25 ஆண்டுக்கு பின் என்.ஐ.டி., மாணவர் சந்திப்பு : திருச்சியில் குடும்பத்தினருடன் நெகிழ்ச்சி| Dinamalar

25 ஆண்டுக்கு பின் என்.ஐ.டி., மாணவர் சந்திப்பு : திருச்சியில் குடும்பத்தினருடன் நெகிழ்ச்சி

Added : டிச 25, 2010 | கருத்துகள் (8)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
25 ஆண்டுக்கு பின் என்.ஐ.டி., மாணவர் சந்திப்பு : திருச்சியில் குடும்பத்தினருடன் நெகிழ்ச்சி

திருச்சி: கடந்த 1981-85ம் ஆண்டு படித்த என்.ஐ.டி., மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி, திருச்சியில் நேற்று நெகிழ்ச்சிகரமாக நடந்தது."பசுமை நிறைந்த நினைவுகளே... பாடித்திரிந்த பறவைகளே... பழகிக் கழித்த தோழர்களே பறந்து செல்கின்றோம்' என்று சோகத்துடன் பிரிந்து செல்லும் பள்ளி, கல்லூரி மாணவர்களை மட்டுமே கண்கூடாக பார்க்க முடிகிறது. சோகத்துடன் பிரிந்த சம்பவத்தை விடுத்து, மகிழ்ச்சியுடன் மாணவர்கள் கூடி கலக்கும் நிகழ்வுகள் மிகச்சிலவே. அதில் ஒன்றாக, திருச்சி ஆர்.இ.சி.,யில் (தற்போது என்.ஐ.டி) 1981-85ம் ஆண்டு படித்த மாணவர் ஒன்று கூடிய சம்பவம் நேற்று திருச்சியில் நடந்தேறியது.கால் நூற்றாண்டுக்கு பிறகு, கல்லூரி நண்பர்கள் சந்திப்பு நிகழ்ச்சி திருச்சி எஸ்.ஆர்.எம்., ஹோட்டலில் அரங்கேறியது.


அப்போதைய ஆர்.இ.சி.,, முதல்வர் முதல்வராக இருந்த பி.எஸ். மணிசுந்தரம் பேசியபோது, "" 25 ஆண்டுக்கு முன் கல்லூரியில் படித்த என் மாணவர்களை சந்திப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. மாணவர் அனைவரும் சமுதாயத்துக்கு சேவை செய்யவேண்டும்,'' என்றார்.


தற்போதைய என்.ஐ.டி., இயக்குனர் சிவன் பேசியபோது, ""முன்னாள் மாணவர்களை சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழகத்தில் மிகச்சிறந்த கல்வி நிறுவனமாக திருச்சி என்.ஐ.டி., விளங்குகிறது,'' என்றார்.


முன்னதாக, முன்னாள் மாணவர் கார்த்திகேயன் வரவேற்றார். முன்னாள் பேராசிரியர்கள் எம்.சண்முகம், வெங்கட் ரமணி, கே.பி., மொஹைதீன், ஆர்க்கிடெக் சண்முகம், ஆர்க்கிடெக் ரமணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை, எல்.ஆதிமூலம், கார்த்திகேயன், சுரேஷ், பாஸ்கர், முத்துரத்தினம் செய்திருந்தனர். கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இலங்கை, நேபாளம் உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த முன்னாள் மாணவர் குடும்பத்துடன் பங்கேற்றனர்.என்.ஐ.டி., மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் மற்றும் வானவேடிக்கை நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது. "பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ' என்று மவுனமாக துவங்கிய சந்திப்பு வைபவம், நேரம் போக, போக மகிழ்ச்சியில் திக்குமுக்காட செய்தது.


Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
eswar - coimbatore,இந்தியா
25-டிச-201022:08:38 IST Report Abuse
eswar மனதை தொட்ட மந்திர நிகழ்ச்சி உண்மையில் இது அற்புத எழுச்சி தொடரட்டும் இந்த புரட்சி ஈஸ்வர் கோவை 25
Rate this:
Share this comment
Cancel
siva - சென்னை..,இந்தியா
25-டிச-201016:21:29 IST Report Abuse
siva மிக்க மகிழ்ச்சி... இந்த உணர்வுகளை உறவுகளை விட்டு விடாமல் தொடருங்கள்..
Rate this:
Share this comment
Cancel
nesan - chennai,இந்தியா
25-டிச-201015:17:36 IST Report Abuse
nesan supeeeeeeeeerrrrrrrrrr............. no words only feeelings that is colleg memories.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X