பா.ஜ., தேசிய செயற்குழு கூடியது; உ .பி., முதல்வர் வேட்பாளர் இல்லை

Updated : ஜூன் 12, 2016 | Added : ஜூன் 12, 2016 | கருத்துகள் (2)
Share
Advertisement
அலகாபாத்: விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள அலகாபாத்தில் பா.ஜ., தேசிய செயற்குழு கூடியது. அகில இந்திய பா.ஜ., தலைவர் அமித்ஷா குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். உபி., தேர்தல் வியூகம் மற்றும் மோடி அரசின் சாதனை தொடர்பான பிரசாரம் ஆகியன குறித்து விவாதிக்கப்படவுள்ளது. இன்று துவங்கி 2 நாட்கள் நடக்கும் இந்த செயற்குழுவில் பிரதமர் மோடி , மத்திய அமைச்சர்கள் , மூத்த நிர்வாகிகள்
உ .பி., முதல்வர் வேட்பாளர் இல்லை

அலகாபாத்: விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள அலகாபாத்தில் பா.ஜ., தேசிய செயற்குழு கூடியது. அகில இந்திய பா.ஜ., தலைவர் அமித்ஷா குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். உபி., தேர்தல் வியூகம் மற்றும் மோடி அரசின் சாதனை தொடர்பான பிரசாரம் ஆகியன குறித்து விவாதிக்கப்படவுள்ளது. இன்று துவங்கி 2 நாட்கள் நடக்கும் இந்த செயற்குழுவில் பிரதமர் மோடி , மத்திய அமைச்சர்கள் , மூத்த நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

இந்த கூட்டத்தில் அடுத்த ஆண்டில் உ .பி., மாநில சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது எப்படி, முதல்வர் வேட்பாளராக யாரையாவது முன்னிறுத்துவதா ? அல்லது வேண்டாமா என்றும் தீர்மானிக்கப்படவுள்ளது. மேலும் இம்மாநில தேர்தல் பொறுப்பை யாரிடம் ஒப்படைப்பது , மோடி அரசின் சாதனை விளக்க பிரசாரம் ஆகியன விவாதிக்கப்படும்.

பா.ஜ.,வை பொறுத்தவரை சமீபத்தில் நடந்து முடிந்த அசாம், தேர்தலில் பா.ஜ., அமோக வெற்றி பெற வாய்ப்பு இருந்தாலும் முதல்வர் வேட்பாளர் யாரும் அறிவிக்கப்படவில்லை. இது போல் மகாராஷ்ட்டிரா, டில்லி, ஜார்க்கண்ட், ஜம்மு காஷ்மீர் போன்ற மாநிலங்களிலும் இதே முறையே பின்பற்றப்பட்டது. இது போல் உபி.,யில் முதல்வர் வேட்பாளர் பெயர் முன்கூட்டியே அறிவிக்கப்படாது என்றே தெரிகிறது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
balakrishnan - coimbatore,இந்தியா
13-ஜூன்-201608:06:25 IST Report Abuse
balakrishnan வரக்கூடிய தேர்தல்கள் பி.ஜே.பி க்கு ஒரு மிகப்பெரிய சவாலான விஷயம், வெற்றி பெற்றே தீர வேண்டிய நிலையில் இருக்கிறது, இதன் மூலம் உ.பி யில் தங்கள் வெற்றியை தக்க வைக்க முடியும், மேல்சபையில் தங்கள் பலத்தை மேம்படுத்திக்கொள்ள முடியும், மோடி சாதனைகள் ஒன்றும் அடித்தள மக்களுக்கு எந்த வித பிரயோஜனத்தையும் கொடுக்கவில்லை, அவருடைய சாதனைகள் அவர்களுக்கு முதலில் புரியாது, நெருப்பாற்றை நீந்தும் நிலை, காலம் நிறைய இருக்கிறது, மாயாவதியும் சும்மா இருக்க மாட்டார், பொறுத்திருப்போம்
Rate this:
Cancel
Subbu - chennai,இந்தியா
12-ஜூன்-201618:22:58 IST Report Abuse
Subbu தமிழ்நாட்டின் செயல்படாத தமிழிசை போன்றவர்களை தூக்கி எறியவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X