பரதத்துக்காக படிப்பை இழந்தேன் - கலைமாமணி சரளா| Dinamalar

பரதத்துக்காக படிப்பை இழந்தேன் - கலைமாமணி சரளா

Added : ஜூன் 12, 2016
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
பரதத்துக்காக படிப்பை இழந்தேன் - கலைமாமணி சரளா

நடனத்துக்காகவே படிப்பை இழந்து, பின்னர் பகுதி நேரமாக படித்து, இன்று 'கலைமாமணி' பட்டத்தோடு மாணவர்களுக்கு நடனக்கலையை கற்று கொடுக்கிறார் நடிகையும், ஆசிரியையுமான காரைக்குடி எம்.எஸ்.சரளா.எட்டு வயதில் 'குழந்தைகள் கண்ட குடியரசு' என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். நடன நடிகையாக 14 வயதில் சினிமாவில் நுழைந்தார். காவல் தெய்வம், திருமால் பெருமை, சிரித்தமுகம், தேனும் பாலும்,டீச்சரம்மா என பல்வேறு படங்களில் நடித்தவர். மலையாளம், தெலுங்கு படங்களில் நடனமாடியவர்.தற்போது காரைக்குடி அழகப்பா பல்கலையின் நுண்கலை மைய பொறுப்பாளராக இருந்து, மாணவர்களுக்கு நடனக்கலை, வாய்ப்பாட்டுஉள்ளிட்ட பல்வேறு கலைகளையும் கற்று கொடுக்கிறார்.அவர் நம்மிடம் பேசியதிலிருந்து...தஞ்சை, டி.கே.ராஜலட்சுமியிடம் ஐந்து வயதில் நடனம் கற்று, 7 வயதில் கிருபானந்த வாரியார் தலைமையில் அரங்கேற்றம் நடத்தினேன். 14 வயதில் சிவாஜிகணேசன் தலைமையில் இரண்டாவது அரங்கேற்றம். கே.ஜே.சரசா, பத்மா சுப்பிரமணியம் ஆகியோரிடம் 10 ஆண்டு நடனம் கற்று, முதல் தர மாணவி என்ற சான்றிதழை பெற்றேன். நடனம் கற்று கொள்ள ஆரம்பித்ததால், 8-ம் வகுப்பு வரை மட்டுமே பள்ளியில் சென்று படிக்க முடிந்தது. அதன்பிறகு தொலை நிலை கல்வியில் பயின்று முனைவர் பட்டம் பெற்றேன்.14-வயதில் தனி நடனம் மூலம் சினிமாவில் நுழையும் வாய்ப்பு கிடைத்தது. நடனத்தை தனி படிப்பாக படிக்க வேண்டும் என்ற ஆர்வம் என்னை சினிமா துறையிலிருந்து விலக வைத்தது. சினிமா ஒரு அனுபவம். ஜெமினி கணேசன் என்னை டூப்ளிகேட் ராஜ சுலோச்சனா என்று சொல்வார்.1995ல் காரைக்குடியில் கலைக்கோயில் நாட்டியப்பள்ளி ஆரம்பித்து மாணவர்களுக்கு நாட்டியம் சொல்லி கொடுக்க ஆரம்பித்தேன். அதன்பிறகு வீட்டிலேயே அந்த பள்ளி இயங்கிவருகிறது.என்னிடம் பயின்ற மாணவர்கள் உலக அளவில் இசை நாட்டிய பள்ளிகளை நடத்தி வருவது எனக்கு பெருமை.இதுவரை 28 முறை மாணவர்களுக்கு அரங்கேற்றம் நடத்தியுள்ளேன், என்றார்.இவரை வாழ்த்த 94431 53356.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X