பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
'கேரள லுங்கி கேர்ள்ஸ்'
பாடாய்படுத்தும் சமூகதளம்

புதுடில்லி: சமூக வலைதளங்களில் வெளியாகும் ஒரு செய்தி ஏற்படுத்தும் தாக்கம் எவ்வளவு தீவிரமானது?லுங்கி கட்டிய பெண்கள் வரிசையாக நிற்கும் படம் ஒன்று தற்போது, சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது.

 'கேரள லுங்கி கேர்ள்ஸ்' பாடாய்படுத்தும் சமூகதளம்

'கேரளாவில் உள்ள ஒரு கல்லுாரியில், மாணவியர் ஜீன்ஸ் அணிந்து வருவதற்கு

தடை விதிக்கப்பட்டது. அதையடுத்து, மாணவியர் லுங்கியுடன் வந்து தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர்' என, அந்த படத்துக்கு விளக்கமும் கொடுக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, சமூகவலைதளத்தில், மக்கள் கொந்தளித்து தங்களுடைய எதிர்ப்புகளை பதிவு செய்யத் துவங்கினர். ஆனால், இது உண்மை இல்லை என்று ஒருவர் பதிவு செய்தார். லுங்கியுடன் மாணவியர் இருக்கும் படம் உண்மை தான். ஆனால் செய்தி தான் தவறு.
தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு, ஸ்ரீமந்துடு என்ற படத்தில் லுங்கியுடன் நடித்தார். அதைப்பார்த்து, கடந்த ஆண்டு, ஆகஸ்ட் மாதம், அவரைப் போலவே, அமெரிக்காவில் உள்ள இந்திய மாணவியரும், லுங்கி அணிந்தபடி வெளியிட்டது தான் இந்த படம் என்று அந்த நபர் கூறியுள்ளார்.ஆனால், அதுவும் உண்மையில்லை என்று,

Advertisement

மற்றொருவர் பதிவு செய்துள்ளார். உண்மையில், இந்த படத்தில் இருப்பது யார், படத்தை எடுத்தது யார், எப்போது, எந்த தருணத்தில் எடுத்தது என்பது தெரியவில்லை. ஒவ்வொருவரும் தங்களுடைய கற்பனையை உலவ விட்டு வருகின்றனர்.


Advertisement

வாசகர் கருத்து (70)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
08-ஜூன்-201623:49:27 IST Report Abuse

Girijaஎது எப்படியோ, லுங்கி என்று தென் இந்தியர்களை மற்ற மாநிலத்தவர்கள் கேலியாக அழைக்கின்றனர். இதை அறியாமல் லுங்கி டான்ஸ், ரஜனி கஜனி என்று நம் ஊர் கிறுக்குகள் பொது இடங்களில் ஆட்டம் போட்டு மானத்தை வாங்குகின்றனர். இத்தனைக்கும் தமிழ் நாட்டில் லுங்கி அணிபவர்கள் குறைவு

Rate this:
ajaykarthick - chennai  ( Posted via: Dinamalar Android App )
08-ஜூன்-201622:17:24 IST Report Abuse

ajaykarthickOMG.... wat a girlzzzz.....

Rate this:
ஏடு கொண்டலு - Cupertino,யூ.எஸ்.ஏ
08-ஜூன்-201620:49:32 IST Report Abuse

ஏடு கொண்டலுசின்னஞ்சிறுசுகள் ஏதோ ஜாலியாகச் செய்து விட்டுப் போகிறதுகள்... என்று விடாமல்... அவர்கள் என்ன செய்தாலும் குறை சொல்லிக் கொண்டு... நம் குழந்தைகள் செய்தால் ரசிக்க மாட்டோமா...? அது போலத் தானே இதுவும்...

Rate this:
மேலும் 67 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X