அதிகாரிகளின் அலட்சியத்தால் வேதனை! மானியம் கிடைக்காததால் தவிப்பு

Updated : ஜூன் 05, 2016 | Added : ஜூன் 05, 2016 | கருத்துகள் (14)
Advertisement
அதிகாரிகளின் அலட்சியத்தால்  வேதனை! மானியம் கிடைக்காததால் தவிப்பு

உடுமலை: வேளாண் மற்றும் தோட்டக் கலைத்துறையில் கடந்தாண்டு விண்ணப்பித்து, இன்னும் மானியத்தொகை கிடைக்காததால் விவசாயிகள் வேதனையடைந்து வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக, பல்வேறு காரணங்களால் தொடர்ந்து விவசாய பரப்பு குறைந்து வருகிறது. விவசாயத்தை ஊக்குவிக்கவும், விவசாய பரப்பினை அதிகரிக்கவும், வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறைக்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு மானியத்திட்டங்களை செயல் படுத்தி வருகிறது.
கடந்தாண்டு முன்பு வரை, வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் நேரடியாக விவசாயிகளுக்கு, மானியத்தொகைக்கு உண்டான காசோலையாக வழங்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த, 2015 - 2016ம் ஆண்டுகளில் இருந்து அனைத்தையும் நேரடி மானியத்திட்டத்தின் கீழ், அனைத்து விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தும் நடைமுறை கொண்டு வரப்பட்டது. இதில் வேளாண் அதிகாரிகள், மானியம் பெறும் விவசாயிகளிடம் இருந்து வங்கிக்கணக்கு எண் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் பெற்று கருவூலத்துறைக்கு அனுப்பி விடுவார்கள். அவர்கள் விவசாயிகளின் வங்கி கணக்குக்கு மனியத்தொகையை செலுத்தி விடுவார்கள்.
மானியத்திட்டங்கள்வேளாண்துறையில், இயந்திர முறையில் நெல் நடவு, பசுந்தாள் உரம் சாகுபடிக்கு மானியம், தென்னங்கன்றுகள் பெறுவதற்கு, தென்னை பரப்பு விஸ்திகரிப்பு திட்டம், டிராக்டர் வாங்குதல், பவர் டிரில்லர் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு, 50 சதவீத மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

தோட்டக்கலைத்துறை சார்பில், சொட்டுநீர் பாசன திட்டம், ஊடுபயிர் திட்டம், கோ-கோ பயிரிடுதலுக்கு மானியம், காய்கறி விதைகள், பாலிஹவுஸ் அமைத்தல், பேக்ஹவுஸ் கட்டுதல் உட்பட பல்வேறு திட்டங்களுக்கு, 50 சதவீத மானியமும், ஆதிதிராவிட விவசாயிகளுக்கு, 100 சதவீத மானியமும் வழங்கப்பட்டு வருகிறது.
பின்னேற்பு மானியம்அரசு சார்பில் விவசாயிகளுக்கு தற்போது அனைத்து மானியங்களும் பின்னேற்பு மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் தனது பணத்தை கொண்டு அனைத்து வேலைகளையும் செய்து முடிக்க வேண்டும். அதற்குண்டான பில்லை அதிகாரிகளிடம் சமர்ப்பித்து மானியங்களை பெற்றுக்கொள்ள வேண்டும். அதிகாரிகள் ஆய்வு செய்து மானியத்தினை நேரடியாக வங்கி கணக்கில் செலுத்துவர்.
தாமதம்கடந்த ஆண்டு, ஜன.,- பிப்., மாதங்களில் விண்ணப்பித்த விவசாயிகள் பல பேருக்கு மானியத்திட்டங்கள் சென்று சேரவில்லை. மானியங்கள் தங்கள் வங்கி கணக்கில் வராதது குறித்து வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டாலும் தெரிவதில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இரண்டாயிரம் ரூபாய்க்கும், மூன்றாயிரம் ரூபாய்க்கும் இவ்வாறு கஷ்டப்பட வேண்டியுள்ளதால் சில விவசாயிகள் மானியங்கள் பெற விரும்புவதில்லை.
மன உளைச்சலுக்கு ஆளாகும் விவசாயிகள்இதுகுறித்து வேளாண்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது; விவசாயத்தை ஊக்குவிப்புக்காகதான் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு மானியங்களை வழங்கி வருகின்றன. ஆனால் கருவூலத்துறை அதிகாரிகளின் அலட்சியப்போக்கால் விவசாயிகள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். விவசாயிகளிடம் வங்கிக்கணக்கை வாங்கி, கருவூலத்துக்கு சமர்ப்பிப்பதுடன் எங்களுடைய வேலை முடிந்துவிடும். அதன் பின்பு கருவூலத்துறையினரே, விவசாயிகளுக்கான மானியத்தொகையை வங்கி கணக்கில் சேர்த்துவிட வேண்டும்.
கடந்தாண்டு விண்ணபித்திருந்த, 20 க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இன்று வரை மானியம் கிடைக்காத நிலை காணப்படுகிறது. சில விவசாயிகளின் வங்கிக்கணக்கில் உள்ள குளறுபடி, தொடர்ந்து பரிவர்த்தனை இல்லாதது போன்ற சில காரணங்களால் அவர்களுக்கு மானியத்தொகை கிடைக்காமல் ரத்தாகிறது.
இவ்வாறு ரத்தாகும் விவசாயிகளின் விவரங்கள் பற்றி, கருவூலத்துறையினர் எங்களுக்கு தெரியப்படுத்துவதில்லை. இதனால் மானியத்தொகை விவசாயிகளுக்கு கிடைக்காததன் காரணம் குறித்து தெரிவதில்லை. இதுகுறித்து அவர்களிடம் விளக்கம் கேட்டால், அலட்சியமாக பதில் கூறுகின்றனர்.
இவ்வாறு மெத்தனமாக செயல்படும் சில அதிகாரிகளால் தான் ஆண்டுதோறும் விவசாயத்தை கைவிடும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இவ்வாறு, அதிகாரி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
P.D.Murugan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
15-ஜூன்-201612:41:40 IST Report Abuse
P.D.Murugan இந்த அதிகாரிகள் தினமும் சோற்றில் கை வைக்கும் போதாவது விவசாயிகளை நினைத்துப் பார்க்கவேண்டும்... நன்றிகெட்ட பிறவிகள்.. உலகத்தில் உள்ள அனைத்து தொழில்களும் ஒன்றை சார்ந்து மற்றொன்று இருக்கிறது. ஆனால் இந்த விவசாயிகள் மட்டுமே மழையை சார்ந்து இருக்கிறார்கள். மற்ற எந்த தொழிலும் தேவை இல்லை இந்த அதிகாரிகளுக்கு மானியம் கொடுப்பதில் மட்டுமா அலட்சியம். ஏரி, குளம், கால்வாய், ஆறு போன்றவற்றை பாதுகாப்பதிலும் அலட்சியம். தூர்வாருவதிலும் அலட்சியம். இவை ஒழுங்காக பாதுகாத்து பராமரிக்கப்பட்டால் போதும் மழை நேரங்களில் நீரை சேமித்து விவசாயம் செய்து பிழைத்துக்கொள்வான் இந்த மானமுள்ள விவசாயி.. நன்றி கெட்ட அதிகாரிகளின் அலட்சியத்தால் விவசாயிகள் தன்மானம் இழந்து மானியத்திற்காக கையேந்த வேண்டியிருக்கிறது. தக்காளி விலை 100 ருபாய் என்று கவலை படும் மக்கள் கத்தரி விலை 5 ரூபாய் தானே இதை விளைய வைத்த விவசாயி என்ன செய்வான் என்று யோசிப்பதில்லை. தினமலருக்கு என் இதயம் கனிந்த நன்றிகள். இந்த செய்தி 10 நாட்கள் தொடர்ந்து இணையத்தில் இருப்பதிற்கு. மேலும் 10 நாட்கள் இருந்தால் ஒரு சில அதிகாரிகள் படிக்ககூடும். அதிகாரிகள் மட்டும் அல்ல விவசாயம் செய்யாத அனைவருமே நன்றியுடன் நினைத்துப் பார்க்கவேண்டும் இந்த விவசாயிகளை..
Rate this:
Share this comment
Cancel
samkey - tanjore,இந்தியா
12-ஜூன்-201619:54:29 IST Report Abuse
samkey வேளாண்மைத்துறை வேளாண்மை பொறியியல் துறை தோட்டகலை துறை ஆகிய துறைகளினால் விவசாயிகளை விட சம்பந்தப்பட்ட துறைகளின் அரசு ஊழியர்கள் மற்றும் இடை தரகர்களே பயன் பெறுகின்றார்கள். இவர்களுக்கு ஆகும் செலவில் நூறில் ஒரு சதவீதம் கூட விவசாயிகளுக்கு போய் சேராது. எனவே அரசு இத்துறைகளை எடுத்துவிட்டு இந்த ஊழியர்களை வருவாய் துறை போன்ற ஊழியர் பற்றாகுறை உள்ள துறைகளுக்கு மாற்ற வேண்டும். விவசாயிகளுக்கு நேரிடியாக வங்கி கணக்கில் வருவாய் துறை மூலம் பணம் கொடுத்து அவர்களை இயற்கை விவசாயம் செய்ய ஊக்குவிக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
23-ஜூன்-201618:15:46 IST Report Abuse
Rajendra Bupathiஆஹா அற்புதமான கருத்து, பேய் போயி அப்புறம் பிசாசு வந்த கதையாயிடும். இந்த எண்ணத்த மொதல்ல மாத்துங்க,ஏதோ விவசாய ஆபீசுக்கு போனா சேர்ல ஒக்கார சொல்லி மரியாதயாவது தர்ராங்க வருவாய் துறைகிட்ட போனா துண்டும் இருக்காது துணியும் இருக்காது.ஒரு கை எழுத்து வாங்க விஏஓ கிட்ட அலையிர அலைச்சல் நாடறிந்த நாத்தமாச்சே....
Rate this:
Share this comment
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
23-ஜூன்-201618:17:03 IST Report Abuse
Rajendra Bupathiஇயற்கை விவசாயம் செய்ய சொல்லறது மிக நல்ல கருத்துதான். நன்றியுடன் வாழ்த்துக்கள் நண்பரே....
Rate this:
Share this comment
Cancel
Barathan - Melbourne ,ஆஸ்திரேலியா
11-ஜூன்-201620:56:45 IST Report Abuse
Barathan மணி கொடுத்தால் தானே மான்யம் கிடைக்கும் என்று தெரியாது போல் இந்த வயதான அப்பாவி விவசாயிக்கு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X