அரசியல் செய்தி

தமிழ்நாடு

பிரசாரம் செய்ய சன்மானம் வாங்கிய குஷ்பு!: தமிழக காங்கிரசில் திடீர் சர்ச்சை

Updated : ஜூன் 01, 2016 | Added : ஜூன் 01, 2016 | கருத்துகள் (24)
Share
Advertisement
நட்சத்திர பேச்சாளர் என்ற அடிப்படையில், அகில இந்திய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பு, தேர்தல் பிரசாரத்திற்கு சன்மானம் வாங்கிய விவகாரம், தமிழக காங்கிரசில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில், அக்கட்சித் தலைவர் சோனியா, முன்னாள் மத்திய அமைச்சர்கள் குலாம் நபி ஆசாத், ப.சிதம்பரம், அகில இந்திய காங்கிரஸ் செயலர்
 பிரசாரம் செய்ய சன்மானம் வாங்கிய குஷ்பு!:  தமிழக காங்கிரசில் திடீர் சர்ச்சை

நட்சத்திர பேச்சாளர் என்ற அடிப்படையில், அகில இந்திய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பு, தேர்தல் பிரசாரத்திற்கு சன்மானம் வாங்கிய விவகாரம், தமிழக காங்கிரசில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில், அக்கட்சித் தலைவர் சோனியா, முன்னாள் மத்திய அமைச்சர்கள் குலாம் நபி ஆசாத், ப.சிதம்பரம், அகில இந்திய காங்கிரஸ் செயலர் திருநாவுக்கரசர், அகில இந்திய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பு உள்ளிட்ட பலர் இடம்பெற்றுள்ளனர்.
தமிழக சட்டசபை தேர்தலில் பிரசாரத்தில் ஈடுபட்ட, காங்., நட்சத்திர பேச்சாளர்களில் நடிகை குஷ்பு மட்டும், தொகுதியில் ஒருமுறை பிரசாரம் செய்ய, ஒரு குறிப்பிட்ட தொகையை வேட்பாளர்களிடம் பெற்றுள்ளார். அவர், அகில இந்திய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளராக உள்ளார்; அவருக்கு, நட்சத்திர பேச்சாளர் என்ற அந்தஸ்தும் வழங்கியுள்ளனர். அப்படியிருக்கும் போது, வேட்பாளர்களிடம் சன்மானம் வாங்கியதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுகுறித்து, காங்கிரஸ் வட்டாரங்கள் கூறியதாவது:அ.தி.மு.க., - தி.மு.க.,வில், பிரசாரத்திற்கு அனுப்பி வைக்கப்படும் நட்சத்திர பேச்சாளர்கள், தங்குவதற்கு ஓட்டல் செலவு, சாப்பாடு செலவு, வாகன செலவுக்கு என, ஒரு பெரிய தொகையை மொத்தமாக வழங்கி விடுவது வழக்கம். காங்கிரசில், சன்மானம் வழங்கும் வழக்கம் இல்லை. ஆனால், செலவுகளை, கட்சித் தலைமையே கவனித்து கொள்ளும்.மறைந்த நடிகர் சிவாஜி, காங்கிரசில் இருந்த போது பிரசாரத்திற்காக சன்மானம் பெற்றதில்லை. ஆனால் குஷ்பு, வேட்பாளர்களிடம் சன்மானம் பெற்றது காங்கிரஸ் விதிகளுக்கு எதிரானது.இவ்வாறு கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

சம்பளம் கொடுக்க வேணாமா?

தேர்தல் முடிந்த கையோடு, தன் குடும்பத்தினருடன் குஷ்பு வெளிநாடு சென்று விட்டார். சன்மானம் சர்ச்சை குறித்து அவரது ஆதரவாளர்கள் கூறியதாவது:எந்தெந்த தொகுதியில் குஷ்பு பிரசாரம் செய்ய வேண்டும் என, அவரது பயண திட்டத்தை, மாநில நிர்வாகி ஒருவர் தான் வகுத்து கொடுத்துள்ளார். குஷ்பு பிரசாரத்திற்கு வர வேண்டும் என வேட்பாளர்களும், கட்சி பிரமுகர்களும் தான் வலியுறுத்தினர். சன்மானம் வாங்காமல் சென்றால், ஒரு தொகுதியின் பல இடங்களில் பேச சொல்வர். அதனால் தான், ஒரு இடத்தில் பேச, ஒரு லட்சம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டது. மேலும் இந்த தொகையையும் குஷ்புவுக்காக வாங்கவில்லை. பிரசாரத்தில் அவருடன் பாதுகாவலர்களாக வரும் ஆண்கள், 'மேக் - அப், டச் - அப்' செய்யும் பெண்களுக்கு சம்பளம் கொடுக்கவும், நட்சத்திர ஓட்டலில் அவர்கள் தங்குவதற்கும், சாப்பாடு செலவுக்கும் தான் வாங்கப்பட்டது.
இவ்வாறு குஷ்பு ஆதரவாளர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
adalarasan - chennai,இந்தியா
01-ஜூன்-201623:00:36 IST Report Abuse
adalarasan இதபோன்ற ஒருவருக்கு ஆதரவு ஆளர்கள்? வேறு கேட்கவே அருவருப்பாக இருக்கிறது? இவரை போன்றவர் எல்லாம் நாளைக்கு பதவிக்கு வந்தால் என்ன ஆகும் பயமாக இருக்கிறது?
Rate this:
Cancel
karunchilai - vallam,இந்தியா
01-ஜூன்-201618:33:52 IST Report Abuse
karunchilai சப்பப் பேச்சாளருக்கு சன்மானம் அதுக்கு சப்பக்கட்டு தன்மானம் இல்லாதவங்க
Rate this:
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
01-ஜூன்-201617:58:31 IST Report Abuse
K.Sugavanam குசுப்பு ஒருத்தர் தான் சன்மானம் வாங்கி பிரச்சாரம் பண்றாரா?போங்கப்பா வேலைய பாத்துகிட்டு...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X