பொது செய்தி

தமிழ்நாடு

நாள் ஒன்றுக்கு 12 ஆயிரம் போன் கால் ; சிறப்பான தேர்தல் பணிக்கு ஒரு சபாஷ்

Added : மே 17, 2016 | கருத்துகள் (38)
Share
Advertisement
சிறப்பான தேர்தல் பணிக்கு ஒரு சபாஷ்

சென்னை: நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பலரது அயராத பணியால் சிறப்பாக முடிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் முதல் மாநிலம் முழுவதும் தேர்தல் தொடர்பான பணியில் பல அரசு ஊழியர்கள் முழு தியாக உணர்வுடன் செயல்பட்டு தேர்தலை வெற்றிகரமாக முடித்துள்ளனர். இதற்கு அனைவரும் ஒரு சபாஷ் போடலாம்.

தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தலைமையில் தலைமை செயலகத்தில் 2 கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டன. இங்கு 150 ஊழியர்கள் 24 மணி நேரமும் கண் துஞ்சாது பணியில் ஈடுபட்டனர்.


கடந்த 10 நாட்களில் 19 அதிகாரிகள் கூடுதலாக பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஓட்டுப்பதிவு நடக்கும் பூத்கள், தலா இரண்டு அரசியல் கட்சிகளை கண்காணிப்பது, இரண்டு முதல் 3 மாவட்டங்களை முழு அளவில் மேற்பார்வை செய்வது உள்ளிட்ட பணிகள் வழங்கப்பட்டன. இந்த கட்டுப்பாட்டு அறைக்கு அதிகமான மின்னணு இயந்திரங்கள் தொடர்பான புகார்கள் வந்தன.


நாமக்கல் கவிஞர் மாளிகையில் ஒரு கட்டுப்பாட்டு அறை செயல்பட்டது. 24 மணி நேரமும் செயல்பட்ட இங்கு 120 கால் அட்டண்டர்கள் பணியாற்றி வந்தனர். இங்கு நாள் ஒன்றுக்கு சராசரியாக 12 ஆயிரம் போன் அழைப்புகள் வந்தன. கடந்த ஒரு வாரத்தில் இந்த போன்கால்கள் மேலும் கூடுதலாக வந்தன. இதில் போலி புகார்கள் பல இருந்தாலும் இதனை சாதுர்யமாக கையாண்டனர் ஊழியர்கள்.


கடந்த இரண்டரை மாதங்களாக ரிப்பன் மாளிகையில் ஒரு குழு செயல்பட்டது. 36 பேர் கொண்ட இவர்கள் வெப்காமிரா மூலம் மாவட்ட தலைமை தேர்தல் அலுவலகம் மற்றும் சில முக்கிய ஓட்டுச்சாவடிகளை கண்காணித்தனர்.


இது போல் வாக்குச்சாவடிக்கென ஒரு தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்தவர்கள் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட பணியை துரிதமாக மேற்கொண்டனர். பல ஊழியர்கள் வாக்குச்சாவடிக்கு முந்தைய நாளே சென்று இங்கு பலர் கொசுக்கடியிலும் அவதிப்பட்டனர்.


தேர்தல் நடத்துவதற்கு பின்னால் அத்தனை ஊழியர்கள் தங்களின் பங்களிப்பை ஜனநாயகத்தில் ஒரு பெருமையாக கருதுவதாக சென்னையை சேர்ந்த ஒரு ஊழியர் தெரிவித்தார். வெற்றிகரமாக தேர்தலை முடிக்க துணையாக நின்ற அனைவருக்கும் ஒரு சபாஷ் போடுவோமே.

Advertisement




வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நானும் அரசியல்வாதிதான்... - அம்பை - வீகேபுரம்,இந்தியா
18-மே-201619:50:42 IST Report Abuse
நானும்  அரசியல்வாதிதான்... மனபூர்வமான வாழ்த்து௧ள்.. இந்த தேர்தலில் ஏதாவது குறையி௫ந்தால் ௮டுத்த தேர்தலில் சரிபண்ணவும்... பணம் ௧ொடு௧ிற விசயத்தில் வாங்௧ிறவர்௧ள் திருந்தாத வரை மாற்றவே முடியாது....
Rate this:
Cancel
VILLAN - chennai,இந்தியா
18-மே-201618:57:25 IST Report Abuse
VILLAN 24 மணி நேரம் 3 ஷிப்ட் ஆக பணி செய்தவர்கள் அல்ல நாங்கள்.... 24 மணி நேரம் முழுமையாக பணி செய்த காவலர்கள் ..... சொந்த வீட்டில் 3 மணி நேரம் கூட தொடர்ச்சியாக thoonga koduthu vaikatha adimaigal
Rate this:
Cancel
VILLAN - chennai,இந்தியா
18-மே-201618:55:14 IST Report Abuse
VILLAN தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதலாக அதே கொசுகடியிலும், மொட்ட வெயிலிலும் பணி செய்த காவலர்கள் உங்கள் கண்களுக்கு மட்டும் ஏன் மனிதனாக தெரிய வில்லையோ????????????
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X