குவாங்யூ : புலம்பெயர்ந்த இந்தியர்களால் நாடு பெருமை கொள்கிறது என சீனா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.
நான்கு நாள் அரசுமுறை பயணமாக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி சீனா சென்றுள்ளார். முதற்கட்டமாக குவாங்சூ நகருக்கு சென்ற பிரணாப் அங்கு வசிக்கும் இந்திய சமுதாயத்தினரிடையே ஆற்றிய உரை: 1990-லிருந்து இந்தியா மற்றும் சீனா இடையேயான உறவில் முன்னேற்றம் அடைந்து வருகிறது. 2000-ம் ஆண்டில் 2.9 பில்லியன் டாலராக இருந்த இருநாட்டு வர்த்தக உறவு, தற்போது 71 பில்லியன் டாலராக உள்ளது.
இந்தியாவும், சீனாவும் உலக வர்த்தக நிறுவனத்தின் உறுப்பினர்களாக உள்ளது. சீனாவுக்கு ஆரம்பம் முதலே இந்தியா ஆதரவு தெரிவித்து வருகிறது. இருநாடுகளையும் சேர்ந்த 2.5 பில்லியன் மக்கள் ஒருங்கிணைந்து பயணித்தால் அது மிகப்பெரிய நிகழ்வாக இருக்கும்.
புலம்பெயர்ந்த இந்தியர்களை நினைத்து நாடு பெருமை கொள்கிறது. புலம்பெயர்ந்த இந்தியர்கள் தங்கள் தாய் நாட்டின் வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுகிறேன். இவ்வாறு அவர் பேசினார். நான்கு நாள் அரசுமுறை பயணமாக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி சீனா சென்றுள்ளார். முதற்கட்டமாக குவாங்சூ நகருக்கு சென்ற பிரணாப் அங்கு வசிக்கும் இந்திய சமுதாயத்தினரிடையே ஆற்றிய உரை: 1990-லிருந்து இந்தியா மற்றும் சீனா இடையேயான உறவில் முன்னேற்றம் அடைந்து வருகிறது. 2000-ம் ஆண்டில் 2.9 பில்லியன் டாலராக இருந்த இருநாட்டு வர்த்தக உறவு, தற்போது 71 பில்லியன் டாலராக உள்ளது.
இந்தியாவும், சீனாவும் உலக வர்த்தக நிறுவனத்தின் உறுப்பினர்களாக உள்ளது. சீனாவுக்கு ஆரம்பம் முதலே இந்தியா ஆதரவு தெரிவித்து வருகிறது. இருநாடுகளையும் சேர்ந்த 2.5 பில்லியன் மக்கள் ஒருங்கிணைந்து பயணித்தால் அது மிகப்பெரிய நிகழ்வாக இருக்கும்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement