சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தூத்துக்குடியில் மகனை சங்கிலியால் கட்டிப்போட்டு துன்புறுத்திய தந்தை * தப்பியவர் குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைப்பு

Added : ஜூன் 12, 2016
Advertisement

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை இந்திரா நகர் பகுதியில் மகனை சங்கிலியால் வீட்டில் கட்டிப்போட்டு துன்புறுத்திய தந்தை. தப்பி வந்தவரை ரயில்வே போலீசார் குழந்தைகள் நலக்காப்பகத்தில் ஒப்படைத்தனர். தூத்துக்குடி ரயில் நிலையத்தில் ரயில் ஒன்று நேற்று காலை நின்று கொண்டிருந்தது.அதில் ரயில்வே போலீசார் வழக்கம் போல் சோதனை நடத்தினர். இதில் ஒரு பெட்டியில் சிறு வயது பையன் படுத்திருந்தான். அவனைப்பிடித்து ரயில்வே போலீசார் விசாரனை செய்தனர். இதில் தெரியவந்ததாவது: தூத்துக்குடி அருகேயுள்ள புதுக்கோட்டை இந்திரா நகரை சேர்ந்தவர் ஜோசப்- மேரி தம்பதியரின் மகன் சாமுவேல்,16, என தெரியவந்தது. இவர் மெஞ்ஞானபுரத்தில் உள்ள பள்ளியில், விடுதியில் தங்கி 10 ம் வகுப்பு படித்துள்ளார். இதில் இவர் தேர்வில் 391 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். கணிதப்பாடத்தில் மட்டும் 12 மதிப்பெண்கள் பெற்று தேர்வில் தோல்வியடைந்துள்ளார். இந் நிலையில் சாமுவேலுக்கு பேய் பிடித்து விட்டது, என அவரது தந்தை ஜோசப் கடந்த இரு மாதங்களாக வீட்டில் காலில் சங்கிலியால் கட்டிப்போட்டுள்ளார். தினமும் அவரை அடித்து துன்புறுத்தியுள்ளார். சமயம் பார்த்த சாமுவேல் கல்லால் காலில் இருந்த சங்கிலியை உடைத்து வீட்டிலிருந்து தப்பியுள்ளார். மீண்டும் தந்தையிடம் சிக்கிவிடக்கூடாது என்பதற்காக ரயில் பெட்டியில் வந்து படுத்திருந்ததாக தெரியவந்தது. ரயில்வே போலீசார் குழந்தைகள் பாதுகாப்பு தொலைபேசியான 1098 ல் புகார் செய்தனர். குழந்தைகள் நலப்பாதுகாப்பு அதிகாரிகள் சாமுவேலை குழந்தைகள் நலக்காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர். மகனை தந்தையே சங்கிலியால் கட்டிப்போட்டு துன்புறுத்திய சம்பவம் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ----

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X