துடிப்பு இருந்தால் நடிப்பு வரும்

Added : மே 22, 2016 | |
Advertisement
தனக்கே உரிய திருட்டு முழி... நகைச்சுவை நடிப்பு... என ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். இளம் வயதில் இயக்குனர், கதாநாயகன், இசையமைப்பாளர் என பல்வேறு பரிணாமங்களில் தனிமுத்திரை பதித்து வருபவர் நடிகர் ஆர்.பாண்டியராஜன். அவரது மனம் திறந்த பேச்சு...* சினிமா பிரவேசம் எப்படி?பள்ளியில் படிக்கும்போது நாடகத்தில் நடிப்பதில் ஆர்வம் காட்டினேன். அதுவே சினிமாவில் நடிக்கவும் ஆர்வத்தை
துடிப்பு இருந்தால் நடிப்பு வரும்

தனக்கே உரிய திருட்டு முழி... நகைச்சுவை நடிப்பு... என ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். இளம் வயதில் இயக்குனர், கதாநாயகன், இசையமைப்பாளர் என பல்வேறு பரிணாமங்களில் தனிமுத்திரை பதித்து வருபவர் நடிகர் ஆர்.பாண்டியராஜன். அவரது மனம் திறந்த பேச்சு...* சினிமா பிரவேசம் எப்படி?பள்ளியில் படிக்கும்போது நாடகத்தில் நடிப்பதில் ஆர்வம் காட்டினேன். அதுவே சினிமாவில் நடிக்கவும் ஆர்வத்தை துாண்டியது. முதலில் வசன கர்த்தா துயவனிடம் உதவியாளராக வேலை பார்த்தேன். அதன் மூலம் இயக்குனர் பாக்கியராஜிடம் உதவி இயக்குனர் என படிப்படியாக சினிமாவிற்குள் பிரவேசித்தேன்.* காமெடி கலந்த கதாநாயகன் ஆனது? எனக்கு வருகிறது செய்கிறேன். நான் நடித்த காமெடி காட்சிகளை பார்த்து சோ பாராட்டினார்.* முதல் இயக்கம், கதாநாயகனாக நடித்த திரைப்படம் பற்றி?இயக்கிய படம் 'கன்னிராசி', 'ஆண்பாவம்' திரைப்படத்தில் கதாநாயகனாக இல்லாவிட்டாலும் பேசப்பட்டேன்.* வில்லனாக எப்படி ஜொலிக்க முடிந்தது?'அஞ்சாதே' படத்தில் வில்லனாக நடித்தேன். தொடர்ந்து இது போன்ற பாத்திரங்கள் வரவில்லை.* நெத்தியடி படத்திற்கு பின் இசை வாய்ப்பு கிடைக்கவில்லையா?வாய்ப்பு வரவில்லை. தற்போதை சினிமா பாடல்கள் மனதில் நிற்பதில்லையே? காலத்திற்கு தகுந்தபடி இசையும், பாடலும் அமைந்து விடுகிறது. இது தவிர்க்க முடியாதது. * சினிமாவில் தடம் பதிக்க விரும்புவோருக்கு உங்களின் டிப்ஸ்?நடிப்பு உட்பட அனைத்தையும் rpandiayarajan.com என்ற இணைய தளம் வாயிலாக 'கற்றதை கற்று தருகிறேன்' என்ற தலைப்பில் வகுப்பு எடுத்து வருகிறேன். இதில் அமெரிக்காவை சேர்ந்தவர்களுக்கு' லைவ்' வகுப்புகள் எடுத்துள்ளேன். திறமை இருந்தால் மட்டுமே திரை உலகில் வெற்றி பெற முடியும்.* நீங்கள் பெற்ற விருதுகள்?'மண்பானை' எனும் ஆவணப்படத்திற்கு அமெரிக்காவில் இயங்கும் 'ஹைபேல்க் கிண்டர் நேச்சுரல் பெஸ்டிவல்' அமைப்பு சிறந்த இயக்குனர் விருது வழங்கியது.* உங்கள் மகன் நடிகர் பிருதிவிராஜன் பற்றி?பல படங்களில் நடித்து வருகிறார். அவரின் திறமைக்கு உரமிட்டு வருவது பெருமையாக உள்ளது.நடிப்பு கற்றுக்கொள்ள rpandiayarajan.com

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X