ஜெ.,ஜெயம், அ.தி.மு.க்., மீண்டும் ஆட்சி, 32 ஆண்டுகளுக்கு பின், எம்,ஜி.ஆர்., சாதனை மிஞ்சினார் | அ.தி.மு.க., 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு 134ல் வெற்றி ஜெ.,க்கு ஜெயம்! :32 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆளுங்கட்சியே மீண்டும் ஆட்சியை பிடித்தது:தி.மு.க.,விற்கு வலுவான எதிர்க்கட்சி அந்தஸ்து Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ஜெ.,ஜெயம், அ.தி.மு.க்., மீண்டும் ஆட்சி, 32  ஆண்டுகளுக்கு பின், எம்,ஜி.ஆர்., சாதனை மிஞ்சினார்

தமிழக சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., 234 தொகுதிகளிலும், தனித்து போட்டியிட்டு, 134ல் வெற்றி பெற்றுள்ளது. 32 ஆண்டு களுக்கு பின், ஆளுங்கட்சியே மீண்டும் ஆட்சியை பிடித்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

ஜெ.,ஜெயம், அ.தி.மு.க்., மீண்டும் ஆட்சி, 32  ஆண்டுகளுக்கு பின், எம்,ஜி.ஆர்., சாதனை மிஞ்சினார்

தமிழக அரசியல் வரலாற்றில், எம்.ஜி.ஆருக்கு பின், தொடர்ந்து, இரண்டாவது முறையாக, ஆட்சியை பிடித்த முதல்வர் என்ற பெருமையை, ஜெயலலிதா பெற்றுள்ளார். ஆட்சியை பிடிக்கும் என, எதிர்பார்க்கப்பட்ட தி.மு.க., வலுவான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது.

தமிழகத்தில், 1957ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது; காமராஜர் முதல்வரானார். அடுத்து, 1962ல் நடந்த தேர்தலிலும், காங்கிரஸ் வெற்றி பெற்று, காமராஜர், இரண்டாவது முறையாக, முதல்வராக தேர்வானார்.

தி.மு.க.,வில் இருந்து பிரிந்து, அ.தி.மு.க.,வை துவக்கிய எம்.ஜி.ஆர்., 1977 சட்டசபை தேர்தலில், 200 இடங்களில் போட்டியிட்டு, 130 இடங்களில் வெற்றி பெற்றார்; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டு சேர்ந்து, தேர்தலை சந்தித்த எம்.ஜி.ஆர்., முதல்வரானார். அடுத்து, 1980ல் லோக்சபா தேர்தல் நடந்தது. எம்.ஜி.ஆர்., மத்தியில் ஆட்சியில் இருந்த, ஜனதா கட்சியுடன் கூட்டணி சேர்ந்தார். தி.மு.க., வோ, காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்தது.

இக்கூட்டணி, 37 இடங்களில் வெற்றி பெற்றது; அ.தி.மு.க., இரு இடங்களில் மட்டும் வெற்றி பெற்றது. பிரதமராக பொறுப்பேற்ற இந்திரா, தமிழகத்தில் அ.தி.மு.க., ஆட்சியை கலைத்தார்.
எம்.ஜி.ஆர்., காலம்இதனால், 1982ல் நடக்க வேண்டிய, தமிழக சட்டசபை தேர்தல், முன்கூட்டியே, 1980ல் நடந்தது. இந்த தேர்தலில், 177 தொகுதிகளில் போட்டியிட்ட, அ.தி.மு.க., 129 இடங்களில் வெற்றி பெற்றது;

இரண்டாவது முறையாக, எம்.ஜி.ஆர்., முதல்வராக பொறுப்பேற்றார்.பிரதமராக இருந்த இந்திரா, 1984 அக்டோபரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இடைக்கால பிரதமராக பொறுப்பேற்ற ராஜிவ், லோக்சபா தேர்தலை நடத்த முடிவு செய்தார். அப்போது எம்.ஜி.ஆர்., உடல் நலக்குறைவு ஏற்பட்டு, சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார்.

அப்போது, காங்கிரசுடன் இணக்கம் ஏற்பட்ட தால், தமிழக சட்டசபையை கலைத்து விட்டு, தேர்தலை சந்திக்க எம்.ஜி.ஆர்., முடிவு செய்தார். இதன் காரணமாக, 1984ல் லோக்சபா தேர்த லுடன், தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில், அ.தி.மு.க., 162 தொகுதிக ளிலும், காங்கிரஸ், 72 தொகுதி களிலும் போட்டியிட்டன. இதில், அ.தி.மு.க., 132

இடங்களிலும், காங்கிரஸ், 61 இடங்களிலும் வெற்றி பெற்றன. பிரசாரத்திற்கு வராமலே, எம்.ஜி.ஆர்., வெற்றி பெற்று முதல்வரானார்.

எம்.ஜி.ஆருக்கு தனிப்பட்ட செல்வாக்கு இருந்த போதும், பிற கட்சிகளுடன் கூட்டணி அமைத்தே வெற்றி பெற்றார். ஆனால், முதன் முறையாக, 2014 லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., தனித்து போட்டியிட்டு, 39 தொகுதிகளில், 37 இடங்களை கைப்பற்றி சாதனை படைத்தது.

234 தொகுதிகளிலும்...:அதே நம்பிக்கையுடன், சட்டசபை தேர்தலிலும், அ.தி.மு.க., தனித்து களம் இறங்கியது. அ.தி.மு.க.,வின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட முன்வந்த, இந்திய குடியரசு கட்சி, சமத்துவ மக்கள் கட்சி, கொங்கு இளைஞர் பேரவை, மனித நேய ஜனநாயக கட்சி, தமிழ் மாநில முஸ்லிம் லீக், முக்குலத்தோர் புலிப்படை ஆகியவற்றை இணைத்துக் கொண்டு, முதன் முறையாக அ.தி.மு.க., 234 தொகுதிகளிலும், களம் இறங்கியது.

தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி; தே.மு.தி.க., - மக்கள் நலக் கூட்டணி;பா.ஜ., மற்றும் பா.ம.க., என, பல முனை போட்டி நிலவியது, அ.தி.மு.க.,வுக்கு சாதகமானது. தேர்தலில், 134 இடங்களை பிடித்து, ஆட்சியை தக்கவைத்தது. எம்.ஜி.ஆருக்கு பின், தொடர்ந்து, இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்து, ஜெயலலிதா சாதனை படைத்துள்ளார். எம்.ஜி.ஆர்., கூட்டணி அமைத்து போட்டி யிட்டார். ஜெயலலிதா கூட்டணி இல்லாமலே, 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு, அமோக வெற்றி பெற்று சாதனை படைத்துள் ளார்.

ஆறாவது முறையாக ஜெ., பதவியேற்பு:தமிழகத்தில், 1991 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. முதல்வராக ஜெயலலிதா, முதன் முறையாக பதவியேற்றார். அதன்பின், 2001ல், மீண்டும் முதல்வரானார்; டான்சி வழக்கு காரணமாக, பதவி விலகினார்; வழக்கில் இருந்து விடுதலையான பின், மீண்டும் முதல்வரானார்.

அடுத்து, 2011 தேர்தலில்வெற்றி பெற்று முதல்வரானார்; சொத்து குவிப்பு வழக்கு காரணமாக, பதவி இழந்தார்; அவ்வழக்கில் இருந்து விடுதலையானதும், மீண்டும் முதல்வரானார்.

தற்போது, 2016 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, ஆறாவது முறையாக, முதல்வராக உள்ளார்.
* ஜெயலலிதா தலைமையிலான, புதிய அமைச்சரவையின் பதவியேற்பு விழா, 23ம் தேதி, சென்னை பல்கலை நுாற்றாண்டு விழா அரங்கில் நடைபெறும் என, தகவல் வெளியாகி உள்ளது.
* ஆட்சியை பிடிக்கும் என, எதிர்பார்க்கப்பட்ட தி.மு.க., வலுவான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை மட்டுமே பெற்றுள்ளது. தி.மு.க., - காங்., கூட்டணி, 98 இடங்களை பிடித்துள்ளன. இதில், தி.மு.க., மட்டும், 89 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது.

பிரதமர், கவர்னர் ஜெ.,க்கு வாழ்த்து:

Advertisement

தமிழகத்தில், மீண்டும் ஆட்சியை பிடித்துள்ள ஜெயலலிதாவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி, கவர்னர் ரோசையா, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, பா.ஜ., - எம்.பி., தருண் விஜய் ஆகியோர், தொலைபேசியில் தொடர்பு கொண்டு, வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

'வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன்': தேர்தலில் பெரும் வெற்றியை தந்த, தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ள, முதல்வர் ஜெயலலிதா, தேர்தல்அறிக்கையில் அளிக்கப் பட்டுள்ள வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவேன் என, உறுதியளித்து உள்ளார்.அவரது அறிக்கை:வெற்றி மீது வெற்றி வந்து என்னை (நம்மை) சேரும் என்ற, எம்.ஜி. ஆர்., பாடல் வரிகளுக்கேற்ப, நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.,வுக்கு மகத்தான வெற்றியை அளித்துள்ளனர். என்னை, மீண்டும் தொடர்ந்து முதல்வராக தேர்வு செய்து, ஒரு சரித்திர சாதனையை ஏற்படுத்திய மக்களுக்கு, என் நெஞ்சார்ந்த நன்றி.

இந்த வெற்றியை எனக்கு அளித்த தமிழக மக்களின் பால், எனக்கு எழுகிற உணர்ச்சிப் பெருக்கு, உள்ளத்தில் எழுகிற நன்றி உணர்ச்சி, இவற்றை விவரிக்க, அகராதியில் வார்த்தைகளே இல்லை.

தி.மு.க.,வின் பொய் பிரசாரங்களை பொடி பொடியாக்கி, உன்னதமான, உத்தமமான, உண்மையான ஜனநாயகத்தை நிலைநாட்டியது, இந்த தேர்தல். குடும்ப ஆட்சிக்கு, நிரந்தர முற்றுப்புள்ளி வைத்த தேர்தல். குடும்பத்தோடு ஓட்டு கேட்டவர்களை, குழி தோண்டி புதைத்த தேர்தல். தமிழக மக்களை நம்பாமல், கருத்துக் கணிப்புகளை நம்பிய கட்சிக்கு, எதிர்பார்த்த தோல்வியை கொடுத்த தேர்தல்.தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்டுள்ள வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவேன் என்றும்; இந்தியாவிலே, தமிழகத்தை அனைத்து துறைகளிலும் முதன்மை மாநிலமாக்க, தொடர்ந்து அல்லும் பகலும், அயராது உழைப்பேன் என்றும் உறுதியளிக்கிறேன்.
எம்.ஜி.ஆருக்கு பின், 1984ம் ஆண்டுக்கு பின், தொடர்ந்து ஆட்சியில் உள்ள கட்சியே வெற்றி பெற்ற பெருமையை, எனக்கு அளித்த மக்களுக்கும், தேர்தலில், கட்சி வெற்றிக்காக உழைத்த தொண்டர்களுக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும், தோழமை கட்சி தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும், என் நெஞ்சார்ந்த நன்றி.புதுச்சேரி மற்றும் கேரள மாநிலத்தில் உள்ள, ஏழு சட்டசபை தொகுதிகளில் போட்டியிட்ட, அ.தி.மு.க., வேட்பாளர்களுக்கு ஓட்டளித்த அனைவருக்கும் என் நன்றி.இவ்வாறு முதல்வர் ஜெ., தெரிவித்து உள்ளார்.

ஆண்டவனை நம்பி...!: சென்னை, போயஸ் கார்டனில், பத்திரிகையாளர்களிடம் முதல்வர் ஜெ., பேசியதாவது:கடந்த 1984க்கு பின், தமிழகத்தில் ஆளுகிற கட்சி, தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று, ஆட்சியை தொடர்வது, இப்போது தான் நடந்திருக்கிறது. 10 கட்சிகள் சேர்ந்து என்னை எதிர்த்த போதிலும், பெரிய கூட்டணி என்று எதுவும் இல்லாத போதும், நான் ஆண்டவனை நம்பி, மக்களோடு கூட்டணி வைத்துக் கொண்டேன்.

மக்கள் குரலே மகேசன் குரல் என்பர். ஆண்ட வன் என்றால், கடவுள் என்றும் எடுத்துக் கொள்ளலாம்; மக்கள் என்றும் எடுத்துக் கொள்ளலாம். மக்கள் என்னை கைவிட வில்லை. மக்கள் என் மீது நம்பிக்கை வைத்துள்ளனர் என்று, பலமுறை சொல்லி இருக்கிறேன். நானும், தமிழக மக்கள் மீது அளவற்ற நம்பிக்கை வைத்துள்ளேன்.

'மக்களால் நான், மக்களுக்காகவே நான்' என்ற தாரக மந்திரம் அடிப்படையில் செயல்படு கிறேன்; இனியும், தொடர்ந்து செயல்படுவேன். என் வாழ்வு, தமிழக மக்களுக்கு அர்ப்பணிக்கப் பட்டது. தமிழக மக்களுக்கு நன்றியை வெளிப் படுத்தும் விதமாக, புதிய உத்வேகத்துடன் செயல்படுவேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Advertisement

வாசகர் கருத்து (333)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M.Vinothkumar - Namakkal,இந்தியா
20-மே-201622:58:04 IST Report Abuse

M.Vinothkumarமலரே உனக்கு வெக்கமே இல்லையா. எம் ஜி ஆர் சாதனையை நெருங்க கூட முடியாது இவரால். தொடர்ந்து 10 வருடங்கள் ஆட்சியில் இருந்தவர் அவர். மனிதர்களை மனிதராக மதிக்க கூடியவர் அவர். இவர் போல மனிதர்களை மாடுகளாக நடத்த மாட்டார். இவரின் பெங்களுரு நாட்களை வசதியாக மறைத்து விட்டீர்கள். இவரும் கூட்டணி தானே அமைத்து இருந்தார்.. 134 இல் 3 தொகுதிகள் கூட்டணி தானே ? DMK , ADMK நேரிடையாக மோதிய 170 இல் DMK வெற்றி பெற்று இருப்பது 89 இல். ADMK 81. தயவு செய்து உண்மையின் உரைகல் என்று சொல்லி கொள்ளாதீர்கள் இனி மேலும்.

Rate this:
Otran - chennai  ( Posted via: Dinamalar Windows App )
20-மே-201622:05:16 IST Report Abuse

Otranஐயா இந்த தேர்தலில் திமுக வெற்றி பெறக் கூடாது என்று கடவுள கடவுள கடவுள என்று வேண்டாத கடவுள் இல்லை தேர்தல் முடிவு வந்தவுடன் Rs:100/ ஐ கோவில் உண்டியலில் செலுத்திய பின்தான் மனது நிம்மதி அடைந்தது. என்னைப்போல் பலர் அந்த நிலமையில் தான் இருந்தனர். பொய்யையும் பித்தலாட்டமும் சூதும் நிறைந்த கட்சியிடம் ஆட்சியை மக்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

Rate this:
N.Purushothaman - Cuddalore,இந்தியா
20-மே-201620:15:53 IST Report Abuse

N.Purushothamanஇந்த தடவை விஷன் 2020 2016 குள்ளேயே முடிச்சிட்டதால விஷன் 2050 கூடிய விரைவில் வரும்......

Rate this:
மேலும் 330 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X