பொது செய்தி

இந்தியா

பொற்கோவிலில் ராணுவம் நுழைந்த நாள்; பஞ்சாப் முழுவதும் பலத்த பாதுகாப்பு

Updated : ஜூன் 06, 2016 | Added : ஜூன் 06, 2016 | கருத்துகள் (12)
Advertisement
பொற்கோவில், ராணுவம், நுழைந்த, நாள் பஞ்சாப், முழுவதும் பலத்த ,பாதுகாப்பு

அமிர்தசரஸ் : பஞ்சாப் பொற்கோவிலில் ராணுவம் நுழைந்த புளூஸ்டார் ஆபரேஷன் நினைவு நாள் இன்று மாநிலம் முழுவதும் அனுஷ்டிக்கப்படுகிறது. இதனையொட்டி மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அமிர்தசரஸ் நகரில், சீக்கியர்களின் பொற்கோவிலில் தேச விரோத நபர்கள் பதுங்கி இருந்தனர். மேலும் சட்ட விரோத ஆயுத பதுக்கல் இருந்ததால் கடந்த 1984 ல் ராணுவம் நுழைந்தது. இதற்கு புளு ஸ்டார் ஆபரேஷன் என பெயரிடப்பட்டது. தங்கி இருந்தவர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்.இதன் 32 வது ஆண்டு நினைவு நாளை சீக்கியர்கள் இன்று கடைபிடிக்கின்றனர். பொற்கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. சீக்கிய மத அமைப்புகள் பந்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.



இது குறித்து பஞ்சாப் முதல்வர் பிரகாஷ்சிங் பாதல், சிரோன்மணி குருத்வாரா கமிட்டி தலைவர் அவதார்சிங் மதார் ஆகியோர் அனைவரும் அமைதி காத்திட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

போலீஸ் கமிஷனர் ஏ.எஸ்., ஷகால் கூறுகையில்; முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத ரீதியிலான அமைப்பு நிர்வாகிகளை 24 மணி நேர காவலில் வைத்துள்ளோம். மேலும் பொற்கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு எவ்வித சிரமமும் இருக்காத அளவிற்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கடைகள் அடைக்க வற்புறுத்துவோர் கைது செய்யப்படுவர் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சூத்திரன் - Madurai,இந்தியா
07-ஜூன்-201616:48:05 IST Report Abuse
சூத்திரன் இன்று Khalistan கூட்டம் பஞ்சாபில் கூடவில்லை என்கிறீர்களா, நடக்க தான் செய்கிறது.. இதை என்னுடன் வேலை செய்யும் சீக்கியர் மூலமே அறிந்தேன்... அதே போல் காஷ்மீரிகள் எந்த நிலையிலும் இந்தியன் என்ற வார்த்தையை அவர்கள் வாயில் இருந்து சொல்ல மாட்டார்கள், இதை ராணுவத்தில் பணிபுரியும் உறவினர் ஒருவர் கூறினார்...
Rate this:
Share this comment
Cancel
Sanny - sydney,ஆஸ்திரேலியா
07-ஜூன்-201604:41:54 IST Report Abuse
Sanny இன்றுதான் இந்திரா அம்மையாருக்கு சாவு மணி அடிக்க ஆரம்பித்த நாள், ( கவுன்ட் டவுன் ஸ்டார்ட்)
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
06-ஜூன்-201615:04:33 IST Report Abuse
Pasupathi Subbian பிந்தரன்வாலேயை உருவாக்கிய பெருந்தகை இந்திரா காந்தியின் பெருமை. எதிரிக்கு எதிரி நண்பன் என்ற கணக்கிட்டார். அதுவே அவருக்கு ஆப்பு வைத்துவிட்டது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X