சாலை விபத்தில் நாள்தோறும் 400 பேர் பலி: கட்காரி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

சாலை விபத்தில் நாள்தோறும் 400 பேர் பலி: கட்காரி

Added : ஜூன் 10, 2016 | கருத்துகள் (26)
Advertisement
சாலை விபத்துக்களை குறைக்க எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை: கட்காரி

புதுடில்லி : இந்தியாவில் சாலை விபத்தில் நாள்தோறும் 400 பேர் பலியாகின்றனர் எனவும், சாலை விபத்துக்களை குறைக்க மத்திய அரசு எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை எனவும் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.

டில்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி, கடந்த ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்துக்கள் குறித்த அறிக்கையை வெளியிட்டார். மேலும் அவர் கூறியதாவது:
இந்தியாவில் கடந்த ஆண்டில்(2015), 5,01,423 சாலை விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன. சராசரியாக ஒரு நாளைக்கு 1,374 விபத்துக்கள். இவ்விபத்தினால் நாள்தோறும் 400 பேர் பலியாகின்றனர். சராசரியாக ஒரு மணி நேரத்தில் 57 விபத்துகள் நிகழ்ந்திருக்கின்றன. பலியானவர்களில் 54% பேர் 15 முதல் 34 வயதுக்கு உட்பட்டவர்கள். 77% விபத்துக்களுக்கு டிரைவர்களின் தவறுதலே காரணம்.
அதிகபட்சமாக தமிழ்நாட்டில் 69,059 விபத்துக்கள் நடந்துள்ளன. அடுத்த இரு இடங்களில் மகாராஷ்டிராவும்(63,805), ம.பி.,(54,947)யும் வகிக்கின்றன. விபத்தில் பலியானவர்களின் அடிப்படையில் உ.பி.,(17,666) முதலிடமும், தமிழ்நாடு(15,642), மகாராஷ்டிரா(13,212) முறையே 2 மற்றும் 3வது இடங்களில் வகிக்கின்றன.

சாலை விபத்துக்களின் எண்ணிக்கையை குறைக்க மத்திய அரசு கடந்த இரண்டாண்டுகளாக எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. இது மிகவும் வேதனையை அளிக்கிறது. முந்தைய காங்., ஆட்சியில், முக்கிய சாலைகளில் மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகளை அமைக்கவில்லை. தற்போதைய பா.ஜ., ஆட்சியில் சாலை போக்குவரத்தில் அதிக முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. 62% விபத்துக்கள் அதிவேகத்தில் செல்வதாலேயே நிகழ்கின்றது. இதனைத் தடுக்க தேசிய நெடுஞ்சாலைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
g.s,rajan - chennai ,இந்தியா
11-ஜூன்-201608:34:15 IST Report Abuse
g.s,rajan சாலைகளில் சுனாமி .
Rate this:
Share this comment
Cancel
Vasu Murari - Chennai,இந்தியா
11-ஜூன்-201603:47:00 IST Report Abuse
Vasu Murari புள்ளி விபரங்கள் போதுமா ? இன்னும் கொஞ்சம் வேண்டுமா? மாண்புமிகு மந்திரி அவர்கள் இந்தியாவில் சாலை விபத்துக்களில் ஏற்படும் இறப்புகள் குறித்து பல்வேறு வகையான புள்ளி விபரங்களைத் தந்து ஆச்சரியத்தில் ஆழ்த்தி விட்டார். அந்தப் (புள்ளி) விவரங்கள் எதோ ஒரு சில அதிகாரிகளால் தொகுக்கப்பட்டு மாண்புமிகு மந்திரியால் ஊடங்கங்கள் மூலம் மக்களுக்குத் தெரிவிக்கப்பட்டதா அல்லது அறிவிக்கப் பட்டதா என்று தெரியவில்லை. இருப்பினும் பொதுஜனம் என்ற முறையில் ஒரு சில புள்ளி விபரங்களைத் தருவதன் மூலம் நானும் மக்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன். 1. 90 விழுக்காடு ஓட்டுனர் உரிமங்கள் லஞ்சம் தராமல் பெறப் படுவதில்லை. 2. மீதி பத்து விழுக்காடுகளில் உள்ளவர்கள் வி.ஐ.பி.க்கள். மற்றும் பணம் படைதோர்கள் அல்லது செல்வாக்கு மிக்கவர்கள். அவர்களுக்கு உரிமம் பெற எந்த விதமான சோதனைகளும் வைக்கப்டாமலேயே உரிமங்கள் வழங்கபட்டு விடும். 3. அவர்கள் விபத்துகள் ஏற்படுத்தி விட்டால் வேறு ஒருவர் அந்த விபத்தை ஏற்படுத்தி விட்டதாக புகார் பதிவு செய்யப்பட்டு விடும். (பணத்திற்காக அந்த விபத்தை ஏற்படுத்தி விட்டதாக முன்வரும் பலிக்கடாக்களும் அதில் அடக்கம்) 4. குடித்து விட்டு வாகனங்களை ஓட்டுவோர் அதிகம். அதில் அவர்கள் மட்டும் உயிரை இழப்பதோடு மட்டுமல்லாமல் எந்த ஒரு சம்பந்தமும் இல்லாத பொது மக்களுக்கும் உயிர் இழப்பை ஏற்படுத்துகின்றனர். 5. (விதிகளுக்குப் புறம்பாக) அதிக பாரம் ஏற்றிக்கொண்டு அதிக வேகமாக ஓட்டப்படும் சரக்கு லாரிகளினால் ஏற்படும் விபத்துக்கள். (தமிழ் நாட்டில் சமீபத்தில் ஏற்பட்ட விபத்து ஒரு உதாரணம்) வேகக் கட்டுப்பாடுக் கருவிகளைப் பொறுத்த வேண்டும் என்று அரசாணை பிறப்பித்தால் அதற்கு கட்டுப்பட மறுக்கும் லாரி உரிமையாளர்களின் மற்றும் சங்கங்களின் போக்கு. 6. தேவையான தூக்கமில்லாமல் தொலை தூரத்திற்கு வண்டி ஒட்டுதல். 7. சிக்னல்களை மதிக்கத் தெரியாத வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள். 8. ஓவர் டேக் செய்தால் கோபம் கொண்டு வண்டியை மறித்து கொலை செய்யும் அளவிற்கு மமதை பிடித்த அரசியல் வாதிகள் மற்றும் அவர்களின் உறவுகளும் வாரிசுகளும். (சமீபத்திய பீகார் சம்பவம்) 9. ராங் சைடில் வண்டி ஒட்டுதல். 10. ஒரு வழிப் பாதையில் (செல்லக்கூடாத திசையில்) செல்லுதல். 11. பொதுக் கூட்டங்கள் நடத்தும் அரசியல் கட்சிகளாலும் கோவில் திருவிழா சமயங்களில் அதை நடத்தும் அமைப்பாளர்களால் ஏற்படுத்தப்படும் பள்ளங்கள். அவைகள் முடிந்ததும் அந்தப் பள்ளங்கள் சரிவர மூடப் படாமை. 12. சேவை நிறுவனங்கள் (தொலைபேசி, குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம், மின்சாரம்) ஏற்படுத்தும் பள்ளங்களை சரிவர மூடப்படாமை. 13. சென்னை போன்ற பெருநகரங்களில் உள்ள வடிகால் வாரியத்தின் ' மேன்ஹோல் ' மூடிகள் சாலையின் மட்டத்தை விட மிக உயரமாகவோ அல்லது தாழ்ந்தோ காணப் படுத்தல். 14. அவைகளைப் பற்றி புகார் கொடுத்தலும் கண்டு கொள்ளாத (சம்பந்தப்பட்ட) அதிகார வர்க்கம். 15. ஒருவேளை அங்கொன்றும் இங்கொன்றுமாக ஏதாவது நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் அதிலும் காணப்படும் ஒரு அரைகுறைத்தனம். 16. சரியான முறையில் ஏற்படுத்தப்படாத (ஒட்டகத்தின் திமில் போன்று காணப்படும்) ஸ்பீட் பிரேக்கர்கள். அவைகளுக்கு சரிவர வர்ணம் பூசுதலோ அல்லது அவ்வப்போது தேவைப்படும் பராமரிப்போ கிடையாது. ஸ்பீட் பிரேக்கர் உள்ளது என்று தெரிவிக்கும் எச்சரிக்கை பலகை கூட கிடை யாது. (அவைகளை speed breaker என்று சொல்வதை விட speed reducer என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். அல்லது spinal cord breaker என்று வேண்டுமானாலும் சொல்லலாம். இந்த மாதிரி spinal cord breakerகளை கவனிக்காமல் வேகமாக கடந்து செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் spondilytis என்னும் பிரச்சனைகளுக்கு அல்லவது ஒரு உபரி புள்ளி விபரம்) 17. யாரவது எதையாவது தட்டிக் கேட்க முயன்றால் கேட்பவர் தட்டப்பட்டு விடும் அராஜக போக்கு (உதாரணம் சென்னையில் சில நாட்களுக்கு முன்பு நடை பெற்ற பரஸ்மால் ஜெயின் கொலை விவகாரம்) 18. இன்னும் ' எழுத எழுத துடிக்கிதடா ' விரல்கள் என்று சொல்லித்தான் முடிக்க வேண்டி இருக்கிறது.
Rate this:
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
10-ஜூன்-201623:47:30 IST Report Abuse
g.s,rajan இந்தியாவுல எல்லாருக்கும் சாலையில் அளவுக்கு அதிகமாக சுதந்திரம் கொடுத்து கெடுத்துக் குட்டிச்சுவராக்கி விட்டார்கள் ,இந்தியாவில் அதுதான் மிக மிக முக்கிய காரணம். சாலைகளில் விபத்துக்கள் இனி எப்படிக் குறையும் ??? துளிக்கூட வாய்ப்பே இல்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X