தண்ணீர் பிரச்னைக்காக 144 தடை உத்தரவு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

தண்ணீர் பிரச்னைக்காக 144 தடை உத்தரவு

Updated : ஜூன் 06, 2016 | Added : ஜூன் 06, 2016 | கருத்துகள் (3)
தண்ணீர் பிரச்னை, 144 தடை உத்தரவு

போபால்: மத்திய பிரதேச மாநிலம் பீடுல் மாவட்டத்தில், நிலவும் குடிதண்ணீர் பிரச்னைக்காக அங்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட மாஜீஸ்திரேட் உத்தரவு பிறப்பித்துள்ளார். அங்கு கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. மக்கள் ஆங்காங்கே போராட்டம் மற்றும் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை தொடர்ந்து, 5 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X