பொது செய்தி

தமிழ்நாடு

புகார் பெட்டி - கரூர்

Added : மே 22, 2016
Advertisement

கோவிலுக்கு அடிப்படை வசதிகள் வேண்டும்: நெரூர் சதாசிவ கோவிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இங்கு, போதுமான அடிப்படை வசதிகள் இல்லாததால், பக்தர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். சுகாதார வளாகம் இல்லாமல் இருப்பதால், திறந்த வெளிப்பகுதிகளை கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் வசதிக்காக கழிப்பிட வசதி, இருக்கை வசதி மற்றும் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.

- டி.பிரகாஷ், வேடிச்சிபாளையம்.

குண்டும், குழியுமான சாலையால் தவிப்பு: தாந்தோன்றிமலை அருகில், தென்றல் நகரில் சாலைகள் மிகவும் சேதமடைந்துள்ளது. இங்குள்ள பல்லாங்குழி சாலைகள் வழியாக பள்ளி வாகனங்கள் உட்பட பல்வேறு வாகனங்கள் செல்வது திண்டாட்டமாக உள்ளது. இரு சக்கர வாகனங்களில் குழந்தைகளை அழைத்து செல்லும் பெற்றோர், சில நேரங்களில் தடுமாறி விழும் சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே, குறைந்த பட்சம் சாலைகளில் பேட்ஜ் ஒர்க் செய்து தர நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- எஸ்.ஸ்டீபன், தென்றல் நகர்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X