அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., ஆட்சி சட்டப்படி, நியாயப்படி, முறைப்படி நடக்கிறது: ஸ்டாலின்

Updated : டிச 24, 2010 | Added : டிச 24, 2010 | கருத்துகள் (47)
Share
Advertisement
தேனி :""தி.மு.க., ஆட்சி சட்டப்படி, நியாயப்படி, முறைப்படி நடக்கிறது'' என தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே, நடந்த விழாவில் துணை முதல்வர் ஸ்டாலின் பேசினார். ஆண்டிபட்டி அருகே, தேக்கம்பட்டியில் சமத்துவபுரம் திறப்பு விழா மற்றும் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. துணை முதல்வர் ஸ்டாலின் சமத்துவபுரத்தை திறந்து வைத்து பேசியதாவது: பேசுவதை விட செயலில் காட்ட வேண்டும்

தேனி :""தி.மு.க., ஆட்சி சட்டப்படி, நியாயப்படி, முறைப்படி நடக்கிறது'' என தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே, நடந்த விழாவில் துணை முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

ஆண்டிபட்டி அருகே, தேக்கம்பட்டியில் சமத்துவபுரம் திறப்பு விழா மற்றும் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.


துணை முதல்வர் ஸ்டாலின் சமத்துவபுரத்தை திறந்து வைத்து பேசியதாவது: பேசுவதை விட செயலில் காட்ட வேண்டும் என்ற பழமொழி உண்டு. அதையே நானும் கடைபிடித்து வருகிறேன். எங்கள் ஆட்சி சட்டப்படி, நியாயப்படி, முறைப்படி நடக்கிறது. பயனாளிகளை தேர்வு செய்வதில் கட்சி பாகுபாடு பார்ப்பதில்லை. ஜாதி, மத பேதமற்ற சமுதாயத்தை அமைக்கவே சமத்துவபுரங்களை திறந்து வருகிறோம். 1991 முதல் 96 வரை 145 சமத்துவபுரங்கள் திறக்கப்பட்டன. அதற்கு பின் ஆட்சி மாற்றம் வந்தது.தி.மு.க., கொண்டு வந்த திட்டம் என்பதால், அ.தி.மு.க., அரசு இத்திட்டத்தை கைவிட்டது. அத்தோடு சமத்துவபுரம் வீடுகளை பராமரிக்கவும் மறுத்துவிட்டது.


மகளிர் சுய உதவி குழுக்களை தேர்தல் ஆதாயத்துக்காகவோ, அரசியலுக்காகவோ ஆரம்பிக்கவில்லை. பெண்கள் சுயமரியாதையுடன் வாழ வேண்டும் என்பதற்காகத் தான் துவக்கப்பட்டது.இன்று பெண்கள் முன்னேற்றம் அடைந்துள்ளனர். வருங்காலத்தில் பெண்கள் இல்லாமல் எதையும் செய்ய முடியாது. நீங்கள் நினைப்பது தான் நடக்கும். தி.மு.க., அரசு மட்டுமே மகளிருக்கு சலுகைகளை வழங்கி வருகிறது.உயிர் காக்கும் அரசு காப்பீட்டு திட்டத்தை உலகமே போற்றுகிறது. அமெரிக்க அதிபர் ஒபாமாவே இதை செயல்படுத்த போகிறார். கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றி உள்ளது. தி.மு.க., அரசு. திட்டங்களையும், சாதனைகளையும் தொடர்ந்து நிறைவேற்றி வரும் இந்த ஆட்சிக்கு நீங்கள் பெருமை சேர்க்க வேண்டும்.இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.


Advertisement




வாசகர் கருத்து (47)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
a.Rahman - sharjah,ஐக்கிய அரபு நாடுகள்
26-டிச-201000:27:04 IST Report Abuse
a.Rahman மக்கள் இன்னும் தூங்கிகிட்டுத்தான் இருக்கிறாங்க என்பதை உண‌ர்ந்தவர் ந‌ம்ம (துணை)முதல்வர்‌
Rate this:
Cancel
kumar - germany,ஜெர்மனி
26-டிச-201000:06:32 IST Report Abuse
kumar தம்பி ஸ்டலின் ஒரு பாலம் கட்டுதல் கட்டுமானம் கட்டுதல் பூங்கா கட்டுதல் போன்ற கட்டுமானதுரையை மட்டும் கட்டுறார்
Rate this:
Cancel
prabaharan - chennai,இந்தியா
25-டிச-201021:49:47 IST Report Abuse
prabaharan stalin has all the capabilities to be a good CM. he is a very good admistrator
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X