'திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில், தே.மு.தி.க., சார்பில், நீங்கள் போட்டியிட வேண்டும்' என, கட்சியினர் தெரிவித்த ஆலோசனையை, விஜயகாந்த் ஏற்க மறுத்து விட்டார்.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், மக்கள் நல கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட தே.மு.தி.க., அனைத்து இடங்களிலும் தோல்வி
அடைந்ததோடு, 'டிபாசிட்'டையும் இழந்தது. உளுந்துார்பேட்டையில் போட்டியிட்ட
விஜய காந்தும், 'டிபாசிட்' இழந்தார். இது, தே.மு.தி.க.,வினர் மத்தியில்,
பெரும் சோகத்தை ஏற்படுத்திஉள்ளது.
இந்நிலையில், திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ., சீனிவேல் மரணம் மற்றும் ஏற்கனவே தேர்தல் நிறுத்தப்பட்ட தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளுக்கு, விரைவில் தேர்தல் நடத்தப்பட உள்ளது. திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில், கட்சி சார்பில் வேட்பாளரை நிறுத்தி, பழைய பலத்தை நிரூபிக்க வேண்டும்என, விஜயகாந்த் விரும்புகிறார்.
இதுகுறித்த தன் எண்ணத்தை, கட்சியின்
மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலர்களிடம் அவர் தெரிவித்து உள்ளார். ஆனால்,
'தேர்தலில் போட்டியிட யாரும் விரும்பவில்லை' என,
மாவட்ட செயலர்கள் அவரிடம் தெரிவித்து விட்டனர். அத்துடன், 'திருப்பரங்குன்றத்தில் நீங்களே போட்டியிடுங்கள்' என, ஆலோசனை கூறியுள்ளனர். அதை ஏற்க விஜயகாந்த் மறுத்து விட்டார் என, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (88)
Reply
Reply
Reply