எம்.பி.சி., பட்டியலில் உள் ஒதுக்கீடு: சமூக சமத்துவப்படை கோரிக்கை| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

எம்.பி.சி., பட்டியலில் உள் ஒதுக்கீடு: சமூக சமத்துவப்படை கோரிக்கை

Added : ஜூன் 01, 2016
Share
சென்னை, :'எம்.பி.சி., எனப்படும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள, பின் தங்கிய வகுப்புகளுக்கு உள் ஒதுக்கீடு அளிக்க வேண்டும்' என, சமூக சமத்துவப் படை கட்சி தலைவர் சிவகாமி, தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.அவரது அறிக்கை:மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் உள்ள நரிக்குறவர், குருவிக்காரர் சமூகத்தை, பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க, மத்திய


சென்னை, :'எம்.பி.சி., எனப்படும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள, பின் தங்கிய வகுப்புகளுக்கு உள் ஒதுக்கீடு அளிக்க வேண்டும்' என, சமூக சமத்துவப் படை கட்சி தலைவர் சிவகாமி, தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.அவரது அறிக்கை:
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் உள்ள நரிக்குறவர், குருவிக்காரர் சமூகத்தை, பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க, மத்திய அமைச்சரவை முடிவு செய்ததற்கு நன்றி. இந்த இணைப்பை, 2009ல் இருந்து, சமூக சமத்துவ படை கட்சி கோரி வந்துள்ளது. மத்திய அமைச்சரவை தீர்மானம் மூலமாக, எங்களின் கோரிக்கை நிறைவேறி இருப்பது திருப்தி அளிக்கிறது.இதே போல் தமிழக அரசின் கவனத்திற்கு, ஒரு கோரிக்கையை கொண்டு வர விரும்புகிறேன். 1970ல் வெளியிடப்பட்ட, சட்டநாதன் குழு அறிக்கையில், '26 வகையான குறவர்கள், வேட்டைக்காரர், ஜோகி, வண்ணார், மருத்துவர், ஒட்டர், மீனவர், குரும்பர், மகேந்திரா, பண்ணையார், குலாளர், நோக்கர், வலையர், அம்பலக்காரர் போன்ற வகுப்பினர், கல்வியில், அரசுப் பணிகளை பெறுவதில், மிகவும் பின்தங்கி உள்ளனர்' என, சுட்டிக் காட்டப்பட்டது.கடந்த, 1989 மார்ச், 28ல், தமிழக அரசு பிற்படுத்தப்பட்ட வகுப்புகளின் பட்டியலை, 'பிற்படுத்தப்பட்ட வகுப்புகள்' என்றும், 'மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகள்' என்றும், இரண்டாகப் பிரித்து ஆணையிட்டது.
சட்டநாதன் குழுவின், இன்னொரு பரிந்துரையாகிய, மிகப் பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் பட்டியலில் உள்ள, பின்தங்கியுள்ள வகுப்புகளுக்கு, தனி இட ஒதுக்கீடு அளிக்கப்படவில்லை.
பல குறுஞ்சமூகங்களின் போராட்டம் காரணமாக, மிக பிற்படுத்தப்பட்ட வகுப்புகளின் பட்டியலில் உள்ள பின்தங்கியுள்ள வகுப்புகளுக்கு, உள் ஒதுக்கீடு அளிக்க, உரிய பரிந்துரையை அளிக்கும்படி, 2012 மார்ச், 21ம் தேதி, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை, தமிழக அரசு கேட்டுக் கொண்டது.ஆணையம் ஆய்வு செய்து, 'ஜாதி, தொழில், வறுமை, சமூக பிற்பட்ட நிலை, ஆகியவற்றின் அடிப்படையில், மிக பிற்படுத்தப்பட்ட வகுப்புகளின் பட்டியலை, 'மிக பிற்படுத்தப்பட்ட வகுப்புகள், மிக மிக பிற்படுத்தப்பட்ட வகுப்புகள்' என்று பிரித்து, உள் ஒதுக்கீடு அளிக்கலாம்' என, அரசுக்கு பரிந்துரை செய்தது.இதற்கு முன், பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள முஸ்லிம்கள், உள் ஒதுக்கீடு பெற்று பயனடைந்து வருகின்றனர். எனவே, தமிழக அரசு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் பரிந்துரையை ஏற்று, மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களில், பிற்பட்ட வகுப்புகளுக்கு உள் ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X