மக்களை மகிழ்வித்த கதாகாலட்சேபம், வரலாற்று நினைவாக மாறிவருகிறது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மக்களை மகிழ்வித்த கதாகாலட்சேபம், வரலாற்று நினைவாக மாறிவருகிறது

Added : மே 21, 2016
Share
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றி மக்களை மகிழ்வித்த 'கதாகாலட்சேபம்' தற்போது வரலாற்று நினைவுகளில் ஒன்றாகி வருகிறது. கதைகளின் வரலாறுகுழுவாக வாழ்ந்த மனிதர்களின் முக்கியத்தொழிலாக இருந்தது வேட்டையாடுதல் மட்டுமே. இந்த காலகட்டத்தில் தான் கதைகள் தோன்றியிருக்கலாம். காட்டுக்கு வேட்டைக்கு செல்லும் மனிதர்கள், தாங்கள் எதிர்கொண்ட பிரச்னைகள், சவால்கள், புதுவித மிருகங்கள்,

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றி மக்களை மகிழ்வித்த 'கதாகாலட்சேபம்' தற்போது வரலாற்று நினைவுகளில் ஒன்றாகி வருகிறது.
கதைகளின் வரலாறுகுழுவாக வாழ்ந்த மனிதர்களின் முக்கியத்தொழிலாக இருந்தது வேட்டையாடுதல் மட்டுமே. இந்த காலகட்டத்தில் தான் கதைகள் தோன்றியிருக்கலாம். காட்டுக்கு வேட்டைக்கு செல்லும் மனிதர்கள், தாங்கள் எதிர்கொண்ட பிரச்னைகள், சவால்கள், புதுவித மிருகங்கள், பூக்கள், மரங்கள், வேட்டையாடிய முறைகள் குறித்து தங்கள் குழுவிலுள்ளவர்களுக்கு தெரிவித்தனர். அதை கேட்ட மற்றவர்கள் மலைத்தும், அதிசயித்தும், கரவொலி எழுப்பியும் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தினர்.
கதாகாலட்சேபம்இப்படி குழுக்களாக வாழ்ந்த மனிதர்கள், தங்கள் வாழ்க்கை முறைக்கும், கற்பனைக்கும் தோன்றிய அளவில் சுவாரசியம் சேர்த்து கதைகள் உருவாக்கினர். இப்படி தோன்றிய கதைகள் பின், வந்த காலத்தில் பக்தியை வளர்க்கவும், நீதி, நேர்மை, ஒழுக்கம், தர்மம் ஆகியவை மக்கள் மனதில் நிலைத்து கட்டுப்பாட்டுடன் வாழவும் பயன்படுத்தப்பட்டன. புதியதாக உருவாக்கப்பட்ட இந்த கதைகள், அனைத்து மக்களிடமும் பரப்பவும், நிலைக்கவும் பல கலைகள் ஏற்படுத்தப்பட்டன. இதில் ஒன்றாக கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை நடைமுறையில் இருந்தது தான் 'கதாகாலட்சேபம்' ஆகும்.
அமைப்பு'கதாகாலட்சேபம்' என்பது சில அடிப்படை இசைக்கருவிகளுடன் ஒருவர் எதுகை, மோனையுடன், வசீகரமாக கதைகள் கூறுவது ஆகும். ஒரு சிறிய மேடை, அதன் மேல் பெட்ஷீட் போடப்பட்டிக்கும். அதில், மத்தளத்துடன் ஒருவர், ஜால்ராவுடன் ஒருவர், புல்லாங்குழலுடன் ஒருவர். இது தான் பின்னணி இசைக்கும் இசைக்குழு.
இவர்களுக்கு நடுவில் ஒருவர் கையில் பஜனை கட்டையுடன் அமர்ந்துகொண்டு கதை சொல்ல தொடங்குவார். கேலி, கிண்டல்களுடன் வார்த்தைகளை கோர்த்து சுவாரசியமாக தகவல்களையும் சேர்த்து கதைகள் சொல்வார். பஜனை கட்டையை தட்டி இவர் சொல்லும் கதைக்கு தகுந்தபடி பின்னணி இசைக்குழுவினர் தங்கள் பங்களிப்பை வழங்குவர். தற்போதுள்ளதை போல் எந்தவிதமான ஒலிபெருக்கி கருவிகள், மின் கருவிகள் இல்லாமல், பலருக்கு கேட்கும் அளவில் சத்தமான குரலை மட்டுமே நம்பி நடந்த நிகழ்ச்சி ஆகும். இதனை நிகழ்த்துபவர் தனது குரலாலும், தனக்குரிய பேச்சுத்திறனாலும் மக்களை மகிழ்விப்பார்.சரிவுபல நுாறு ஆண்டுகளுக்கு முன்பு உருவான, இந்த கதாகாலட்சேபம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. அதிக செலவு இன்றி எளிமையாக நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சிகளை அனைவரும் விரும்பினர். திருவிழா, முக்கிய நிகழ்ச்சி, பண்டிகை போன்ற விசேஷ நாட்களில் கிராமங்கள் மற்றும் நகரங்களிலும், குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை முக்கிய கோவில்களிலும் நடந்தன.தனிநபர் தனது திறமையால் கதை சொல்லும் இந்த நிகழ்ச்சி, பிரமாண்டமான நாடகங்களால் சிறிது பாதிப்படைந்தது. சினிமாவின் ஆதிக்கத்தால் அழியத்தொடங்கி, ரேடியா, 'டி.வி,.' யின் வருகையால் இந்த கலை மறைந்தே போனது. இந்த கலைக்கு வாழ்வை அர்ப்பணிந்த கலைஞர்கள் காலசூழ்நிலையால் வேறு தொழில், வேறு துறைகளுக்கு சென்று விட்டனர்.
நான்கு மணி நேரம் நடக்கும்மடத்துக்குளம் பகுதியிலுள்ளவர்கள் கூறுகையில், 'பல கி.மீ., தொலைவு நடந்து சென்றும், திருவிழா நடக்கும் கிராமங்களில் தங்கியும் 'கதாகாலட்சேபம்' பார்த்து, கேட்டு மகிழ்ந்தது உண்டு.இரவு தொடங்கி அதிகபட்சம் நான்குமணிநேரம் வரை நடக்கும். பலவித தகவல்களுடன், நாட்டு நடப்புகளையும் இணைத்து நகைச்சுவையாக சொல்லப்படும் கதைகளை கேட்பதே மிகவும் ரசிக்கும்படியாக இருக்கும். மக்கள் மனதில் நல்ல எண்ணங்களை ஏற்படுத்துவது தொடங்கி, சுதந்திரப் போராட்டம் வரை தனது பங்களிப்பை வழங்கிய 'கதாகாலட்சேபம்' தற்போது வரலாற்று நினைவுகளில் ஒன்றாகிப்போனது' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X