சமஸ்கிருதத்தை திணிக்க முயற்சி:கருணாநிதி கண்டனம் Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
சமஸ்கிருதத்தை திணிக்க முயற்சி:
கருணாநிதி கண்டனம்

சென்னை:'சமஸ்கிருதத்தை திணிக்க, மத்திய அரசு மீண்டும் முயற்சிக்கிறது' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

 சமஸ்கிருதத்தை திணிக்க முயற்சி:கருணாநிதி கண்டனம்

அவரது நேற்றைய அறிக்கை:

விஜயவாடாவில் உள்ள தனியார் கல்லுாரி விழா ஒன்றில் பேசிய, மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, 'பள்ளிகளில் சமஸ்கிருதம் கற்பிப்பதற்காக, வேதங்களுக்கு என, 'வேதிக் போர்டு' என்ற தனிப் பிரிவு,

வரும், 16ல் துவக்கப்படும்.
'நம் கலாசாரம் என்பது, வேதங்களில் ஊறியுள்ளது. வேதங்களைப் பயிலாமல், கலாசாரத்தை நாம் முன்னிறுத்த முடியாது. ஆகவே, மத்திய அரசுப் பள்ளிகளில், இந்த ஆண்டு முதல், வேதபாடங்கள் பயில, சிறப்பு வேத பாடப் போதனைப் பிரிவு (வேதிக் போர்டு) ஒன்று உருவாக்கப்படும். இந்த வேத பாடப் போதனைப் பிரிவுக்கு வேதாஞ்சலி என்ற பெயர் வைக்கப்படும்' என, தெரிவித்து இருக்கிறார்.
பல்வேறு தேசிய இனங்கள், மொழிகள், மதங்களைக் கொண்ட மக்கள் வாழும் நம் நாட்டில், அரசியல் சட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ள அனைத்து மொழிகளும் சமமாகக்கருதப்பட வேண்டும்; அனைத்து மொழிகளுக்கும் சமமான மதிப்பு வழங்க வேண்டும். அப்போது தான், நாட்டின் கூட்டாட்சி வலுப்பெற்று, அனைவருக்குமான குடியரசு என்பது உறுதி பெறும்.

தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளையும்,

Advertisement

அதாவது, அரசியல் சட்டத்தின், ௮வது அட்டவணையில் இடம் பெற்றுள்ள, 22 மொழிகளையும், மத்தியில் ஆட்சி மொழிகளாக அறிவிக்க வேண்டும் என்பதை அலட்சியப்படுத்தி வரும் மத்திய அரசு, இந்திக்கும், சமஸ்கிருதத்திற்கும் மட்டும் வரிந்து கட்டிக் கொண்டு வக்காலத்து வாங்குவது தான் சம நீதியா?இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

Advertisement

வாசகர் கருத்து (200)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா
12-ஜூன்-201602:20:31 IST Report Abuse

Panneerselvam Chinnasamyதலைவர் கலைஞர் அவர்களுக்கு தாழ்மையுடன் குறிப்பிட விரும்புவது என்னவென்றால், ஹிந்தியை எல்லா மாநிலங்களிலும் கட்டாய ஆட்சிமொழி ஆக்கிய போது அதை தடுத்து நிறுத்தி வட நாட்டான் நம்மை அடிமைப்படுத்துவதில் இருந்து காத்தீர்கள். நன்றி. ஆனால் விரும்பி வடமொழியை வேலை நிமித்தம் கத்துக்கொள்ள விரும்புபவர்கள் கற்று கொள்ளட்டும். அதை தடை செய்ய வேண்டாம். ஆனால் சமஸ்கிருதமும் ஹிந்தியும் step sisters மொழிகள். இதை மத்திய அரசு நடைமுறைப்படுத்துவது படிக்கும் ஹிந்தி பிள்ளைகளுக்கு பளுவை மட்டும் குறைக்க செய்யுமே தவிர அறிவை வளர்க்க பயன் படப்போவதில்லை. மத்திய அரசு நடத்தும் பள்ளிகளில் மூன்றாவது மொழியாக சமஸ்கிரிதம் சொல்லித்தருவது ஒரு ஏமாற்று வேலை. மூன்றாவது மொழியா ஏதாவது ஒரு ஸ்டேட் மொழியை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சட்டம் கொண்டு வந்தால் எல்லோருக்கும் சம முக்கியத்துவம் தந்ததாக இருக்கும். அதற்க்கு போராடுங்கள்.

Rate this:
vayalum vazhvum-saravanakumar - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
11-ஜூன்-201623:58:04 IST Report Abuse

vayalum vazhvum-saravanakumarசரி வேலூர் நமக்கு நாமே கூட்டத்தில் உருது மொழியை கொண்டுவருவோம் என ஸ்டாலின் சொன்னாரே அதுக்கு என்ன பதில் கொலைஞரே உனக்கு வோட்டு வேண்டும் என்றால் எப்படி வேண்டும் என்றாலும் பிச்சை எடுக்கலாம் அப்படிதானே, உண்மையிலயே நீங்க பெரியார் கொள்கையை கடைபிடிப்பவராக இருந்தால் இந்துக்கள் யாரும் எனக்கு வோட்டு போடவேணாம் என சொல்லும், இந்துக்கள் எல்லாரும் திமுகவை விட்டு வெளியேறுங்கள் என்று சொல்லுங்கள்.............

Rate this:
Malayam Annamalai - Tirutani,இந்தியா
11-ஜூன்-201623:08:32 IST Report Abuse

Malayam Annamalaiமாணவர்களை சீரழித்த பெருமை இரண்டு திராவிட கட்சிகளையே சாரும்.இவர்கள் குழந்தைகள் மட்டும் பன்முக புலமை பெற்றவர்களாக விளங்க வேண்டும் மற்றவர்கள் முன்னேறுவதை பொறுக்க மாட்டார் .இவர்கடவுள் இல்லை என்று இந்துக்களை மட்டும் மனம் நோகடிப்பார். கிருத்துவர்கள் முஸ்லீம்கள் பண்டிகைகளில் மட்டும் கலந்துகொள்வார்,மொழிகளை கற்றுக்கொள்ளும் உரிமை பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் உரிமை இல்லையா?இதை பற்றி இவர் கூறித்தான் மற்றவர்கள் தெரிந்துகொள்ள வேண்டுமா? இது மற்றவர்கள்க சுதந்திரத்தில் தலை இடுவதாகாதா?மக்களை சிந்திக்க விடுங்கள்.அனைவரின் மனதை வெற்றி கொள்ளப்பாருங்கள்.

Rate this:
மேலும் 197 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X