சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பாலியல் 'டார்ச்சர்'வேன் டிரைவர் கைது

Added : ஜூன் 11, 2016
Advertisement

வேலுார்:திருவண்ணாமலை ராமலிங்கனார் தெருவைச் சேர்ந்தவர் கவுரி, 34. இவருக்கு திருமணமாகி, மூன்று மகள்கள் இருக்கின்றனர். குடும்பத் தகராறு காரணமாக, மூன்று ஆண்டுகளுக்கு முன், கவுரி தன் கணவர் மற்றும் மகள்களை விட்டு, தனியாக பிரிந்து சென்று விட்டதாக தெரிகிறது.இந்நிலையில், கணவனை பிரிந்த கவுரிக்கும், வேன் டிரைவர் ராஜேஷ், 34, என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாகவும், பின் அவர்கள் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களாக, கவுரியின் மகள்களுக்கு, ராஜேஷ் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக தெரிகிறது. மேலும், இது பற்றி வெளியில் சொன்னால், கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார்.இது குறித்து, திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. வழக்குப் பதிவு செய்த போலீசார், ராஜேஷை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X