)
Advertisement
குதிரையில் சென்ற ஓட்டு இயந்திரங்கள்

போடி:போடி அருகே சென்ட்ரல் ஸ்டேஷன் மலைக்கிராமத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன், குதிரைகள் மூலம் நேற்று மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை தேர்தல் அதிகாரிகள் கொண்டு சென்றனர்.தேனிமாவட்டம் போடி தொகுதி கொட்டகுடி ஊராட்சிக்கு உட்பட்ட முட்டம், முதுவாக்குடி, சென்ட்ரல், காரிப்பட்டி மற்றும் அகமலை ஊராட்சிக்கு உட்பட்ட ஊரடி, ஊத்துக்காடு மலைக்கிராமங்கள் உள்ளன.
சென்ட்ரல் ஸ்டேஷன் மலைப்பகுதியில் 185 , காரிப்பட்டியில் 145 , அகமலை 668, ஊரடி- ஊத்துக்காடு பகுதியில் 458 , கண்ணக்கரையில் 178 என வாக்காளர்கள் உள்ளனர்.போடியிலிருந்து இப்பகுதிகளுக்கு செல்ல ரோடு வசதி இல்லை. சட்டசபை தேர்தலையொட்டி இங்குள்ளோர் ஓட்டளிக்க வசதியாக குரங்கணியிலிருந்து 30 கி.மீ., தொலைவில் உள்ள சென்ட்ரல் ஸ்டேஷனுக்கும், போடியிலிருந்து 13 கி.மீ., துாரம் உள்ள காரிப்பட்டிக்கும், குரங்கணியிலிருந்து மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்போடு கரடு முரடான மலைப்பதையில் குதிரைகள் மூலமாக மண்டல அலுவலர் உதயன் தலைமையில் நேற்று கொண்டு செல்லப்பட்டன.
பெரியகுளம்: இதே சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட அகமலை ஊராட்சியில் ஊரடி, ஊத்துக்காடு ஆகிய இருமலைக்கிராமங்களில் 484 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்காக ஊத்துக்காடு ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் ஓட்டுச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக போடி தாலுகா அலுவலகத்தில் இருந்து மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வாகனத்தில் சோத்துப்பாறைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து குதிரைகள் ராமன், கேசவனில் ஏற்றப்பட்டு வராகநதியை கடந்து, மலைப்பகுதிக்கு 10 கி.மீ., துாரம் கொண்டு செல்லப்பட்டது. தலைமை ஓட்டுப்பதிவு அலுவலர் பாலகுருநாதன், ஓட்டுப்பதிவு அலுவலர்கள் ராஜேஷ்கண்ணன், சுந்தரராஜன், அலாவுதீன் மற்றும் வடகரை சிறப்பு எஸ்.ஐ., வரதராஜன் பாதுகாப்புடன் கொண்டு சென்றனர்.

135 ஓட்டுக்காக 103 கி.மீ., தேனிமாவட்டம் போடி தொகுதி கொட்டகுடி ஊராட்சிக்கு உட்பட்ட 'டாப்-ஸ்டேஷன்' மலைப்பகுதி, போடியில் இருந்து குரங்கணி வழியாக 40 கி.மீ., துாரத்தில் உள்ளது. இங்கு 135 ஓட்டுக்கள் மட்டுமே உள்ளன. குரங்கணியிலிருந்து 'டாப்-ஸ்டேஷன்' செல்ல ரோடு இல்லை. இதனால் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை கேரளா மூணாறு வழியாக 103 கி.மீ., துாரம் ஜீப்பில் போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு சென்றனர்.வாக்காளர்கள் அங்குள்ள வீரவேல் ஆரம்ப பள்ளி ஓட்டுச்சாவடியில் ஓட்டளிக்க உள்ளனர். இது போல கொழுக்கு மலை கிராமத்திற்கு ரோடு இல்லாததால் போடியிலிருந்து 50 கி.மீ., தொலைவில் உள்ள கேரளா, சூரியநெல்லிக்கு சென்று, அங்கிருந்து 10 கி.மீ., துாரம் குண்டும், குழியுமாக உள்ள ரோட்டில் செல்ல வேண்டியதுள்ளது. இங்கு மொத்தம் 142 வாக்காளர்கள் உள்ளனர். ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளியில் அவர்கள் ஓட்டளிப்பர். இதற்கான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை போலீஸ் பாதுகாப்போடு அதிகாரிகள் ஜீப் மூலம் கொண்டு சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dhanarajan - vadalur,இந்தியா
16-மே-201622:35:19 IST Report Abuse
Dhanarajan மது விலக்கு = இலவசம் + சலுகைகள் எப்படி : வரி சுமை நடுத்தர மற்றும் ஏழை மக்கள் தலையா ? பதிக்கப்படும் மக்கள் யோசிக்கட்டும்.
Rate this:
Share this comment
Cancel
Dhanarajan - vadalur,இந்தியா
16-மே-201622:27:25 IST Report Abuse
Dhanarajan எந்த கச்சி வந்தாலும் இந்த மலை கிராமத்திற்கு ரோடு போட போவதில்லை. ஏன் தேர்தல் அறிக்கையல் இந்த கிராமம் இடம் பெறவில்லை. வோட்டு மட்டும் வேண்டுமா.
Rate this:
Share this comment
Cancel
Panneer - Puduchery,இந்தியா
16-மே-201621:20:18 IST Report Abuse
Panneer நேரடியாக் பதவிக்கு வந்த IAS /IPS அதிகாரிகளை வைத்து கொண்டு தேர்தல் நடத்துவதை விட சொன்னதை கேட்கும் மட்டரக தமிழ் நாட்டு குதிரைகளை மாவட்ட ஆட்சியராகவும் SP ஆகவும் மிக சாதுர்யமாக தேர்தல் முடியும் வரை நீட்டித்ததர்க்கு காரணம் சொன்னதை கேட்டு பொதி சுமப்பர்கர்கள் என்பதற்காக தானோ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X