மோடியிடம் ரூ.1.50 லட்சம் கோடி கேட்க ஜெ., முடிவு Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
மோடியிடம் ரூ.1.50 லட்சம் கோடி
கேட்க ஜெ., முடிவு

தமிழக முதல்வராக, ஆறாவது முறையாக பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதா, 14ம் தேதி டில்லி செல்கிறார். அங்கு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசுகிறார். அப்போது, தமிழக நலன் சார்ந்த கோரிக்கை மனுவை, பிரதமரிடம் கொடுக்க உள்ளார்.

 மோடியிடம் ரூ.1.50 லட்சம் கோடி கேட்க ஜெ., முடிவு

சென்னை, தலைமைசெயலகத்தில், நேற்று தலைமைச் செயலர் ராமமோகனராவ் தலைமை யில், அனைத்து துறை செயலர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், ஒவ்வொரு துறையிலும், மத்திய அரசிடம் இருந்து வர வேண்டிய நிதி எவ்வளவு, எந்த திட்டங்களுக்கு, மத்திய அரசு அனுமதி கிடைக்காமல் உள்ளது என்ற விவரங்கள் கேட்டு பெறப்பட்டன.

பிரதமரிடம், முதல்வர் அளிக்க உள்ள மனுவில், இடம்பெற உள்ள கோரிக்கை குறித்து, அதிகாரி கள் சிலர் கூறியதாவது: பிரதமரிடம் ஏற்கனவே, 2014 மற்றும், 2015ல், முதல்வர் கொடுத்த கோரிக்கை மனுவில் இடம் பெற்ற கோரிக்கை களில், பெரும்பாலானவை நிறைவேற்றப் படாமல் உள்ளன; அவை மீண்டும் இடம்பெறும்
காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை, மத்திய அரசி தழில் வெளியிட வேண்டும். காவிரி நிர்வாகக் குழுவையும், காவிரி நீர் மேலாண்மைக் குழுவையும் அமைக்க வேண்டும்
நெய்யாறு அணையில் இருந்து, தமிழகத்திற்கு

நீர் திறந்து விட,கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும். நதிகளை இணைக்க, சிறப்புக் குழு அமைக்க வேண்டும். மாநிலங்கள் இடையிலான அனைத்து நதிகளும் தேசியமயமாக்க வேண்டும். காவிரி படுகையை நவீனமய மாக்கும், 11 ஆயிரத்து, 421 கோடி ரூபாய் திட்டத்திற்கு, ஒப்புதல் அளிக்க வேண்டும்
பாக்., வளைகுடா பகுதியில், இந்திய மீனவர்களின் மீன்பிடி உரிமையை நிலைநிறுத்த வேண்டும். கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற கோரிக்கைகள் இடம் பெறும்
மேலும், மின் வாரியம், பாசனம், சர்வ சிக்சா அபியான் திட்டம் உட்பட பல்வேறு திட்டங்களில், தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிதியை உடனே வழங்க வேண்டும். தமிழக ரயில்வே திட்டங்களுக்கு, நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது உட்பட, 1.50 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு, முதல்வர் நிதியுதவி கோர உள்ளார்
அரசு கேபிள், 'டிவி' டிஜிட்டல் ஒளிபரப்புக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் முதல்வர் வலியுறுத்த உள்ளார்.இவ்வாறு அதிகாரிகள்தெரிவித்தனர்.
மின் வாரியத்துக்குரூ.6,000 கோடி: தமிழ்நாடு மின் வாரியம், கடந்த நிதியாண்டில், வருவாய் இழப்பை சமாளிக்க, மத்திய அரசின், 'பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன்' நிறுவனத்திடம் இருந்து, 3,000 கோடி ரூபாய் கடன் கேட்டது. இதை நீண்ட காலகடனாக தர சம்மதித்த நிறுவனம், திடீரென மறுத்து விட்டது.

இதேபோல், மத்திய அரசின், 'ரூரல் எலக்ட்ரி பிகேஷன்' நிறுவனத்திடமும், மின் வாரியம், 3,000 கோடி ரூபாய் கடன் கேட்டது. அந்த நிறுவனமும் மறுத்து விட்டது. இந்நிலை யில், முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடியிடம், இந்த கடனுதவியை வழங்க வலியுறுத்த உள்ளார். இதனால், மின் வாரியம் கேட்ட, 6,000 கோடி ரூபாய்

Advertisement

கடன் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது.
காவிரி - -வைகை இணைப்புபிரதமரிடம் பேச திட்டம் :தாமிரபரணி - -கருமேனியாறு - -நம்பியாறு; காவிரி -வைகை- - குண்டாறு உள்ளிட்ட நதிகளை இணைக்க, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதில், தாமிரபரணி -- கருமேனியாறு - -நம்பியாறு, இணைப்பு திட்டப் பணி, நான்கு கட்டங்களாக, 369 கோடி ரூபாய் செலவில் நடந்து வருகிறது. இந்த செலவை, மாநில அரசே மேற்கொண்டுள்ளது. காவிரி - -வைகை- - குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு, மத்திய அரசு நிதி ஒதுக்க மறுத்து விட்டது.

டில்லியில், மோடியை சந்திக்கும் ஜெயலலிதா, இந்த திட்டத்தை, விரைந்து செயல்படுத்தும் படியும், நிதி ஒதுக்கும்படியும் வலியுறுத்த உள்ளார். இந்த சந்திப்புக்கு பின், காவிரி - -வைகை- - குண்டாறு இணைப்பு திட்ட அறிக்கையை, மத்திய நீர்வளத் துறையிடம் தாக்கல் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.


- நமது நிருபர் -

Advertisement

வாசகர் கருத்து (80)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
13-ஜூன்-201609:47:44 IST Report Abuse

SIVA. THIYAGARAJANகடை தேங்காயை எடுத்து வழி பிள்ளையாருக்கு உடைக்கிரயா? என்று ஓர் பழமொழி சொல்லுவாங்களே..................>>>>>>>>>>

Rate this:
Harinathan Krishnanandam - Chennai,இந்தியா
12-ஜூன்-201617:48:13 IST Report Abuse

Harinathan Krishnanandamமத்திய அரசு பணம் திட்டங்களுக்கும் மாநில அரசு பணம் மக்கள் நல இலவச திட்டங்களுக்கும் என்று பிரித்து நிதி நிர்வாகம் செய்ய முடிவு எடுத்தது போல தெரிகிறது

Rate this:
Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா
12-ஜூன்-201601:39:20 IST Report Abuse

Panneerselvam Chinnasamyகேட்டதும் மத்ய அரசு தூக்கி கொடுக்கப்போறதில்லை. இது அம்மையார் ஜெயலலிதாவிற்கும் தெரியும். எதற்காக நண்பர்களே வீணாக இப்படி அடித்துக்கொள்ளுகிறீர்கள். அவர்கள் காவிரியில் தண்ணீர்வராத காலத்திலேயே டில்லிக்கு ஒரு கடிதம் போடுவார்கள் மின்சார தட்டுப்பாடென்றாலும் ஒரு கடிதம் தட்டிவிடுவார்கள். ஆனால் இப்பொழுது டில்லிக்கு காவடி தூக்க வேண்டிய அவசியம் என்ன? தமிழக மக்கள் நன்மைக்கு 1.6 லட்சம் cash கேட்டு டெல்லி செல்கிறார்களா இல்லை case விசயமாக டில்லி செல்கிறார்கள?எனக்கும் தெரியாது.உங்களுக்கும் தெரியாது.இதற்கும் சிபிஐ மூலம்தான் உண்மையை கண்டுபிடிக்க முடியும்.. .

Rate this:
மேலும் 77 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X