அரசியல் செய்தி

தமிழ்நாடு

கருணாநிதி பிறந்த நாள் பொதுக்கூட்டம்: கூட்டணி தலைவர்களுக்கு அழைப்பில்லை

Added : ஜூன் 01, 2016 | கருத்துகள் (4)
Share
Advertisement
தி.மு.க., தலைவர் கருணாநிதியின் பிறந்த நாள் பொதுக்கூட்டம், வரும், 3ம் தேதி, சென்னையில் நடக்கிறது. இதற்கு, கூட்டணி தலைவர்களை அழைக்காமல், கவிஞர் வைரமுத்துவை மட்டும் அழைத்துள்ளதால் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.சட்டசபை தேர்தலில், தி.மு.க., தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், புதிய தமிழகம், மனிதநேய மக்கள் கட்சி, எம்.ஜி.ஆர்., கழகம் உள்ளிட்ட


தி.மு.க., தலைவர் கருணாநிதியின் பிறந்த நாள் பொதுக்கூட்டம், வரும், 3ம் தேதி, சென்னையில் நடக்கிறது. இதற்கு, கூட்டணி தலைவர்களை அழைக்காமல், கவிஞர் வைரமுத்துவை மட்டும் அழைத்துள்ளதால் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.சட்டசபை தேர்தலில், தி.மு.க., தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், புதிய தமிழகம், மனிதநேய மக்கள் கட்சி, எம்.ஜி.ஆர்., கழகம் உள்ளிட்ட கட்சிகளும், பல்வேறு ஜாதி அமைப்புகளும் இடம் பெற்றிருந்தன.
பிடிக்கவில்லைதி.மு.க., 89 தொகுதிகளிலும்; காங்கிரஸ், எட்டு தொகுதிகளிலும்; இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளன. தி.மு.க., செயற்குழுவில் பேசியவர்களில் சிலர், 'காங்கிரசுக்கு அதிக தொகுதிகள் வழங்கியதால் தான் தி.மு.க., ஆட்சியை பிடிக்கவில்லை' என, புகார் கூறினர்.
அதே நேரத்தில், 'காங்கிரஸ் தொகுதிகளில், தி.மு.க.,வினர் சரிவர வேலை செய்யவில்லை; காங்கிரஸ் தோல்விக்கு, தி.மு.க.,வினரின் உள்குத்து வேலையே காரணம்' என்று, தோல்வியடைந்த காங்கிரஸ் வேட்பாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.இப்படி, இரு கட்சிகள் இடையே கசப்புணர்வு எழுந்துள்ள நிலையில், நேற்று முன்தினம், கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், 'தி.மு.க., - காங்., கூட்டணியை உடைக்க, மத்திய உளவு பிரிவு திட்டமிட்டு செயல்படுகிறது. அதற்கு, கட்சி தொண்டர்கள் இடம் கொடுக்கக் கூடாது' என, வேண்டுகோள் விடுத்தார்.இதற்கிடையில், சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க., சார்பில், கருணாநிதியின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம், வரும், 3ம் தேதி, சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் நடக்கிறது. இதில், பொருளாளர் ஸ்டாலின், பொதுச் செயலர் அன்பழகன், முதன்மை செயலர் துரைமுருகன், கவிஞர் வைரமுத்து ஆகியோர் வாழ்த்துரை வழங்குவர் என, தி.மு.க., பத்திரிகையில் வெளியான விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டு
உள்ளது.விரும்பவில்லைஇதை பார்த்ததும், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கூட்டணி கட்சிகளை அழைக்க, தி.மு.க., விரும்பவில்லை என்பதையே இதுகாட்டுகிறது என்று, அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

ஆசி வாங்கவருவாரா அழகிரி?

கருணாநிதியின் பிறந்த நாளை, மாவட்ட வாரியாக, தி.மு.க.,வினர் சிறப்பாக கொண்டாட உள்ளனர். அன்றைய தினம், கருணாநிதியிடம் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஆசி பெறுவது வழக்கம்.அதன்படி, முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி, தன் குடும்பத்தினருடன் கருணாநிதியிடம் ஆசி பெற வேண்டும் என, அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். எனவே அழகிரி, நாளை சென்னை வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pasupathi Subbian - trichi,இந்தியா
01-ஜூன்-201614:12:25 IST Report Abuse
Pasupathi Subbian இவரின் நல்ல நேரம், அதிமுகவின் தலைமை, வாசன், விஜயகாந்த் போன்றவர்களை கூட்டணியில் சேர்க்கவில்லை. ஒருவேளை அவர்கள் கூட்டணி அமைத்திருந்தால் ? சங்குதான். அதே போல உடல் நிலை காரணமாக இவர் அதிகம் தேர்தல் பிரச்சாரத்துக்கு போகவில்லை, கடந்த 6 மாதங்களாக திரு ஸ்டாலின் அவர்கள் ஊர் ஊராய் அலைந்து தெருதெருவாய் சுற்றி , மக்களிடம் திமுகவுக்கு என்ற ஒரு நல மதிப்பை உண்டுபண்ணியதன் பலனை முழுவதும் அனுபவிக்க விடாமல் அறிவிக்க பட்ட புது முகங்களை காலை வாரிவிட்டதும் இந்த கருணாவின் ஆதரவாளர்கள் தான். செல்வி ஜெயலலிதா சென்னை வெள்ளபெருக்கில் செய்த குளறுபடியால் அதிக வோட்டுகளை இழந்தார். அதே போல திரு கருணாநிதியின் சூழ்ச்சியால் திமுக அதிக இடங்களில் வெற்றி வாய்ப்பை தவறவிட்டுள்ளது. நடந்து முடிந்த தேர்தலில் திரு ஸ்டாலின் அவர்களின் உழைப்பு இவ்வளவு அதிக வெற்றியை திமுகவுக்கு தேடி கொடுத்திருப்பதை இவர் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். தேர்தல் முடிவுகளுக்கு பின் ஜெயலலிதா அவர்களின் போக்கில் சிறிது மாறுதல் தென்படுகிறது, ஆனால் கருணாதியின் போக்கில் அதே சாணக்கியத்தனம் அதிகமாகி விட்டது தெரிகிறது. தனது போக்கை மாற்றினால் அடுத்து வெற்றி தொடர்கதையாக இருக்கும். இல்லையேல் ?
Rate this:
Cancel
Venkatesh Srinivasa Raghavan - Chennai,இந்தியா
01-ஜூன்-201610:01:18 IST Report Abuse
Venkatesh Srinivasa Raghavan திமுக காங்கிரஸ் கூட்டணியை உடைக்க மத்திய உளவு பிரிவு ஏன் திட்டமிட வேண்டும். விட்டால் ISI, RAW என்று எல்லா உளவு அமைப்பையும் குறை சொல்வார் போலிருக்கிறது. திமுக / காங்கிரஸ் கட்சிகள் பலவீனமடைந்தால் அதன் பலன் அதிமுக பாஜக கட்சிகளுக்குதான். திமுக காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி தொடர்ந்தால் திமுகவும் காங்கிரஸ் கட்சியும் இன்னுமே பலவீனப்படும். சேர்ந்து நாசமாக போக இவர்களே திட்டம் போடும்போது அதை மற்ற கட்சிகள் வேடிக்கை'தான் பார்க்கும். சுழற்சி முறையில் முதல்வர் பதவி என்ற நினைப்பில் இருந்து அது கைகூடாத அதிர்ச்சியில் பெரியவர் தாறுமாறாக நிலை தடுமாறி இருக்கிறார். தேர்தல் முடிவுகள் வந்து 2 வாரங்கள் ஆகியும் இன்னும் தெளியவில்லை. 40 வருடங்களுக்கு மேலாக தான் கட்டி காப்பாற்றிய கட்சியை, தன்னுடைய 93 வயதில் பலி கொடுக்க ஆரம்பிக்கிறார் கருணாநிதி. ஜெயலலிதா ஹாப்பி அண்ணாச்சி.
Rate this:
Cancel
Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா
01-ஜூன்-201609:26:33 IST Report Abuse
Panneerselvam Chinnasamy கூப்பிட்டு விழா நடத்தினாலும் விளம்பர பிரியர்னு குற்றம் சாட்டுவார்கள். கூப்பிடாமல் கட்சிஅளவில் நடத்தினாலும் தோழமை கட்சியை ஏன் ஓதிக்கிவிட்டார்கள் என்பார்கள். எனக்கு என்னமோ கலைஞருக்கு வயது அதிகமானதால் நிகழ்ச்சியை சுருக்கமாக முடித்துக்கொள்ளலாம் என்று முடிவெடுத்து இப்படி செய்திருப்பார்கள் என்று தோன்றுகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X