அடுத்த 15 ஆண்டுகளுக்கு மோடி தான் பிரதமர்: பாஸ்வான்

Added : ஜூன் 01, 2016 | கருத்துகள் (63)
Share
Advertisement
ஜம்மு : அடுத்த 15 ஆண்டுகளுக்கு இந்தியாவின் பிரதமராக மோடி தான் இருப்பார் என மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்தார்.ஜம்முவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக வந்த மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சித் தலைவருமான ராம்விலாஸ் பாஸ்வான் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: நுகர்வோருக்கு தரமான பொருட்கள் கிடைக்க வேண்டும். பொருட்களின் தரத்தை
அடுத்த 15 ஆண்டுகளுக்கு மோடி தான் பிரதமர்: பாஸ்வான்

ஜம்மு : அடுத்த 15 ஆண்டுகளுக்கு இந்தியாவின் பிரதமராக மோடி தான் இருப்பார் என மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்தார்.
ஜம்முவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக வந்த மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சித் தலைவருமான ராம்விலாஸ் பாஸ்வான் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: நுகர்வோருக்கு தரமான பொருட்கள் கிடைக்க வேண்டும். பொருட்களின் தரத்தை சோதிக்கவும், மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் ஒழுங்குமுறை அமைப்புகளுக்கு தேவையான அதிகாரம் அளிக்க வேண்டும். உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்க ‛மேக் இன் இந்தியா' திட்டம் உத்வேகம் அளிக்கும்.

அடுத்த 15 ஆண்டுகளுக்கு இந்தியாவின் பிரதமராக மோடி தான் இருப்பார். இதுகுறித்து காங்., கட்சி கவலைப்படத் தேவை இல்லை. இவ்வாறு அவர் கூறினார். காங்., தலைவர் சோனியா குறித்தும், அவரது மருமகன் வதேரா மீதான குற்றச்சாட்டுகள் குறித்தும் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு, பாஸ்வான் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

Advertisement




வாசகர் கருத்து (63)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
எஸ்.பொன்னப்பன் - Tambaram,இந்தியா
01-ஜூன்-201621:55:21 IST Report Abuse
எஸ்.பொன்னப்பன்  மோடி இன்று காலத்தின் கட்டாயம் அமெரிக்க ஜனாதிபதி மோடி மாதிரி இருக்க வேண்டும் - சிஸ்கோ சேர்மன் சிஸ்கோ சேர்மன் என்ன சொல்கிறார் என்றால்....... அமெரிக்க ஜனாதிபதியாக வருகின்றவர் தத்தியாக இருக்க கூடாது......உலகப்பொருளாதாரம் பற்றிய அறிவு இருக்க வேண்டும். அவர் யார் மாதிரி என்றால் இந்திய பிரதமர் மோடி மாதிரி இருக்கவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்....... காலம் எப்படி மாறுகிறது பாருங்கள்....... ஒரு காலத்தில் இந்தியாவில் அமெரிக்காவின் கென்னடியை பாருங்கள், ஆபிரகாம் லிங்கனை பாருங்கள், ரீகனை பாருங்கள், ஜார்ஜ்புஷ்ஷைப் பாருங்கள், கிளிண்டனை பாருங்கள் என்று நம்முடைய மீடியாக்களும் மக்களும் பேசிக்கொண்டிருந்த காலம் மலையேறிப் போய் அமெரிக்க ஜனாதிபதியாக வரக் கூடியவர் > என்று அமெரிக்காவில் குரல் ஒலிக்க தொடங்கியுள்ளது. பாரததேசத்தீற்கு கடவுள் தந்த வரம் நரேந்திர மோடி ஜி பாரதமக்கள் உள்ளத்தை மட்டும் இல்லாது உலகமக்களின் அன்பை கொள்ளை அடித்த நமது நமோ இது மோடிக்கு கிடைத்த வெற்றி அல்ல...... இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி..... ‪‎பாரத்மாதா_கீ_ஜெய்‬
Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
02-ஜூன்-201610:57:09 IST Report Abuse
Pugazh Vஅமெரிக்க ஜனாதிபதியால் ஒரு சாதாரண விற்பனை வரியை 1% அதிகமாக்க வேண்டும் என்கிற ஆர்டினன்சில் கூட கையெழுத்திடும் அதிகாரம் இல்லை. அயல்நாடுகளுக்கு செல்ல செனட்டின் அனுமதி தேவை. அவரது பயணங்களை அவரால் கூட தீர்மானிக்க முடியாது, செனட் சொல்லும் நாளில் சொல்லும் நாட்டுக்கு சென்று வர வேண்டும், அங்கே எழுதிக் கொடுத்தஹ்தைப் படிக்க வேண்டும்....
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
01-ஜூன்-201621:54:00 IST Report Abuse
Visu Iyer இந்தியர்கள் நாங்கள்... நல்லா இருக்க வேண்டாம் என்று நீங்களுமா விரும்புகிறீர்கள் பாஸ்வான் ஜி.... நான் எப்போ பிரதமர் ஆவது...?
Rate this:
Cancel
LAX - Trichy,இந்தியா
01-ஜூன்-201621:41:11 IST Report Abuse
LAX மிஸ்டு கால் மூலம் மட்டுமே லட்சம் லட்சமா, கோடி கோடியா மக்கள் கூட்டம் உங்க கட்சில சேருகிறார்கள் என்று அடிக்கடி பெருமை பீற்றிக்கொள்ளும் நிலையில், 15 வருஷம் என்ற எண்ணிக்கை ரொம்ப கம்மியா இருக்கே.. மக்கள் இன்னும் அதிகமா உங்ககிட்டேருந்து எதிர்பாக்குறாங்க.. இன்னும் கொஞ்சம் வருஷங்களை கூடுதலா சொன்னாதானே உங்க கட்சிக்கு அழகு..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X