' கொடி' அழகி - நடிகை சுருதி| Dinamalar

' கொடி' அழகி - நடிகை சுருதி

Added : மே 29, 2016
' கொடி' அழகி - நடிகை சுருதி

விழிகளால் பேசியே மின்னல் வீசி சென்றாய்... இதழ்களின் சிரிப்பிலே சில்லென தீண்டிச் சென்றாய்... மயிலின் இறகு உன் எடையில் கொஞ்சம் இரவல் வாங்க வேண்டும்... நீள வானில் நீந்தும் நிலா உன் கன்னக் கிண்ணங்களில் மறைந்து மீண்டும் தோன்றும்... இப்படி, இயற்கையை மிஞ்சும் எழில் கொஞ்சும் அழகால், தனுஷின் 'கொடி' படத்தில் நடிகையாக அறிமுகமான 'சுருதி' பேசிய பளிச் நிமிடங்கள்...* அழகின் அறிமுகம்..?என்னோட விளம்பர படத்தை பார்த்த உதவி இயக்குனர் ஒருவர் தான் 'கொடியில்' நடிக்க சான்ஸ் வாங்கி கொடுத்தார். சொந்த ஊர் கோவை, டிவி தொடரில் தான் அரிதாரம் பூசி நடிப்பு அவதாரம் எடுத்தேன்...பி.எஸ்சி., எம்.சி.ஏ., படிச்சிருக்கேன், இப்போது எம்.ஐ.பி., படிக்கிறேன்.* தனுஷ் என்ன சொல்கிறார்...முதல் நாள் முதல் சூட்டிங்கே தனுஷ் கூட நடிச்சேன். பெரிய ஹீரோங்கிற பந்தாஇல்லாம நடிப்பில் தெரியாத விஷயங்களை சொல்லி கொடுத்தார். படத்தோட ஹீரோயின் திரிஷா என் கனவு நாயகி... அவங்க நடிக்குற படத்துல நானும் நடிப்பேன்னு நினைச்சுக் கூட பார்க்கல.* என்ன கேரக்டர்?டிவி தொடரில் நடிக்கும் போது நிறைய பட வாய்ப்புகள் வந்தது. ஆனால், எனக்கு ஹோம்லி கேரக்டர் தான் நடிக்க பிடிக்கும். நான் எதிர்பார்த்த மாதிரி இந்த படத்துல அருமையான தங்கச்சி கேரக்டர் கிடைச்சது.* டிவி - சினிமா?'டிவி' தொடரில் நிறைய முக பாவங்கள் காட்டி நடிக்கணும். நிறைய 'குளோசப் ஷாட்' இருக்கும். ரொம்ப கவனமா நடிக்க வேண்டும். தினமும் கண்ணாடி முன்னாடி நின்னு சிரிச்சு, முறைச்சு, அழுது நடிச்சுப் பார்ப்பேன். டிவி - சினிமா பெருசா வித்தியாசம் தெரியல... எல்லாமே நடிப்பு தானே...* ஒரு நடிகையா...பொது இடங்களில் எங்கே போனாலும் ரசிகர்கள் வந்திருவாங்க... மனசுல ஆயிரம் கவலைகள் இருந்தாலும் சிரிச்ச முகமா இருக்கனும். சிலர் போன் நம்பர் கேட்பாங்க... இதை விட பெரிய கஷ்டம் மேக்கப் இல்லாம சுதந்திரமா வெளிய போக முடியாது. இப்படி சில பிளஸ், மைனஸ் இருக்கு...* நீங்கள் நடித்த சவாலான காட்சிஒவ்வொரு காட்சியும் சவால் தான்... அதனால காட்சிக்கு, காட்சி எனக்குள்ள இருக்குற நடிப்பை வெளியே கொண்டு வரனும்னு தான் நினைச்சு நடிப்பேன். என்ன ஒண்ணு, இந்த அழுகுறது தான் கொஞ்சம் கஷ்டம்...* நடிப்பு தவிர...'மிஸ்டர் அன் மிஸ்சர்ஸ் கோவை' பேஷன் கம்பெனில பார்ட்னரா இருக்கேன். பாட்டு, டான்ஸ், படிப்பு எப்பவுமே ரொம்ப பிஸி தான்...* அடுத்த படம், பிடித்த நடிகர்கள் ?கிடைக்குற கேரக்டர்களை வைச்சு தான் அடுத்த படத்தை முடிவு பண்ணனும், '12பி' ஷாம், திரிஷா ரொம்ப பிடிக்கும்.* இளம் பெண்களுக்கு அட்வைஸ்...சினிமா துறை மோசம் என்றே சொல்லி பீதியை கிளப்பி விடுகின்றனர், சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளது. அதனால அழகும், திறமையும் உள்ள பெண்கள் சினிமாவில் நடிக்க கிளம்பி வாங்க...* மதுரை...அய்யோ! என்ன பாசக்கார ஊரு..! கறி தோசை, ஜிகர்தண்டா...! ருசியான ஊருன்னு கூட சொல்லலாம்.* நன்றி சொல்ல விரும்புவது ?என்னை ஒரு நடிகையாக மாற்றிய இயக்குனர் திருமுகன், பெற்றோர், சக நடிகர்கள், தோழிகளுக்கு நன்றி...shruthiksha@gmail.com

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X