சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'கள்ளக்காதலுக்கு இடையூறால் தீர்த்துக் கட்டினேன்' கொலை செய்யப்பட்ட வக்கீலின் மனைவி வாக்குமூலம்

Updated : ஜூன் 07, 2016 | Added : ஜூன் 07, 2016 | கருத்துகள் (13)
Advertisement
 'கள்ளக்காதலுக்கு இடையூறால் தீர்த்துக் கட்டினேன்' கொலை செய்யப்பட்ட வக்கீலின் மனைவி வாக்குமூலம்

கோடம்பாக்கம்: ''கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால், கணவரை தீர்த்துக் கட்டினேன்,'' என, வழக்கறிஞர் முருகன் கொலை வழக்கில் கைதான மனைவி, 'பகீர்' வாக்குமூலம் அளித்துள்ளார்.திண்டுக்கலை சேர்ந்தவர், முருகன், 44; சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி, லோகேஷினி. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு, மிதுன், 12, மேகா, 9, என்ற இரு குழந்தைகள் உள்ளனர். மாமனார் வீட்டில் குடும்பத்தோடு குடியிருந்த முருகன், மனைவியுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக, வாடகை வீட்டில் குடியேற முடிவு செய்துள்ளார்.
கொடூர கொலை அதற்காக கோடம்பாக்கம், சூளைமேடு சுற்று வட்டாரப் பகுதிகளில் வீடு தேடி வந்தார். நேற்று முன்தினம் மதியம், 1:00 மணியளவில், டிரஸ்ட்புரம், 6வது குறுக்குத் தெருவில் வீடு பார்க்கச் சென்றபோது, ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த, நான்கு பேர் கொண்ட வாலிபர்கள், அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டிக் கொன்றனர். கொலைபற்றி விசாரிக்க, இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
சிக்கினார் மனைவிதனிப்படை விசாரணையில், முருகனின் மனைவி லோகேஷினி மீது சந்தேகம் வந்தது. அவரிடம் தனிப்படை போலீசார், கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது அவர், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கணவரை தீர்த்துக் கட்டியதை ஒப்புக் கொண்டுள்ளார்.அவர், போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலம்:நான், எம்.ஏ., - எம்.எட்., படித்துள்ளேன். சேத்துப்பட்டு, ஹாரிங்டன் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றுகிறேன். பிளஸ் 2 படிக்கும் போது புழல் பகுதியைச் சேர்ந்த சண்முகம் என்பவரை காதலித்தேன். அவர், ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். திருமணத்திற்கு பின், கள்ளக்காதலாக மாறியது. என் கணவர் முருகன், அதற்கு இடையூறாக இருந்தார்.அதுபற்றி சண்முகத்திடம் கூறினேன். அவர், கூலிப்படை மூலம் தீர்த்து கட்டிவிடலாம் என, 'ஐடியா' கொடுத்தார். முதலில், கணவர் துாங்கும் போது தீர்த்து கட்டலாம் என திட்டமிட்டோம்; தோல்வியில் முடிந்தது. இதனால், அவர் வாடகை வீடு பார்க்கும் விவரத்தை சண்முகத்திடம் கூறினேன்.அவர், கூலிப்படையைச் சேர்ந்த, வியாசர்பாடி கோலார் சுப்பு, 36, முரளி, 22, சுப்பிரமணி, 23, ஜஸ்டின், 24, ஆகியோருடன் சேர்ந்து தீர்த்துக் கட்டினார். இத்தகவலை சண்முகம், அலைபேசியில் என்னிடம் தெரிவித்தார். நான் உறுதி செய்வதற்காக, கணவர் முருகனின் அலைபேசிக்கு தொடர்பு கொண்டேன்; அவர் எடுக்கவில்லை. என் அலைபேசி உரையாடல்களை வைத்து போலீசார் எங்களை பிடித்து விட்டனர்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.இதையடுத்து, போலீசார், லோகேஷினி, 35, கோலார் சுப்பு, 36, சுப்ரமணி, 23, முரளி, 22, ஆகியோரை, நேற்று கைது செய்தனர். தலைமறைவாக உள்ள, சண்முகம், 44, ஜஸ்டின், 23, ஆகியோரை தேடி வருகின்றனர். ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balaji - Vellurankottai,இந்தியா
08-ஜூன்-201609:06:24 IST Report Abuse
Balaji உங்களையும் உங்க பெத்தவங்களையும் உள்ள தள்ளிடுவாங்க போலீஸ், ஜெயில் போனதும் ஆணுக்கு பின்னால் மட்டும் வலி, பெண்களுக்கு முன்னாலும் , பின்னாலும் வலி. போலீஸ் ஸ்டைல்.
Rate this:
Share this comment
Cancel
சாமி - மதுரை,இந்தியா
07-ஜூன்-201619:44:10 IST Report Abuse
சாமி நீ செய்தது மாபெரும் தவறு என்றாலும் செத்தவர் வக்கீல் என்பதால் கொஞ்சம் ஆறுதல்.இந்த வக்கீல்கள் பல குடும்பத்தை நடுத்தெருவுக்கு கொண்டு வந்து விட்டார்கள். கேட்டால் தொழில் தர்மம் என்பார்கள். 100% 5 பேர் கூட நேர்மையான ஆட்கள் இல்லை ..
Rate this:
Share this comment
Balaji - Vellurankottai,இந்தியா
08-ஜூன்-201609:14:40 IST Report Abuse
Balajiசாமீ மிகவும் சரியாக சொன்னிர்கள். அடுத்தவன் சந்தோஷத்தை கேடுதவனுக்கு இந்த கதிகான், தன் மனைவி அடுத்தவனுக்கு விருந்து வைப்பால் என்று இவர் எதிர் பார்த்து இருந்திருகமட்டார்....
Rate this:
Share this comment
Cancel
sunil - abu dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
07-ஜூன்-201612:46:03 IST Report Abuse
sunil கற்பனைக்கும் எட்டாத சில காவியங்களை பெண்கள்தான் படைக்க முடியும்.....? இந்த பெண்களையா நாம் கடவுளுக்கு நிகராக வைத்து கொண்டாடி வருகிறோம் என்று நினைக்க தோன்றுகிறது சில நேரம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X