பாகிஸ்தானின் இந்து பெண்ணுக்கு மத்திய அரசு உதவி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பாகிஸ்தானின் இந்து பெண்ணுக்கு மத்திய அரசு உதவி

Updated : மே 30, 2016 | Added : மே 29, 2016 | கருத்துகள் (53)
Advertisement
பாகிஸ்தான் இந்து பெண் கெஞ்சல்

ஜெய்ப்பூர்: நடந்து முடிந்த பிளஸ் 2 தேர்வில் 91 சதவீத மார்க்குகள் பெற்றும் நாட்டில் நடக்கும் இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள பாகிஸ்தானை சேர்ந்த இந்து பெண் ஒருவருக்கு, மருத்துவ கல்வி நுழைவுத்தேர்வில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்ததும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

பாகிஸ்தான் வம்சாவளி இந்து பெண்ணான மகேஸ்வரி என்ற மாணவி தமது குடும்பத்தினருடன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னதாக ஜெய்ப்பூரில் வந்து குடியேறினார். இவர் சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு எழுதி அறிவியல் பாடங்களில் 91 சதவீத மார்க்குகள் பெற்றார். மருத்துவராக வேண்டும் என நுழைவுத்தேர்வு விண்ணப்பம் பெற்றுள்ளார். ஆனால் இதில் ஒரு பகுதியில் நீங்கள் இந்தியரா ?அல்லது வெளிநாடு வாழ் இந்தியரா என கேட்கப்பட்டுள்ளது. இதில் அவர் எந்த தகுதியையும் குறிப்பிட முடியாது. இதனால் இவர் தனக்கு மத்திய அரசு உதவ வேண்டும் என பத்திரிகை மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இவர் ஏ.என்.ஐ., செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் ; எனக்கு மருத்துவராகி சேவை செய்ய வேண்டும் என்ற விருப்பம் உள்ளது. ஆனால் விண்ணப்பம் பார்த்த பின்னரே எனக்கு இது தெரிய வந்தது. நான் என்ன செய்வது என்றே தெரியவில்லை என்றார் கண் கலங்கியபடி.

இது குறித்து தகவல் அறிந்ததும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். இதற்கு நன்றி தெரிவித்த அந்த பெண், இந்த வருடம் எனக்கு வீணாகாது என மத்திய அரசு உறுதியளித்துள்ளது. மத்திய அரசு தலையிட்டதற்கு நன்றி எனக்கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (53)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijay Baskar - Bangalore,இந்தியா
30-மே-201616:03:50 IST Report Abuse
Vijay Baskar தெய்வமே, தயவுசெய்து சேவை செய்ய போறேன்னு கதை வேண்டாம்
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
30-மே-201611:52:09 IST Report Abuse
Nallavan Nallavan குடியேற்றச் சட்டத்திற்கு உட்பட்டு பரிசீலிக்கலாம் .....
Rate this:
Share this comment
Cancel
Balaji - Khaithan,குவைத்
30-மே-201611:25:44 IST Report Abuse
Balaji இந்த விவகாரத்தில் கருத்து கூருவது மிகவும் கடினமாக இருக்கிறது..... இவரின் மதிப்பெண் 91 சதவிகிதம் எனும்போது எப்படி மருத்துவ கல்வியில் சேர இடம் கிடைக்கும் என்று தெரியவில்லை.... அதுமட்டும் அல்லாது இவர் பாகிஸ்தானிய இந்து பெண் என்பது அனைவரின் கவனத்தை ஈர்ப்பதும் சுலபமாக இருக்காது..... எனினும் மருத்துவ கல்வியில் இடம் கிடைக்க இறைவனை வேண்டிக்கொள்கிறேன்........
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X