மோடியின் கனவை நனவாக்கிய சர்பானந்தா சோனவால் Dinamalar
பதிவு செய்த நாள் :
மோடியின் கனவை நனவாக்கிய
சர்பானந்தா சோனவால்

பா.ஜ.,வில் சேர்ந்து ஐந்தே ஆண்டுகளில், மாநில முதல்வராக உருவெடுத்த அரிய சாதனையை, சர்பானந்தா சோனவால், 54, படைத்துள்ளார்.

மோடியின் கனவை நனவாக்கிய சர்பானந்தா சோனவால்

அசாமில், சட்ட விரோதமாக குடியேறியோர் தொடர்பான விவகாரம், 1992ல் பூதாகரமாக உருவெடுத்தது. அப்போது, அனைத்து அசாம் மாணவர் சங்கத்தில், சர்பானந்தா சேர்ந்தார். 1999 வரை, அதில் தீவிர பங்காற்றினார்.

கடந்த 2001ல், அசாம் கனபரிஷத்தில் சேர்ந்தார். அந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில்,

சர்பானந்தா வென்றார். 2004ல் நடந்த லோக்சபா தேர்தலில், காங்., வேட்பாளராக போட்டியிட்ட, முன்னாள் மத்திய அமைச்சர் பபன் சிங் கடோ வாரை வென்று, சர்பானந்தா ஆச்சரியப்பட வைத்தார்.

இருப்பினும், 2009ல் நடந்த லோக்சபா தேர்தலில், அவர் தோல்வியை தழுவ நேரிட்டது. இதை தொடர் ந்து, 2011ல், பா.ஜ.,வில், சர்பானந்தா ஐக்கியமானார். 2014 லோக்சபா தேர்தலில் வென்ற சர்பானந்தா, மத்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக பொறுப் பேற் றார். துடிப்பான செயலாற்றல், அரவணைத்து செல்லும் பாங்கை கண்ட பிரதமர் மோடி, சர்பானந்தாவை, முதல்வர் வேட்பாளராக அறிவித்தார்.

மோடியின் நம்பிக்கையை நனவாக்கும் வகையில், தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ள சர்பானந்தா, அசாம் மாநிலத்தில், பா.ஜ., சார்பாக முதல்வராகி, வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். அரசு எதிர்கொள்ளும் பிரச்னைகள்

* சட்ட விரோத குடியேற்றம்: வங்கதேசத்திலிருந்து,

Advertisement

அசாமுக்குள் முஸ்லிம்கள் அதிகளவில் ஊடுருவி வருகின்றனர். அசாமுக்குள் ஊடுருவும் முஸ்லிம்களுக்கு, ஆளும் காங்., உதவி வருவதாக, பா.ஜ., கடும் குற்றச்சாட்டை முன்வைத்து பிரசாரம் செய்தது
* அசாமில், மலைவாழ் பழங்குடிகளாக, அஹோம், மோரான் உள்ளிட்ட ஆறு இனத்தவர் உள்ளனர். இவர்களுக்கு, மலைவாழ் இனத்தவர் அந்தஸ்து வழங்குவதாக, பிரதமர் மோடி உறுதி கூறியுள்ளார்
* அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில், போதிய உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப் படவில்லை என்ற குறை, மக்களி டையே பரவலாக காணப்படுகிறது
* அசாம் மாநில அரசு அலுவலகங்களில், அனைத்து துறைகளிலும், ஊழல் தலை விரித் தாடுவதாக, மக்கள் கவலைப்படுகின்றனர். இதை சுட்டிக்காட்டி, தேர்தல் பிரசாரம் செய்த பா.ஜ., தலைவர்கள், ஊழலை ஒழிப்பதாக உறுதி கூறியுள்ளனர்
* அசாம் மாநில காடுகளில், மிக அரிதாக காணப்படும், ஒற்றை கொம்பு காண்டாமிருகம் வேட்டையாடப்பட்டு வருகிறது; அழிந்து வரும் இந்த காண்டாமிருகத்தை காப்பாற்றுவதும், முக்கிய பிரச்னையாக, தேர்தல் பிரசாரத்தில் முன்வைக்கப்பட்டது.

- நமது சிறப்பு நிருபர் -

Advertisement

வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ganapati sb - coimbatore,இந்தியா
20-மே-201615:13:00 IST Report Abuse

ganapati sbவாழ்த்துக்கள் வளரட்டும் அஸ்ஸாம் சர்பானந்தா தலைமையில்

Rate this:
Sham - Ct muththur,இந்தியா
20-மே-201614:14:13 IST Report Abuse

Sham தேசப்பற்று நிறைந்த அஸ்ஸாம் மக்களுக்கு வாழ்த்துக்கள்...

Rate this:
Sivagiri - chennai,இந்தியா
20-மே-201613:20:25 IST Report Abuse

Sivagiriமோடி - அஸ்ஸாமில் அஸ்ஸாம் பிரச்சினையை தீர்பாராம் . . . வடகிழக்கு மாநிலங்களில் அவர்களின் பிரச்சினையை தீர்பாராம் - தமிழ்நாட்டுக்கு வந்தால் மட்டும் தமிழ்நாட்டு மக்கள் பிரச்சினை ஒன்று கூட கண்ணுக்கு தெரியாது - தேசிய நீரோட்டம் என்று வடக்கத்தி பாணியில் பேசுவார் . . . வடக்கை வாழ வைப்பதற்கு நாம் ஓட்டு போடுங்கள் என்று கேட்பாராம் . . . காவிரியில் வைகையில் 12 மாதங்களும் தண்ணீர் ஓட வைப்போம் / கோதாவரியை தாமிரபரணியுடன் இணைப்போம் . . . மீத்தேனை விவசாய நிலத்தில் எடுக்காமல் கடல் நடுவில் எடுப்போம் எரிவாயு குழாய்கள் நெடுஞ்சாலை அல்லது ரயில்வே பாதைகளில் கொண்டு செல்வோம் - தமிழை கொண்டாடுவோம் - இலங்கையில் தமிழ் மாநிலம் அமைப்போம் - கச்சத் தீவில் தமிழ்கொடி பறக்கும் - இன்றே ஜல்லிக் கட்டு நடக்கும் - தமிழ்நாடு முழுவதும் மின்சார இரட்டை ரயில்பாதை ஒரே வருடத்தில் அமைப்போம் - சென்னையில் மும்பைக்கு நிகரான தொழில்கள் கொண்டு வருவோம் - இப்படி தமிழ்நாட்டுக்கு வந்து தமிழ்நாட்டு பிரச்சனைகளை பேசி - அதை தீர்ப்போம் இதை தீர்ப்போம் - என்று உறுதி கொடுத்தால் பி.ஜே.பி.க்கும் ஓட்டு விழும் . . . இல்லாவிட்டால் இன்னும் எத்தனை நூறு ஆண்டு ஆனாலும் எந்த வடக்கத்தி கட்சிகளுக்கும் இங்கே இடமில்லை . . . இங்கே உள்ள காங்கிரஸ் / பி.ஜே.பி காரர்கள் உணர்ந்தால் நல்லது . . .

Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X