பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் மழை நீடிக்கும்; வானிலை

Added : மே 17, 2016 | கருத்துகள் (5)
Advertisement
தமிழகத்தில் மழை நீடிக்கும்; வானிலை

சென்னை: வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றுள்ளதால் தமிழகத்தில் இன்னும் 2 நாட்கள் மழை நீடிக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இலங்கை அருகே வங்கக் கடலில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் தாழ்வு பகுதி வடக்கு நோக்கி நகர்ந்து தாழ்வு மண்டலமாக உருப்பெற்றுள்ளது. இதனால் மழை 2 நாட்கள் மழை பெய்யும்.


இது குறித்து வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது: இலங்கை அருகே மையம் கொண்ட காற்றழுத்த தாழ்லு வலுப்பெற்று மண்டலமாக மாறியுள்ளது.


இன்று காலை சென்னைக்கு கிழக்கே 240 கி.மீ., தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது 48 மணி நேரத்தில் வலுப்பெற்று வட மேற்கு வடக்கு திசை நகர்ந்து செல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்யக்கூடும். தென் தமிழகத்தில் சில இடங்களில் கன மழை பெய்யக்கூடும். தெற்கு ஆந்திர கடற்கரை பகுதியில் மீனவர்கள் செல்ல வேண்டாம். தரைக்காற்று பலமாக வீசக்கூடும். வட தமிழகத்தில் பலத்த மழை பெய்யும். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் கன மழை பெய்யும்.


திருவாரூர் நன்னிலம் பகுதியில் அதிகபட்சமாக 14 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bebeto - Michigan,யூ.எஸ்.ஏ
18-மே-201621:39:47 IST Report Abuse
Bebeto நானும் பார்த்து கொண்டே இருக்கிறேன், தினமலர் இவ்வளவு திமுக ஜால்ராவாக மாறுமா என்று. ஏன்யா, எவ்வளவு முக்கியமான நியூஸ் - சாதிக் பாட்சா கொலை பற்றி. அதை பற்றி ஒரு வார்த்தை எழுதாமல் முழு இருட்டடிப்பு செய்கிறீர்களே?. நீங்கள் எல்லாம் நடுநிலையாளர் என்று போட்டு கொள்கிறீர்கள்.
Rate this:
Share this comment
Cancel
kuppuswamykesavan - chennai,இந்தியா
17-மே-201623:57:38 IST Report Abuse
kuppuswamykesavan மழை நீர் ஓடைகளை மறு பதிப்பு செய்யாதவரை,எவ்வளவு மழை வந்தும் என்ன பயன்?.
Rate this:
Share this comment
Cancel
விஜயன் - Kanchipuram,இந்தியா
17-மே-201621:01:57 IST Report Abuse
விஜயன் குறைந்தபட்சம் வரபோகும் அரசாங்கமாவது நீரை சேமிக்க ஏதாவது முயற்சி செய்யுமா? இல்லை எதிர்கட்சிகளை குறைசொல்லி கொண்டே காலத்தை வீணடிக்குமா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X