இசையின் சிரிப்பு - நித்யஸ்ரீ| Dinamalar

இசையின் சிரிப்பு - நித்யஸ்ரீ

Added : ஜூன் 12, 2016 | கருத்துகள் (2)
இசையின் சிரிப்பு - நித்யஸ்ரீ

காற்றில் கலைந்தாடும் கார்குழலும் இசைக்கும் புல்லாங்குழல், தகதகக்கும் தங்கக் கன்னங்களும் வாசிக்கும் மிருதங்கம், மீனை விழுங்கி விழிகளும் மீட்டும் வீணை, விரலின் விளிம்பில் ஒளிந்திசைக்கும் வயலின்... குரலின் ஈர்ப்பு விசையால் இவர் இழுக்கும் திசையெல்லாம் இசைந்து வரும் இசை... பூக்களின் பூரிப்பாய், இசையின் சிரிப்பாய்... பின்னணி பாடகி நித்யஸ்ரீ பேசிய சங்கீத சிதறல்கள்...
* இசையின் அறிமுகம்...சொந்த ஊர் சென்னை, பிளஸ் 2 படிச்சிருக்கேன். 4 வயதிலேயே பாட்டுப் பாடுவதில் கில்லாடி நான். என் பாடும் திறமையை பார்த்து என் பெற்றோர் 6 வயதில் கர்நாடக சங்கீதம் கத்துக்க அனுப்பினாங்க.
* முதல் இசைப் பயணம்என்னோட அப்பா வெங்கட்ரமணன் 'ஸ்ரீ அன் ஸ்ரீ ராகாஸ்'னு ஒரு மியூசிக் பேண்ட் வைச்சிருக்கார். இந்த பேண்ட்ல தான் நானும் முதன், முதலா பாடினேன். நான் பாடின முதல் பாட்டே 'கல்யாணம் தான் கட்டிகிட்டு ஓடிப் போலாமா...', 'அடுத்து சுட்டும் விழிச்சுடரே' பாட்டு பாடினேன்...' அப்புறம் என்ன வரிசையா பல மேடை கச்சேரிகளில் பாடி கலக்கிட்டேன்ல...
* உங்கள் அடையாளம்ஒரு 'டிவி' பாடல் நிகழ்ச்சியில் பாடுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. அதில் பங்கேற்று வெற்றிகரமாக பல சுற்றுக்கள் முன்னேறினேன். ரசிகர்கள் பலர் பாராட்டு மழை பொழிந்தனர், இசையில் நானும் சாதிக்க முடியும்ங்கிற நம்பிக்கை வந்துச்சு.
* ஒரு நடிகையாக...அய்யோ... நான் ஒன்ணும் அவ்வளவு பெரிய நடிகையெல்லாம் இல்லை. சிலவிளம்பர படங்களில் மட்டும் தான் நடிச்சிருக்கேன். இயக்குனர் ரவிஅரசு தன்னோட 'ஈட்டி' படத்தில் ஹீரோ அதர்வாவுக்கு தங்கையாக நடிக்க, துருதுருன்னு ஒரு பொண்ணு வேணும்னு தேடிக்கிட்டு இருந்தார். அந்த நேரம் எப்படியோ என்னை பார்த்துட்டாரு, தங்கச்சி கேரக்டர்ல நடிக்க வைச்சுட்டாரு.
* நடிப்பு அனுபவம்...அதர்வா, ஸ்ரீதிவ்யா பிரபல நடிகர்கள் நடிக்கும் படத்தில் நான் மட்டும் புதுமுகம். முதல்ல பயமா தான் இருந்துச்சு நடிக்க, நடிக்க தைரியம் வந்திடுச்சு. இயக்குனர் ரொம்ப பொறுமையா நடிக்க சொல்லி கொடுத்தாரு.
* இசையில் சாதித்தது...தேசிய அளவில் ஒரு பாட்டு போட்டி நடந்தது. முழுக்க, முழுக்க இந்தியில் தான் பாட வேண்டும். எனக்கு இந்தி சுத்தமா தெரியாது, கத்துகிட்டு பாடினேன். போட்டியில் பங்கேற்ற 20 ஆயிரம் பேர்ல, நான் 'டாப் 13' இடத்தை பிடித்தேன். பின், இரண்டாம் இடத்தில் வெற்றி பெற்றேன்.
* சினிமாவில் பாடியது...இளையராஜா இசையில் 'அவன் - இவன்' படத்தில் 'ஒரு மலை ஓரம்...'ங்குற பாட்டு பாடியிருக்கேன். பாடல் பதிவுக்கு முன் இளையராஜா வீட்டுக்கு போனது, அவரை பார்த்தது மறக்க முடியாத அனுபவம். 'ஜமாய்' படத்துல 5 பாடல்கள் பாடியிருக்கேன், ஒரு குழந்தைக்கு டப்பிங்கும் கொடுத்திருக்கேன். பின், 'தெரியாம உன்னை காதலிச்சிட்டேன்', 'புதியதோர் உலகம் செய்வோம்', 'மனித காதல் அல்ல' படங்களில் பாடிஉள்ளேன்.
* மதுரை...ரொம்ப பிடிச்ச ஊரு... மதுரை பேச்சு பேச பல முறை முயற்சி செஞ்சிருக்கேன், எப்படியும் பேசிருவோம்ல...
* யார் இசையில், யாருடன்...ரஹ்மான் இசையில் பாட வேண்டும், ஆஷா போன்ஸ்லே மற்றும் தமிழ் சினிமா பின்னணி பாடகர்களுடன் பாட வேண்டும்.
* நடிப்பு தொடருமா...அப்பா ஆசைக்காக நடிச்சேன், அம்மாவுக்கு பாடகியாக இருக்கத் தான் விருப்பம். இசையில் ஆராய்ச்சி படிப்பு படித்து பெரியளவில் சாதிக்கனும். மீண்டும் நடிப்பு... கொஞ்சம் யோசிக்கணும்... venlak64@yahoo.com

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X