விசா மறுத்த அமெரிக்காவை எழுந்து வணங்க வைத்த மோடி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

விசா மறுத்த அமெரிக்காவை எழுந்து வணங்க வைத்த மோடி

Updated : ஜூன் 10, 2016 | Added : ஜூன் 10, 2016 | கருத்துகள் (196)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

புதுடில்லி : தனக்கு விசா வழங்க மறுத்த அமெரிக்காவை எழுந்து வணங்க செய்துள்ளது அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி நிகழ்த்திய வரலாற்று சிறப்பு மிக்க உரை. மோடி நிகழ்த்திய உரைக்கு அவருக்கு மட்டுமின்றி, இந்தியா முழுவதற்கும் உலகம் முழுவதிலும் இருந்து பாராட்டு குவிந்து வருகிறது.
5 நாடுகள் பயணமாக அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி, அங்கு நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் உரை நிகழ்த்தினார். பயங்கரவாதம், பாதுகாப்பு, பொருளாதார நட்புறவு உள்ளிட்டவைகள் குறித்து 45 நிமிடங்கள் அவர் நிகழ்த்திய உரைக்கு 64 முறை அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைதட்டி வரவேற்பும், பாராட்டும் தெரிவித்தனர். ஒவ்வொரு முறையும் கைதட்டு அடங்குவதற்கு 4 நிமிடங்களுக்கு மேல் ஆனது. இதில் 9 முறை அனைவரும் எழுந்து நின்று மோடிக்கு மரியாதை தெரிவித்தனர். மோடி தனது உரையின் போது 13 முறை நட்புறவு என்ற வார்த்தையை பயன்படுத்தி உள்ளார்.
2000ம் ஆண்டு இந்திய பார்லி.,யில் அப்போதைய அமெரிக்க அதிபராக இருந்த பில் கிளிண்டன் நிகழ்த்திய உரையை கேட்டு, இந்திய எம்.பி.,க்கள் அவரிடம் சென்று ஆட்டோகிராப் வாங்கினர். ஆனால் இன்று நிலைமை தலைகீழாகி உள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்தில் மோடி நிகழ்த்திய உரையை கேட்ட உறுப்பினர்கள் அனைவரும் மோடியை தேடி வந்து கைகுலுக்கி பாராட்டியதுடன், ஆட்டோகிராபும் வாங்கிச் சென்றனர். உண்மையில் இது இந்திய பிரதமர் ஒருவருக்கு கிடைத்த பாராட்டாக பார்க்கப்படவில்லை ஒட்டு மொத்த இந்தியாவிற்கும் கிடைத்த பாராட்டாகவே பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் இந்தியர் ஒருவருக்கு இந்த அளவிற்கு பாராட்டு கிடைத்துள்ளது விவேகாந்தருக்கு (சிகாகோ மாநாட்டு உரையின் போது) பிறகு பிரதமர் மோடிக்கு தான்.

மோடியின் உரை குறித்து இந்தியா டுடே பத்திரிக்கையில் கருத்து தெரிவித்துள்ள பிரபல பத்திரிக்கையாளர் ராஜ்தீப் சர்தேசி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மோடியை பேட்டி எடுக்க சென்ற போது அவரை ஆங்கிலத்தில் பேசும்படி கேட்டேன். அதற்கு மறுத்த மோடி, இந்தியிலேயே பேட்டி அளித்தார். பின்னர் அவர் என்னிடம், இன்று வேண்டுமானால் நான் இந்தியில் பேசலாம். ஆனால் ஒருநாள் உங்களை விட நன்றாக ஆங்கிலத்தில் பேசுவேன் என்றார். தற்போது அமெரிக்கா நாடாளுமன்றத்தில் மோடி நிகழ்த்திய உரையை கேட்ட பிறகு அன்று அவர் கூறியதை உண்மை என ஏற்றுக் கொள்கிறேன் என்றார்.


இந்திய, அமெரிக்க பத்திரிக்கைகளில் மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றிலும், சமூக வலைதளங்களிலும் மோடிக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்தியாவில் பிறந்ததற்காகவும், இந்தியன் என்று சொல்லிக் கொள்வதிலும் பெருமிதம் கொள்வதாக பலரும் கருத்து பதிவிட்டுள்ளனர். உலகின் தலைவிதியையே நிர்ணயிக்கும் அமெரிக்க செனட் சபை உறுப்பினர்கள் மோடியிடம் கையெழுத்து வாங்க முண்டியடிச் சென்றது ஒவ்வொரு இந்தியனுக்கும் கிடைத்த பெருமை என கூறப்படுகிறது.
மோடி உரை பற்றி சிஸ்கோ தலைவர் கூறுகையில், அடுத்த அமெரிக்க ஜனாதிபதி நரேந்திர மோடியை போல் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். விஞ்ஞானிகளையும், இன்ஜினியர்களையும் மட்டுமல்ல சிறந்த தலைவரையும் உலகிற்கு அளிக்கும் திறன் இந்தியாவுக்கு உண்டு என்பதை இன்று அமெரிக்கா ஏற்றுக் கொள்ளும்.

Advertisement
வாசகர் கருத்து (196)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M Rajendran - Delhi,இந்தியா
11-ஜூன்-201610:24:56 IST Report Abuse
M Rajendran மோடி அவர்கள் நன்றாக பேசுவார் என்பது 2014 ஆம் ஆண்டு தேர்தலிலேயே தெரிந்த ஒன்று. அதற்கான பலனை இப்போது நாம் அனுபவித்து கொண்டிருக்கிறோம். அமெரிக்க நாடாளுமன்றம் கைதட்டிவிட்டது. சரி. அதன் பலன் என்ன என்பதை பொறுத்தே பார்க்கவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
subhashini - chennai,இந்தியா
11-ஜூன்-201609:01:54 IST Report Abuse
subhashini மோடியின் உரை மிக நன்றாக இருந்தது..அமெரிக்கா ஒரு காலத்தில் தனக்கு அனாவசியமாக பிரச்சினை எழுப்பி விசா தர மறுத்து இருந்தாலும் ..இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல் என்ற வள்ளுவரின் திருக்குறளின் வழி நடந்து தனக்கு தகாததை செய்த அமெரிக்கா வுக்கும் தொடர்ந்து நேசக்கரம் நீட்டி பிரதமர் அளவுக்கு உயர்ந்து பின்னாளில் அவர்களே தன்னை இன்று தன்னை வியந்து வணங்கி பாராட்டும் படி செய்தது நிச்சயம் மோடியின் மிகபெரிய சாதனை தான்..
Rate this:
Share this comment
Cancel
SRIVIRAJA - SRVILLIPUTTUR,இந்தியா
11-ஜூன்-201609:00:03 IST Report Abuse
SRIVIRAJA நம்ம கழக மொழியில் இந்தியன் என்று சொல்லடா இறுமாப்புடன் வாழடா மோடி என்று சொன்னால் மூவூலகமும் இந்தியனின் இந்தியாவின் புகழ் பாடும் இந்தியன் என்று சொன்னால் எல்லா இரும்பு கோட்டையும் தவிடு பொடியாகும் நரேந்திர மோடி என்று சொன்னால் நாடெல்லாம் செழிக்கும் நரேந்திர மோடி என்று சொன்னால் நரிகூட்டம் நடுங்கும் ஊழை இடும் நான்கு மறை நாயகனே நீர் நீடுடி வாழ்க மும்மத கடவுள்கள்களின் ஆசி என்றென்றும் உம்மை காக்கும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X