உண்ணாவிரதத்தை கைவிட்டார் சந்திரபாபு: தலைவர்களின் வேண்டுகோளை ஏற்றார்

Updated : டிச 26, 2010 | Added : டிச 24, 2010 | கருத்துகள் (7)
Share
Advertisement
ஐதராபாத் :காலவரையற்ற உண்ணாவிரதத்தால் உடல் நிலை மோசமடைந்து, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட, தெலுங்குதேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, நேற்று மாலை தன் உண்ணாவிரதத்தை கைவிட்டார். அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட பல தரப்பிலும் விடுக்கப்பட்ட வேண்டுகோளை ஏற்று இந்த முடிவை எடுத்தார்.ஆந்திராவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, கூடுதல்

ஐதராபாத் :காலவரையற்ற உண்ணாவிரதத்தால் உடல் நிலை மோசமடைந்து, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட, தெலுங்குதேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, நேற்று மாலை தன் உண்ணாவிரதத்தை கைவிட்டார்.

அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட பல தரப்பிலும் விடுக்கப்பட்ட வேண்டுகோளை ஏற்று இந்த முடிவை எடுத்தார்.ஆந்திராவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, கூடுதல் நிவாரணம் வழங்க வலியுறுத்தி, தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டார். தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்ததால், அவரது உடல் நிலை மோசமடைந்தது. உடன் போலீசார், வலுக்கட்டாயமாக அழைத்து சென்று ஐதராபாத் நிஜாம் மருத்துவமனையில் அவரைச் சேர்த்தனர்.ஆனால், மருத்துவமனையிலும் அவர் உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். ஏழு நாட்களாக உண்ணாவிரதம் இருந்ததால், அவரது உடல்நிலை மோசமடைந்தது.


இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு அவர் தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டார். அங்கு டாக்டர்கள் அவருக்கு வலுக்கட்டாயமாக குளுக்கோஸ் ஏற்றி, சிகிச்சை அளித்தனர். இதனால், அவரது உடல் நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டது. நாடித்துடிப்பும் சீரானது. இதனிடையே, விவசாயிகளுக்கு நீதி வழங்க வேண்டும் என கோரி ஆந்திர சட்டசபையிலிருந்து, தலைமை செயலகம் வரை தெலுங்குதேசம் மற்றும் இடதுசாரி கட்சியினர் நேற்று பேரணி நடத்தினர். பேரணியில் கலந்து கொண்ட தெலுங்குதேச கட்சியின் எம்.பி., நந்தமுரி ஹரிகிருஷ்ணா, மூத்த எம்.எல்.ஏ.,க்கள் நரசிம்மலு, நகம் ஜனார்த்தன ரெட்டி, முன்னாள் மத்திய அமைச்சர் எர்ரன் நாயுடு உட்பட கட்சி தலைவர்கள் சிலரை, போலீசார் பாதி வழியிலேயே தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.


அப்போது, தெலுங்குதேசம் கட்சி தலைவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது. பின்னர் எம்.எல்.ஏ.,க்கள் பயாலு கேசவ், அமர்நாத் ரெட்டி, வேணுகோபால் எம்.பி., ஆகியோர் தலைமையில் பேரணி தொடர்ந்து சென்று, தலைமை செயலகத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர். அதேநேரத்தில், போராட்டத்தை தீவிரப்படுத்துவது குறித்து தெலுங்குதேசம் மற்றும் இடதுசாரி கட்சி தலைவர்கள் என்.டி.ஆர்., பவனில் சந்தித்து, ஆலோசனை நடத்தினர். வரும் 26ம் தேதி குண்டூரில் மாபெரும் விவசாயிகள் மாநாட்டை நடத்த முடிவு செய்யப்பட்டது.


இந்த சூழ்நிலையில் நேற்று மாலை திடீர் திருப்பம் ஏற்பட்டது. காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்த சந்திரபாயு நாயுடு, திடீரென தன் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். அவர் இளநீர் குடித்து உண்ணாவிரதத்தை கைவிட்டார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் பிரகாஷ் கராத், இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் பரதன், ஐக்கிய ஜனதா தளம் தலைவர் சரத்யாதவ், ராஷ்டிரிய லோக்தளம் தலைவர் அஜித்சிங் உட்பட பல அரசியல் கட்சித் தலைவர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று அவர் இந்த முடிவை எடுத்ததாக, தெலுங்கு தேசம் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.


நாயுடுவை மருத்துவமனையில் சந்தித்த கராத்தும் மற்றும் தலைவர்களும், ""உங்களின் போராட்டம் முடிவுக்கு வந்து விட்டது. விவசாயிகளுக்காக தேசிய அளவில் சக்தி வாய்ந்த இயக்கம் ஒன்றை துவக்குவதே இனி நமது பணி,'' என்றனர்.


Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அசோக் - டொராண்டோ,கனடா
25-டிச-201019:22:16 IST Report Abuse
அசோக் Expected action, nothing surprise.
Rate this:
Cancel
Daniyal - Singapore,சிங்கப்பூர்
25-டிச-201018:47:37 IST Report Abuse
Daniyal மனவாடுகள் உண்ணாவிரதம் என்பதை ஒரு விளம்பரமாக கொண்டுள்ளார்கள், உதாரணம் ஜெகன் ரெட்டி, சந்திர பாபு நாய்டு, சந்திரா சேகர ராவ். தமிழ் நாடு நம்மாளுகளும், ஆந்திர மாணவடுகளும் மொத்த மக்கள் விரோத சக்திகள்.
Rate this:
Cancel
தி.பா.ரமணி - திருநெல்வேலி,இந்தியா
25-டிச-201015:15:50 IST Report Abuse
தி.பா.ரமணி யோவ் ஹைடெக் நாய்டு இப்படி காமெடி நயுடுவாகிட்டேரே ! அதுசரி இப்படி பாதிலேயே விட்டுட்டா பாவம் இந்த விவசாயிகள் பிரச்சினை என்னாவது ? உங்களை மாதிரி அவங்களுக்காக உயிரை விட யார் இருக்காக ? சொல்லுங்க .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X