புதுடில்லி: டில்லியில் உள்ள பிரபல ஓட்டல்களில் ஏழை குழந்தைகள் நுழைய விடாமல் தடுத்ததாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
டில்லி கன்னோட் பகுதியை சேர்ந்த சோனாலி . இவரது கணவர் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக இங்கு தெருவோரங்களில் வசிக்கும் குழந்தைகளுக்கு உணவு வழங்க முடிவு செய்தார். இதனையடுத்து அவர் டில்லியில் பிரபல ஓட்டல்களில் ஏழைகளை அழைத்து சென்றார். அங்கு அவர்கள் சாப்பிட நுழைந்ததும் , ஓட்டல் நிர்வாகத்தினர் முகம் சுழித்தனர். தொடர்ந்து அவர்களுக்க உணவு பரிமாற முடியாது என மறுத்து விட்டனர். ஓட்டலை விட்டு வெளியேற்றினர். இது குறித்து பாதிக்கப்பட்டவர்களிடம் தொலைக்காட்சிகள் பேட்டி வாங்கி ஒளிபரப்பியது. ஏழைகள் புறக்கணித்த சம்பவம் குறித்து சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விசாரிக்கபட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என டில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கூறியுள்ளார்.
ஆஸ்பத்திரிகளுக்கு ரூ.600 கோடி அபராதம்: இதற்கிடையில் தனியார் ஆஸ்பத்திரிகளில் ஏழைகளுக்கு சிகிச்சை அளிக்க மறுத்ததாக வந்த புகாரை அடுத்து 5 ஆஸ்பத்திரிகளுக்கு டில்லி அரசு ரூ. 600 கோடி அபராதம் விதித்துள்ளது.
டில்லியில் அரசு நிலத்தை சலுகை விலையில் வாங்கி சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு 43 ஆஸ்பத்திரிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. அவ்வாறு துவங்கப்பட்ட ஆஸ்பத்திரிகளில் 10 சதவீத ஏழைகள் உள்நோயாளிகளாக சேர்க்கப்பட வேண்டும். 25 சதவீதத்தினர் வெளி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். ஆனால்மறுக்கபட்டுள்ளது. இது தொடர்பாக டில்லி சுகாதார துறை அமைச்சகம் 5 ஆஸ்பத்திரிகளுக்கு ரூ.600 கோடி அபராதம் விதித்துள்ளது.
ஆனால் இதனை எதிர்த்து வழக்கு தொடர போவதாக ஆஸ்பத்திரி தரப்பு வக்கீல்கள் தெரிவித்துள்ளனர்.